Published:Updated:

இன்பாக்ஸ்

சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

மலையாளத்தில் ஹிட்டான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்து வருகிறார், சிரஞ்சீவி.

இன்பாக்ஸ்

மலையாளத்தில் ஹிட்டான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்து வருகிறார், சிரஞ்சீவி.

Published:Updated:
சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

அமலா பாலின் சகோதரர் அபிஜித் பாலுக்குக் கொச்சியில் திருமணம் நடந்தது. வணிகக் கப்பலில் பணிபுரியும் அபிஜித் பாலுக்கும் அல்கா குரியனுக்கும் நடந்த இந்தத் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். அபிஜித் பால் சில படங்களில் சிறு வேடங்களில் தலைகாட்டியுள்ளார். சகோதரர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமலா பால் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ‘கொரோனா காலத்தில் குத்தாட்டம் தேவையா’ என்று நெட்டிசன்கள் கமென்ட் அடிக்கின்றனர். மகிழ்ச்சியை ஷேர் செய்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இந்தியக் கால்பந்து அணியின் கோல் கீப்பர் அமரீந்தர் சிங். பஞ்சாப் முதல்வராக இருந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார் கேப்டன் அமரீந்தர். ட்விட்டரில் அவரைப் பற்றி எழுதும் பலர், அவரை டேக் செய்யாமல் கால்பந்து அமரீந்தரை டேக் செய்கின்றனர். இதனால் நொந்துபோயிருக்கும் கால்பந்து அமரீந்தர், ‘நான் முன்னாள் முதல்வர் இல்லை. என்னை டேக் செய்யாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். டெக்னிக்கல் மிஸ்டேக்!

கொச்சியில் பழங்காலப் பொருள்கள் எனப் போலியாக மியூசியம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் மோன்சன் மாவுங்கல். போலி டாக்டர் எனக் காவல்துறையால் கண்டறியப்பட்ட மோன்சன் மாவுங்கல்லின் பக்கத்து வீட்டில் வசித்துவருகிறார் நடிகர் பாலா. சினிமாவில் பலரை மோன்சனுக்கு அறிமுகப்படுத்தி, மேலும் சில விஷயங்களில் அவருக்குத் துணை நின்றவர் நடிகர் பாலா எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்திருக்கும் பாலா, ‘`சிலர் வேண்டுமென்றே கிளப்பிவிடுகிறார்கள். எனக்கும் மோன்சன் டாக்டருக்கும் ஒரு ரூபாய் பணப் பரிவர்த்தனை இருப்பதாக நிரூபித்தால் நான் நிர்வாணமாக சாலையில் நடக்கத் தயார். இல்லையென்றால் இதைக் கிளப்பி விடுபவர்கள் அதுபோல நடக்கத் தயாரா?’’ என சவால் விடுகிறார். கோவக்காரர்!

இன்பாக்ஸ்

நெல்லை மாநகராட்சி முதியோர் இல்லம், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றில் தங்கியிருப்பவர்களை கிருஷ்ணாபுரம் கோயிலுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றது நெல்லை மாவட்ட நிர்வாகம். சிற்பக் கலைக்குப் பிரசித்திபெற்ற கிருஷ்ணாபுரம் கோயிலுக்குச் சென்றவர்கள், அங்குள்ள கலை வேலைப்பாடுகள் மிகுந்த சிலைகளைப் பார்த்து வியந்தனர். இவர்களில் பலருக்கு வாழ்க்கையில் இதுதான் முதல் சுற்றுலா. நெகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்கள். அன்புதான் அழகு!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கலியராயன்விடுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி கெளரி. சுகாதாரக் கட்டமைப்பில் பின்தங்கியிருக்கும் நாடுகளுக்கு, கொரோனாவைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் உதவி செய்வது குறித்தும், உலகளவில் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் ஐ.நா சபை பொதுச்செயலாளருக்கு கெளரி கடிதம் அனுப்பியிருந்தார். ‘உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. நீங்கள் சொன்ன ஆக்கபூர்வமான கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்று கெளரிக்கு ஐ.நா சபையிலிருந்து பதில் அனுப்பியுள்ளனர். ஐ.நா பாராட்டால் கௌரி நெகிழ்ந்துபோயிருக்கிறார். நல்ல மனசு!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் கொரோனாத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட நல்லாசிரியை வசந்தா சித்திரவேல், தடுப்பூசி போட்டுக் கொண்ட 350 பெண்களுக்கும் சேலைகளை அன்பளிப்பாக வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். சேலை பெறுவதற்காகவே சிலர் ஊசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆசிரியையின் இச்செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல!

இன்பாக்ஸ்

தஞ்சாவூரில் இயங்கும் இந்திய உணவுப்பதனத் தொழில்நுட்பக் கழகம், தேங்காய் நீரைச் சுத்தப்படுத்தி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நவீனக் கருவியை ரூ.7 லட்சம் செலவில் தயாரித்துள்ளது. கோயில்களில் உடைக்கப்படும் தேங்காய் நீர் வீணாவதை இது தடுக்கும். இதை மத்திய உணவுப் பதப்படுத்தல் துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். தேங்காய்த் தண்ணீர் இந்த மெஷினுக்குள் செல்வதுபோல் கோயிலில் தேங்காய் உடைக்கப்படுகிறது. பின்னர் நீர் சுத்தமாகி, குளிர்ந்த நீராக வெளியே வருகிறது. அந்தத் தேங்காய் நீர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக இங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக அறிவியல்!

இன்பாக்ஸ்

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி சிக்கலில் தவிக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்திலும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டது. கட்சி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். எப்படியோ சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் கல்லூரிகள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அசோக் கெலாட்டும் தனது பங்கிற்கு மோடியைப் புகழ்ந்துள்ளார். போகிற போக்கைப் பார்த்தால் அசோக் கெலாட்டை பா.ஜ.க அபகரித்துக்கொள்ளுமோ என்ற அச்சத்தில் காங்கிரஸ் இருக்கிறது. இதனால், ‘இப்போதைக்கு நம் பதவிக்கு ஆபத்து இல்லை’ என அசோக் கெலாட் நிம்மதியில் இருக்கிறார். சிக்கல் இருந்தாதான் காங்கிரஸ்!

நெல்லை மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அடங்கிய வாட்ஸ்அப் குழு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகள், மின்தடை உள்ளிட்ட விவரங்களை அந்தக் குழுவில் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்வு காணப்படும். குழுவின் செயல்பாடுகளை பற்றிக் கேள்விப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த வாட்ஸ்அப் குழுவில் தன்னையும் இணைக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு சேர்ந்துகொண்டார். அமைச்சரே குழுவில் இருப்பதால் மின்வாரியத் துறையின் பணிகளில் இன்னும் வேகம் இருக்கும் என்பதால் அமைச்சருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ஷாக் அடிக்காமல் இருந்தால் சரி!

இன்பாக்ஸ்

மலையாளத்தில் ஹிட்டான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தில் நடித்து வருகிறார், சிரஞ்சீவி. இதனைத் தொடர்ந்து, ‘வேதாளம்’ ரீமேக்கில் நடிக்கிறார். ‘போலா ஷங்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகிய நிலையில், ஸ்ருதிஹாசன் நடித்த கேரக்டருக்குத் தமன்னாவை அணுகியிருக்கிறார்கள். சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆலுமாலு டோலுமாலு...