Published:Updated:

இன்பாக்ஸ்

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

மனிதர்கமனிதர்களின் பெரிய நோய், மறதி. 2017-ம் ஆண்டு நம் எல்லோரையும் ஷாக் அடிக்க வைத்த வைரல்களில் முக்கியமானது Freedom 251ளின் பெரிய நோய், மறதி. 2017-ம் ஆண்டு நம் எல்லோரையும் ஷாக் அடிக்க வைத்த வைரல்களில் முக்கியமானது Freedom 251

இன்பாக்ஸ்

மனிதர்கமனிதர்களின் பெரிய நோய், மறதி. 2017-ம் ஆண்டு நம் எல்லோரையும் ஷாக் அடிக்க வைத்த வைரல்களில் முக்கியமானது Freedom 251ளின் பெரிய நோய், மறதி. 2017-ம் ஆண்டு நம் எல்லோரையும் ஷாக் அடிக்க வைத்த வைரல்களில் முக்கியமானது Freedom 251

Published:Updated:
கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி

செந்நாய்களின் பெரும் கூட்டம் ஒன்று முதல்முறையாக கடந்த ஆண்டு ஊட்டியில் தென்பட்டது. லாக்டௌனில் ஊட்டிக்கு வந்து அங்கேயே முகாமிட்டுள்ள அந்தக் கூட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். ஊட்டி காமராஜ் சாகரில் தண்ணீர் குடிக்க வரும் கடமான்களை அந்தச் செந்நாய்கள் நீரிலும் கரையிலுமாக வந்து சுற்றி வளைத்தன. தப்ப முயன்று தண்ணீரில் நீந்திய கடமான்களோடு செந்நாய்களும் சேர்ந்து நீந்திச் சோர்வடையச் செய்து அவற்றைக் கரையருகில் கொண்டுவந்து சேர்த்தன. நீரில் திணறும் கடமான்களை துள்ளத் துடிக்கக் கரைக்கு இழுத்துவந்து உண்ண ஆரம்பித்து, சற்று நேரத்திலேயே எலும்புக்கூடாக விட்டுச் சென்றன. த்ரில்லர் காட்சியை மிஞ்சும் இந்த வேட்டையைச் சுற்றுலாப்பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வேட்டை கொழிக்கும் காடு!

இன்பாக்ஸ்

மனிதர்களின் பெரிய நோய், மறதி. 2017-ம் ஆண்டு நம் எல்லோரையும் ஷாக் அடிக்க வைத்த வைரல்களில் முக்கியமானது Freedom 251. 'மாயமில்லை மந்திரமில்லை 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்' என ஆளும் அமைச்சர் ஒருவரை வைத்து பிரமாண்டமாக சதுரங்க வேட்டையை ஆரம்பித்தார் மோஹித் கோயல். இந்தியாவில் பலர் போட்டி போட்டிக்கொண்டு 251 ரூபாயை அனுப்பி வைத்தனர். 'ஆசையைத் தூண்டணும்' என்கிற தத்துவத்தின் படி பணத்தை ஈட்டினார் கோயல். இதற்கிடையே துபாய் DRY Fruits என்கிற இன்னொரு நிறுவனத்தையும் நடத்திவந்தார். 200 கோடி உலர்கனி ஊழல், Freedom 251 ஊழல் என ஒட்டுமொத்தமாய் வழக்குகள் குவிய, தற்போது நொய்டா அருகே அவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. சில ஆண்டுகளுக்கு முன்பு பிரமாண்டமாய் ஹைடெக் லுக்கில் காட்சியளித்த மோஹித் கோயலுக்கும், கைதான மோஹித் கோயலுக்கும் எவ்வித அடையாள ஒற்றுமையுமில்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.

மலையாள வில்லன் நடிகர் ஹரீஷ் பேரடி, சமீபத்தில் கேரள அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். ``கல்லூரியில் படிக்கும்போதே உருவிய கத்திகளுக்கு இடையில் நெஞ்சு நிமிர்த்தி நடந்தேன் எனக் கூறும் முதல்வர் பினராயி விஜயன், கொரோனாவைக் கட்டுப்படுத்துவது அதைவிடக் கடினம் என்பதை உணரவேண்டும். தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறந்தாயிற்று. ஆனால், கேரளத்தை சங்கிலியால் பூட்டு போட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அவார்டும் வேண்டாம்; தேங்காய்ப்புண்ணாக்கும் வேண்டாம். குடும்பத்தைக் காப்பாற்றும் உரிமை வேண்டும்'' எனப் பேசிய ஹரீஷ் பேரடிக்கு எதிராகக் கடும் கொதிப்பில் உள்ளார்கள் சி.பி.எம் தொண்டர்கள். பேரடி தந்தது பேரிடி!

இன்பாக்ஸ்

`பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களுக்குமான ஷூட்டிங் செப்டம்பர் ஏழாம் தேதியுடன் முடிவடைகிறது. பல நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிளம்பியவுடன் சோகம் ததும்ப ட்வீட்டுகளை வெளியிட, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவருகிறார் வந்தியத்தேவனான கார்த்தி. மணிரத்னம் படங்களில் பேட்ச் வொர்க் போன்ற விஷயங்கள் எல்லாம் அறவே கிடையாதாம். எடுக்க வேண்டிய காட்சிகளை கச்சிதமாய் எடுத்துவிட்டே ஷூட்டிங்கை முடிப்பார்களாம். ஆனால், இது மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால், இப்போதுவரையில் எந்த நடிகரும் தங்கள் லுக்கை மாற்றவில்லை. காத்திருக்கிறோம் நாங்கள்!

