சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

ரஜிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜிஷா

மலையாளப்படமான ‘ஜூன்’ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரஜிஷாதான் ‘கர்ணன்’ படத்தில் தனுஷுடன் நடித்துவருகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த `சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் ரீமேக்கை எடுக்கவிருப்பதாக, பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனால், அதற்குப்பின் அந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வராமல் இருந்தது. தற்போது, அந்தப் படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், மனோஜ் இயக்கும் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டில் இயக்குநர் ராமும் வொர்க் பண்ணியிருக்கிறாராம். ஏற்கெனவே இயக்குநர் ராம் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியிருக்கும் நிலையில், விரைவில் ராம் - சிம்பு கூட்டணியில் ஒரு படமும் உருவாகும் என்கிறார்கள். மன்மதன் - 2?

இன்பாக்ஸ்

ல்லாம் நியூ நார்மல் என மாறிவிட்டாலும், திரையரங்கின் வாசல்களில் மட்டும் கொரோனா இன்னும் குச்சியோடு காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்தக் கொரோனாவையே லெப்ட்டில் டீல் செய்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். ‘டெனெட்’ படத்தை இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் எனப் பலரும் எச்சரிக்க, ஒரு கட்டத்துக்குமேல் பொறுமையிழந்த நோலன் படத்தை ரிலீஸ் செய்தார். சீனா அமெரிக்காவிலும் இப்போது படம் வெளியாகியிருப்பதால், 200 மில்லியன் அமெரிக்க டாலரை படம் ஈட்டிவிட்டது என்கிறார்கள். திருட்டு பிரின்டுகள் டோரன்டில் கொட்டிக்கிடக்கின்றன என்றாலும், இந்தியாவில் வெளியாகும் வரை பார்க்க மாட்டோம் என கண்ணியம் காத்துவருகிறார்கள் நோலனின் இந்திய ரசிகர்கள். ஓரளவுக்குத்தான் பொறுமை!

‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி, மலையாளத்தில் ஹிட்டான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கவிருக்கிறார். இதில் சிரஞ்சீவிக்குத் தங்கையாக அதாவது, தமிழில் லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். இதனிடையே சமூகவலைதளங்களில் இப்போதெல்லாம் அதிகமாகவே தென்படுகிறார் சிரஞ்சீவி. புதிய கெட்டப் என டிரிம் மீசை, மொட்டை என ஆளே மொத்தமாய் மாறிப்போயிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சிரஞ்சீவி பதிவிட்ட புகைப்படத்துக்கு , சிரஞ்சவி மகன் ராம்சரணே, ‘என்னப்பா இது’ என ஷாக் ஆகியிருக்கிறார். தெறிக்க விடலாமாலு?

இன்பாக்ஸ்

லையாளப்படமான ‘ஜூன்’ மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரஜிஷாதான் ‘கர்ணன்’ படத்தில் தனுஷுடன் நடித்துவருகிறார். கொரோனாச் சூழலால் கர்ணன் ஷூட்டிங் தாமதமாகிவருகிறது. அதே சமயம், மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் ரஜிஷா. ‘கோ கோ’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கோ கோ விளையாட்டுப் பயிற்சியாளராகவும், பிளாஷ்பேக்கில் கோ கோ விளையாட்டு வீராங்கனையாகவும் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கப் பயிற்சி செய்துவருகிறாராம் ரஜிஷா. கப்பு முக்கியம் கோ கோ!

இன்பாக்ஸ்

பிஎல்லை எப்படி ஆரம்பிப்பது என இந்தியா யோசித்துக்கொண்டிருந்தபோதே, கரீபியத் தீவில் சிபிஎல்லின் எட்டாவது சீசனை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். வழக்கமாக வெவ்வேறு இடங்களில் நடக்கும் தொடரை இந்த முறை டிரினிடாட் டொபாகோவிலேயே முடித்துக்கொண்டனர். கெய்ரோன் பொல்லார்டு தலைமையிலான டிரின்பேகோ நைட்ரைடர்ஸ் அணி, லீக் சுற்று, பிளே ஆப், என எல்லாற்றிலும் தொடர்ந்து வென்று, கொப்பையைக் கைப்பற்றி அசத்தியது. நடந்துமுடிந்த எட்டுத் தொடர்களில் நான்கு முறை டிரின்பேகோ நைட்ரைடர்ஸ்தான் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது அவங்க ஊரு மும்பைபோல!

இன்பாக்ஸ்

டுத்த இருபதாண்டுகளில் நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி இயற்கையை அதனிடமே மீட்டுக்கொடுப்பது. கிரீன் இந்தியா போன்ற திட்டங்கள் அதன் ஒரு பகுதிதான். ஹைதராபாத்திலிருந்து 20 கிமீ தொலைவிலிருக்கும் கஜிபள்ளி அர்பன் காடுப்பகுதியைத் தத்தெடுத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ். 1,650 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் காட்டினைப் பராமரிக்க முதல் கட்டமாக இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். ஜெய் பாகுபலி!