கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

கொரோனாச் சூழலில் சினிமாவே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறது. ஆனாலும், மொபைலில் வீடியோ எடுக்கக் கிளம்பிவிட்டார்கள் இயக்குநர்கள்.

* கொரோனா லாக்டௌனில் ஒவ்வொரு சினிமா பிரபலமும் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். முழுக்கவே ஓய்வு நேரம் என்பதால் குடும்பத்துடன் செலவிடுவது, படங்கள் பார்ப்பது, புத்தகம் படிப்பது என நேரத்தை ஒதுக்கி அசத்துகிறார்கள். சமந்தாவின் லாக்டௌன் ஸ்பெஷல் பூங்காவை கவனித்துக்கொள்வது. தன் வீட்டில் வளர்ந்த கேரட்டுகளை வைத்துக்கொண்டு இந்த வார மெனுவைப் பட்டியலிட்டு ஷாக் கொடுத்தார் சம்மு. கேரட் ப்ரை, கேரட் ஜூஸ், கேரட் பக்கோடா, கேரட் அல்வா, கேரட் சமோசா, கேரட் இட்லி என அசத்துகிறாராம். ஹைடெக் விவசாயி

இன்பாக்ஸ்

* ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மாப்பிள்ளை ஹேமந்த் ரவிக்குச் சொந்தமாக சென்னை, புறநகரில் பிரமாண்டமான திருமண மண்டபங்கள் இருப்பதாகச் செய்திகள் பரவியதில் சித்ரா கடும் அப்செட். செய்தி உண்மைதான். அதேநேரம் மேற்படி திருமண மண்டபங்கள் ஹேமந்த் ரவியின் சகோதரருக்குச் சொந்தமானவையாம். ‘வந்ததும் வராததுமா அண்ணன் தம்பிக்கிடையில கலகமூட்டறான்னு புகுந்த வீட்டுல சொல்றதுக்கா’ என்பதே சித்துவின் கேள்வி வாழ்க்கையே ஒரு சீரியல்!

* கொரோனாச் சூழலில் சினிமாவே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கிறது. ஆனாலும், மொபைலில் வீடியோ எடுக்கக் கிளம்பிவிட்டார்கள் இயக்குநர்கள். இந்த லிஸ்ட்டில் புதிதாக இணைந்திருக்கிறார் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதியை வைத்து கோவிட் குறும்படம் ஒன்று எடுக்கவிருக்கிறாராம். மறுபடியும் முதல்ல இருந்தா?

* உலகின் மிகப் பிரபலமான துப்பறியும் கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸை அனைவருக்கும் தெரியும். இவருக்கு எனோலா ஹோம்ஸ் என்று ஒரு தங்கை இருப்பது தெரியுமா..? 2000-களில் இப்படியான ஒரு கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி ‘தி எனோலா ஹோம்ஸ் மிஸ்டரீஸ்’ புத்தகங்கள் வெளிவந்து ஹிட்டடித்தன. இவற்றை நான்சி ஸ்ப்ரிங்கர் என்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதியிருந்தார். இவற்றை மையமாகக் கொண்டு ‘எனோலா ஹோம்ஸ்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். இந்த மாதம் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ஷெர்லாக் ஹோம்ஸைத் தவறாகச் சித்திரித்துள்ளதாக வழக்கு தொடுத்திருக்கிறது ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை உருவாக்கிய ஆர்தர் கேனன் டோயலின் எஸ்டேட். அப்படியென்ன தவறாகச் சித்திரித்துவிட்டார்கள் எனக் கேட்கிறீர்களா... இந்தப் படத்தில் ஷெர்லாக் கொஞ்சம் அன்பானவராகவும், பெண்களை மதிப்பவராகவும் இருக்கிறாராம். அட பாவிகளா!

இன்பாக்ஸ்

* டி20 கிரிக்கெட் வந்த பிறகு சிக்ஸ் அடிப்பது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இப்படி கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் பந்துகள் ஸ்டேடியத்துக்கு வெளியில் பறப்பதும் உண்டு. அரிதாக இவை வெளியில் இருக்கும் பொருள்களை சேதப்படுத்தும். அயர்லாந்தில் இதுபோன்ற அரிதிலும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அங்கு நடந்துவரும் உள்ளூர் டி20 போட்டியில் ஆடிய அதிரடி ஆட்டக்காரர் கெவின் ஓ ப்ரெய்ன் அடித்த ஒரு பந்து, வெளியில் நின்றுகொண்டிருந்த அவரது சொந்த காரின் கண்ணாடியையே பதம் பார்த்திருக்கிறது. தன் பந்து தன்னைச் சுடும்!

* நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது மனிதர்களைவிடவும் யானைகளுக்கு சாலப் பொருந்தும். பிரிக்கப்பட்டு இடம் பெயர்க்கப்படும் யானைகளால, `யாதோங் கி பாரத்’ பாடமுடியவில்லை என்றாலும் எப்படியாவது ஒன்றுசேரும் தங்கள் இனத்தைக் கண்டுபிடித்துவிடும். ஆப்பிரிக்க யானையான பொரி (39 வயது) பல ஆண்டுகள் கழித்து பெர்லினில் இருந்து ஹல்லே மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டு வரப்பட்டது. 19 வயதான மகள் டனாவைச் சந்திக்க வைக்க ஏற்பாடு நடத்தப்பட்டது. சில மணி நேரத்திலேயே தன் இனத்தைக் கண்டுகொண்ட பாட்டி யானை, இரண்டு குட்டியானைகளை ஆரத் தழுவியிருக்கிறது. இனி வரும் காலங்களில், ‘மிருகங்களுக்கு ஏற்ற குடும்ப முறையில் அவற்றைப் பராமரிக்க விரும்புகிறோம்’ என அறிவித்திருக்கிறது ஹல்லே நிர்வாகம். அடுத்து யானைகளை வச்சு வெப்சீரிஸா?