Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதில், நயன்தாரா - கீர்த்தி சுரேஷுக்கான பகுதிகள் எடுக்கப்படும் என்கிறார்கள்.

இன்பாக்ஸ்

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதில், நயன்தாரா - கீர்த்தி சுரேஷுக்கான பகுதிகள் எடுக்கப்படும் என்கிறார்கள்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

* பிக் பாஸ் போலவே நூறு நாள் அக்ரிமென்ட் ஒன்றில் கையெழுத்து போட்டுள்ளார் ரோபோ சங்கரின் மகள் ‘பாண்டியம்மாள்’ இந்திரஜா. அதாவது நூறு நாள்களில், ஐம்பது கிலோ உடல் எடையைக் குறைக்கிற திட்டமாம். ஜிம் ஒன்றுடன் இணைந்து இந்த முயற்சியில் இறங்கியிருப்பவர், அதற்காக தினமும் அதிகாலையில் ஒர்க் அவுட் செய்வதுடன், அந்த வீடியோக்களை சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்துவருகிறார். இந்த சேலஞ்சில் பாண்டியம்மாளுடன் சின்னத்திரை நடிகர் நவீந்தரும் இணைந்துள்ளார். அவரது இலக்கு சிக்ஸ் பேக்காம்.. ஆல் தி பெஸ்ட்!

* சூப்பர் சீனியர் கிரிக்கெட்டர்கள் என்றாலே ஏதேனும் பேசி சர்ச்சையில் சிக்கிவிடுவார்கள். பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கோலி அவுட்டானதும், கமென்ட்டரியில் இருந்த சுனில் கவாஸ்கர், “லாக்டௌன் காலத்தில், கோலி அனுஷ்கா ஷர்மாவுடன் மட்டும்தான் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டதாக நான் வீடியோக்கள் பார்த்தேன். ஆனால், அது போதுமானதாக இல்லை’’ என நக்கலடித்தது சர்ச்சையாகியிருக்கிறது. “2020-ம் ஆண்டிலும், என் பெயரை வைத்து நக்கல் செய்யும் விஷமம் தொடர்வது வேதனையளிக்கிறது. என் பெயரை இழுக்காமல், உங்களால் ஒரு விமர்சனம்கூட செய்யமுடியாதா” என வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. ஆளும் வளரணும் பண்பும் வளரணும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதில், நயன்தாரா - கீர்த்தி சுரேஷுக்கான பகுதிகள் எடுக்கப்படும் என்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளத் தாமதமாகுமாாம். அதனால் அவர் வருவதற்குள் மற்ற பகுதிகளை எடுத்துவிடத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் சிவா. குஷ்பூ ஷூட்டிங் எப்போ பாஸ்!

* இனவெறிப் புகாரில் சிக்கியிருக்கிறது ட்விட்டர். கறுப்பு நிறத்தில் ஒரு படம், வெள்ளை நிறத்தில் ஒரு படம் என ட்விட்டரில் இரண்டையும் அப்லோடு செய்தால், அது வெள்ளை நிறப் படங்களுக்குத்தான் முன்னுரிமை தருகிறதாம். ஆராய்ச்சி மாணவர் ஒருவர் இதைக் கண்டுபிடித்து ட்விட்டரிலேயே அம்பலப்படுத்த, அடுத்தடுத்து பலரும் திட்டமிட்டு இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ட்விட்டரை சோதித்தனர். மனிதர்களைக் கடந்து மிருகங்களிலும், வெள்ளை நிறத்துக்கு மட்டுமே ட்விட்டர் முன்னுரிமை கொடுத்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ட்விட்டர் தற்போது இந்தச் செயலுக்கு மன்னிப்பு கோரியிருக்கிறது. என்ன ட்விட்டர் இதெல்லாம்?

இன்பாக்ஸ்

* கான் கோலன், ஆன்ட்ரூ பாய்ட் என்ற இரு கலைஞர்கள் இணைந்து டிஜிட்டல் கடிகாரம் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள். நியூ யார்க் மாகாணத்தில் அகண்ட திரையில் காட்சியளிக்கும் இந்த கடிகாரம் தான் சமீபத்திய வைரல். கடந்த திங்கள் கிழமை 01:30 மணிக்கு இதன் கவுன்டவுன் 7 வருடங்கள், 101 நாள்கள், 17 நிமிடங்கள், 22 நிமிடங்கள் மற்றும் 22 நொடிகள் என்று காட்டியது. ஒவ்வொரு நாளும் நாம் இதே அளவு கரியமில வாயுவை வெளியிட்டுக்கொண்டே இருந்தால், இந்தக் கடிகாரம் ஓடி நிற்கும்போது, இன்னும் காட்டுத்தீ, வெள்ளம், போன்ற பேரிடர்கள் அதிகப்படியான அளவில் நிகழும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 7 வருஷம்தான் இருக்கு பாஸ்!

இன்பாக்ஸ்

* டைம் பத்திரிகை 2020-ம் ஆண்டுக்கான ஆளுமைமிக்க 100 தலைவர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் மோடியும் ஒருவர் என பாஜகவினர் மார்தட்டிப் பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அதிலொரு ட்விஸ்ட். பட்டியலில் மோடி இருக்கிறார் என்பது உண்மைதான். பல்வேறு மதங்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாக எழுபது ஆண்டுகளாக இருக்கும் இந்தியாவின் பன்முகத்தன்மையை மோடி முடிவுக்குக் கொண்டுவந்துவிடுவார் என அச்சம் தெரிவிக்கிறது அக்குறிப்பு. இந்தியாவின் பிரதமர்கள் இந்துக்கள்தான் என்றாலும், இந்து மதக் கட்சியான பாரதிய ஜனதா செய்ததுபோல், சிறுபான்மையினர்களை எந்தப் பிரதமரும் ஒடுக்கியதில்லை எனவும் பதிவு செய்திருக்்கிறது டைம் இதழ். வஞ்சப்புகழ்ச்சியா அப்ப!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism