Published:Updated:

இன்பாக்ஸ்

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா

இந்தியாவில் வாழும் யானை களுக்கு பெரும்பாலும் தலையில் முடி இருக்காது, அப்படியே இருந் தாலும், மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால்...

இன்பாக்ஸ்

இந்தியாவில் வாழும் யானை களுக்கு பெரும்பாலும் தலையில் முடி இருக்காது, அப்படியே இருந் தாலும், மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால்...

Published:Updated:
சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா
விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

பறந்து பறந்து பல மொழிகளிலும் நடித்துவரும் விஜய்சேதுபதி, கதாநாயகனாக ஐம்பதாவது படத்தை நெருங்குகிறார். ‘தென்மேற்கு பருவக்காற்று' மூலம் தன்னை நாயகனாக்கிய இயக்குநர் சீனுராமசாமியே, தனது ஐம்பதாவது படத்தை இயக்க வேண்டும் என சேது விரும்புகிறார். அவரது 25-வது படமான ‘சீதக்காதி' சரியான வசூலை ஈட்டாவிட்டாலும்கூட அவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. 50வது படமும் பெயர் சொல்வதாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார். குருபக்தி!

மகன்கள் இரண்டு பேர், உதவி இயக்குநர்கள், தன் நண்பர் சுப்பிரமணிய சிவா என்று பெரிய டீமுடன் இப்போது தனுஷ் வெளியே செல்கிறார். நட்சத்திர ஹோட்டலுக்கும் பெரும் படை மாதிரி போய் சாப்பிட்டுவிட்டு டிஸ்கஷன் செய்கிறார்கள். கதை விவாதங்களில் யாத்ரா தீவீரமாகக் கலந்துகொள்வது இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் யாத்ரா சினிமாவிற்குள் வரப்போவது நடக்கப்போகிறது. மூன்றாவது தலைமுறையும் உதயம்!

விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர், மகாராஷ்டிர மாநில கடற்கரை நகரமான அலிபாக்கில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். ரூ.19.24 கோடி கொடுத்து இந்தப் பண்ணை வீட்டை முடித்திருக்கிறார் கோலி. பத்திரப்பதிவுக் கட்டணம் மட்டுமே ரூ.1.15 கோடி கொடுத்திருக்கிறார். அலிபாக்கில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்குப் பண்ணை வீடு இருக்கிறது.

சமந்தா
சமந்தா

சமந்தாவின் பல்லாவரம் வீட்டைப் புதுப்பித்து பங்களாவாக மாற்றம் செய்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை வந்து வேலைகளை மேற்பார்வையிடுகிறார் சாம். இனி படப்பிடிப்பு இல்லாத நாள்களில் சென்னைக்கு வந்து தங்கப்போகிறார். மறுபடியும் தமிழ் சினிமாவில் நடிக்கப்போவதற்கான நடவடிக்கையாக இதைப் பார்க்கிறார்கள். தயாரிப்பிலும் அவர் இறங்கப்போவதாகச் சொல்கிறார்கள். வெல்கம் பேக்!

இன்பாக்ஸ்

பாகிஸ்தானிலிருந்து வரும் எந்தச் செய்தியும் நல்லவிதமாய் இல்லை. ஆட்சி மாற்றம், இம்ரான் கான் மீது அடுக்கடுக்கான புகார்கள் என்பதையெல்லாம் மீறி மழை பாகிஸ்தானை மூழ்கடித்துவருகிறது. பாகிஸ்தானின் தேசிய சராசரி மழைப்பொழிவைவிட மூன்று மடங்கு கொட்டியிருக்கிறது. சிந்து மாகாணத்திலோ, ஐந்து மடங்கு மழை. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பாகிஸ்தான் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது என செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியிடுகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் மடிந்திருக்கிறார்கள். பாதிப்புகளிலிருந்து பாகிஸ்தான் மீள்வதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்கிறார்கள். ‘எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது மூதுரை. ஆனால், இப்போது பெய்துகொண்டிருப்பது பூமி வெப்படைந்து கொண்டிருப்பதால். தெற்கு ஆசியா முழுக்கவே இப்படியான அசம்பாவிதங்கள் இனி அடிக்கடி நிகழும் என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். மீண்டு வரட்டும்!

இன்பாக்ஸ்

ரஜினியுடன் ‘அண்ணாத்த'வில் நயன், குஷ்பு, மீனா என இன்னாள், முன்னாள் ஹீரோயின்கள் பலர் இருந்தனர். அதைப்போல, ‘ஜெயிலர்' படத்திலும் கதாநாயகிகள் பலர் இணையப்போகிறார்கள். படத்தில் ரம்யா கிருஷ்ணன்தான் மெயின் ரோல் என்றும், தமன்னா கெஸ்ட் ரோல் அளவுதான் வந்து செல்வார் என்றும் பேச்சு இருக்கிறது. இதுதவிர, சதா, சுனைனா உட்பட சிலரும் படத்திற்குள் வருவார்கள் என்கிறார்கள். கலர்ஃபுல் ஜெயிலர்!

இன்பாக்ஸ்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உருவாகும் விநாயகர் சிலைகள் அனைத்தும் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். ஆனால் கரைக்க வேண்டிய அவசியமே இல்லையெனக் கூறி விநாயகர் சிலை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காய்கனி சிற்பக்கலைஞர் இளஞ்செழியன். அனைவரும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை ஊர்வலம் எடுத்துச் சென்றுகொண்டிருந்த வேளையில், 200 கிலோ ஐஸ் கட்டியில் மரம் அறுக்கும் மெஷின் மூலம் அரை மணி நேரத்தில் விநாயகர் சிலை செய்து காட்டினார் இவர். கரைக்க வேண்டிய அவசியமே இல்லாமல் உருகிக்கொண்டிருந்த விநாயகர் சிலையை தேனி மக்கள் உருகி உருகி வேண்டிக்கொண்டனர். ஐஸ் பிள்ளையார்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள பாப்கட் செங்கமலம் யானை, விநாயகர் சதுர்த்தி அன்று கூடுதல் மேக்கப்பில் இருந்ததை பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் வாழும் யானை களுக்கு பெரும்பாலும் தலையில் முடி இருக்காது, அப்படியே இருந் தாலும், மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால், செங்கமலம் தலை நிறைய அடர்த்தியான நீண்ட கூந்தலுடன் இருப்பதால், தினமும் இரண்டு வேளை குளிப்பாட்டி, தலைமுடியை வெயிலில் காய வைத்து, சீவி அலங்கரிக்க இதன் பாகன் ராஜா நீண்்ட நேரம் செலவிடுகிறார். இந்த அலங்காரத்தை விரும்பும் செங்கமலம் எந்தவித சேட்டையும் செய்யாமல், ஆடாமல் அசையாமல் ஒத்துழைப்பு கொடுப்பதைக் கண்டு மக்கள் ஆச்சர்யப்படுவதுண்டு. விநாயகர் சதுர்த்தி அன்று பாப்கட் செங்கமலம் கூடுதல் மேக்கப்பில் தோற்றமளித்தது, மன்னார்குடி மக்களிடையே பேசுபொருளானது.

இன்பாக்ஸ்

திலீப்பைத் திருமணம் செய்தபிறகு காவ்யா மாதவன் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார். சமூக வலை தளங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ காவ்யா தன்னை வெளிக்காட்டிக் கொண்டது இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இப்போது பகிர்ந்த புகைப்படம், சோஷியல் மீடியாவில் வைரல். 2019-ல் குழந்தை பிறந்த பிறகு சற்று குண்டாகிப்போன காவ்யா இப்போது மெலிந்திருக்கிறார். காவ்யா மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.

அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்ட கருணாஸ், இப்போது கைவசம் ஐந்து படங்கள் வைத்திருக்கிறார். காமெடியை ஒதுக்கி வைத்துவிட்டு முழுநேர குணசித்திர நடிகராக வலம் வர முடிவெடுத்துவிட்டார். கடந்த மூன்றாண்டுகளாக கொரோனா சூழல் காரணமாக வெளிநாடு எங்கும் பறக்காதவர், இப்போது மலேசியா, மொரீஷியஸ் என ஃபேமிலி ட்ரிப் அடித்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

இயற்கையின் கொடையாக விளங்கும் மருத மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. நெல்லை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் வளர்ந்து நின்ற மரங்களைத் தேவைகளுக்காக வெட்டி வீழ்த்திவிட்டதால் இப்போது இந்த மரங்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. சேரன்மகாதேவி நகரிலிருந்து முக்கூடல் சாலைக்குச் செல்லும் வழியின் இருபுறமும் வரிசைகட்டி நிற்கின்றன மருத மரங்கள். வயல்வெளிகள் சூழ்ந்த பசுமையான பகுதியில், சூரிய ஒளி சாலையில் விழாத அளவுக்குக் குடைபிடித்ததுபோல நிற்கும் இந்த மரங்களைப் பார்க்கவும், மரங்களுடன் செல்ஃபி எடுக்கவும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.