தமிழக அரசியலுக்கும் இனோவா காருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அ.தி.மு.க-வினரால் பிரபலமடைந்த இனோவா காரை இப்போது பி.ஜே.பி கையில் எடுத்துள்ளது. `சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கிற மாவட்ட நிர்வாகிகளுக்கு கார் பரிசாக வழங்கப்படும்' எனத் தேர்தலுக்கு முன் எல்.முருகன் அறிவித்திருந்தார். சமீபத்தில் கோவை, ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவர்களுக்கு இனோவா கார் வழங்கப்பட்டது. வீடியோ லீக்ஸ், ஆடியோ ரிலீஸ் என மாநில நிர்வாகிகள் நொந்துபோயிருக்கின்றனர். ஆனால், கோவை பி.ஜே.பி நிர்வாகிகள், `இனோவா காரைப் பார்க்க வாருங்கள்' என்று அழைப்பு விடுத்து ஸ்வீட், செல்பி எனக் கொண்டாடியுள்ளனர். கொஞ்சநஞ்ச மகிழ்ச்சி!

தீவிர பக்திமான் யோகிபாபு, சொந்த ஊரில் தன் குலதெய்வக் கோயிலில்தான் எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார். அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் மூலம் முன்னேற்றம் காண்பதால், தனது இஷ்ட தெய்வமான வாராஹி அம்மனுக்குக் கோயில் கட்ட முடிவுசெய்தார். சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல் நகரம்பேடு கிராமத்தில், கோயில் கட்டுமானப் பணிகளை சமீபத்தில் தொடங்கினார். வேகமாகப் பணிகள் முடிந்து, ஆகஸ்ட் 26-ம் தேதி வெகு விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யோகி பாபு தனது குடும்பத்தினருடன் வந்து வாராஹி அம்மனை பயபக்தியுடன் தரிசித்துவிட்டுச் சென்றார். சர்வம் பக்திமயம்!

இன்பாக்ஸ்

உலகில் அதிகம் கண்காணிக்கப்படும் நகரங்களில் சென்னையும் ஒன்றாம். யார் கண்காணிக்கிறார்கள் என பீதியாக வேண்டாம். எல்லாம் நம் அரசுகள்தான். ஒரு சதுர மைலுக்கு 609.9 கேமராக்களை சென்னை முழுக்கப் பொருத்தியிருக்கிறார்கள். சீனா, அமெரிக்காவின் நகரங்களைவிட சென்னையில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகமாம். உலகிலேயே ஒரு சதுர மைல் பரப்பளவில் அதிக கேமராக்களைப் பொருத்திய சாதனையைப் படைத்திருக்கிறது டெல்லி. 1,826.6 கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள். நம் சென்னைக்கு உலக அளவில் மூன்றாம் இடம் கிடைத்திருக்கிறது. ஓட முடியும், ஒளிய முடியாது..!

அமெரிக்காவில் பிறந்து பின் இந்தியாவுக்கு வந்து சாதியப் பிரச்னைகள், மனித உரிமைகள், பெண்ணுரிமை ஆகியவற்றில் கவனம் செலுத்திய கெயில் ஓம்வெத் சமீபத்தில் மறைந்தார். அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோர் குறித்து நூல்களை எழுதிய கெயில் ஓம்வெத்தின் பல கட்டுரைகளும் நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு செயற்பாட்டாளராகவும் மக்கள் பிரச்னைகளுக்காகக் களம் கண்ட கெயில், தமிழகத்துடனும் நெருக்கமானவர். நிறப்பிரிகை கூட்டம், அம்பேத்கர் நூற்றாண்டு விழா கூட்டங்கள், திண்ணியம் சாதிய வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற கூட்டங்கள் எனத் தமிழகத்தில் பல கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர் கெயில் ஓம்வெத். அஞ்சலிகள்

`வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தாளை அரசு சார்பில் எழுச்சியோடும் உணர்ச்சியோடும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்' என சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதற்கு நன்றி தெரிவித்த வ.உ.சி-யின் கொள்ளுப் பேத்தி செல்வி, “வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒட்டப்பிடாரத்தில் இருந்த குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்தான் முதலில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அந்த நீதிமன்றம் கோவில்பட்டி நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டது. அந்தப் பழைய நீதிமன்றக் கட்டடத்தில் நூலகம் அமைக்க வேண்டும். வ.உ.சியின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்” என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். தியாகத்திற்கு மரியாதை!

அடையாளம் தெரியாத அரசியல்வாதிகள்கூட கோக்குமாக்காக ஏதாவது பேசினால் இந்தியா முழுமையிலும் வைரலாகிவிடலாம். இதைப் புரிந்துவைத்திருக்கிறார் அசாம் பா.ஜ.க அமைச்சரான சந்திரா மோகன் படோவரி. ``கொரோனா வைரஸ் என்பது கடவுளின் சூப்பர் கம்ப்யூட்டரில் உருவான ஒன்று. யார் பாதிக்கப்பட வேண்டும், யார் தப்பிக்க வேண்டும், யார் மரணிக்க வேண்டும் என்பதையெல்லாம் கடவுள்தான் முடிவு செய்கிறார். கடவுள் உருவாக்கியதால்தான் இறப்பு விகிதம் 2% அளவுக்குள் இருக்கிறது'' என்கிற அரிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார் படோவரி. இதெல்லாம் என்ன புதுசா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism