அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முயற்சியில் பி.ஜே.பி., விஸ்வ இந்து பரிஷத் என எல்லா அமைப்புகளும் தீவிரமாகியுள்ளன. இதற்காக ‘சஹயோக் சமர்ப்பன்’ என்ற பெயரில் 35 இந்துத்வ அமைப்புகள் உத்தரப்பிரதேசம் முழுக்கப் பயணம் போகிறார்கள். மாநிலத்தில் எல்லா வீடுகளிலும் நிதி வசூல் செய்வது திட்டம். வசூலுக்குப் போகும் தொண்டர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கூட்டமாக வாகனங்களில் செல்லக்கூடாது, கோஷம் போடக்கூடாது, யாருக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது’ என்று பல நிபந்தனைகளைப் பட்டியல் போட்டிருக்கிறார்கள். ஹே ராம்!

நாடாளுமன்றத்தில் எப்போது பேசினாலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ட்ரெண்டிங்கில் வந்துவிடுவார். இந்தக் கூட்டத்தொடரிலும் மத்திய அரசை விமர்சனம் செய்த அவர் பேச்சு, வழக்கம்போல் அனல் கிளப்பியது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பற்றி அவர் பேசியது சர்ச்சைக்குரிய விஷயங்கள். இந்தப் பேச்சைத் தொடர்ந்து அவர்மீது உரிமை மீறல் புகார் எழுந்துள்ளது. ‘`பதவியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பக்கூடாது. அப்படிப் பேசியதற்காக மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவியையே பறிக்க முடியும்’’ என்கிறார்கள் பா.ஜ.க-வினர். பறிக்கிறதிலேயே இருங்க..!

சிவகங்கை மாவட்டம் ஏரியூர் கிராமத்தில் உள்ளது ஆகாசப்பாறை. வனத்துறைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்தப் பாறையின் அமைப்பு அனைவரையும் வியக்க வைக்கிறது. சாய்ந்து விழும் அமைப்பில் உள்ள இந்தத் தொங்குபாறை, 300 டன் எடை இருக்கலாம். புயலே வந்தாலும் அசைந்துகொடுக்காததால் ஆகாசப்பாறை என அழைக்கின்றனர். பாறையின் அருகில் நின்று பார்ப்பவர்களுக்கு, ‘பாறை உருண்டு கீழே விழுந்துவிடுமோ’ என்ற அச்சத்தையும் உருவாக்குகிறது இது. அசரவைக்கிற பாறை!

அமெரிக்காவில் தேர்தல் முடிந்துவிட்டாலும், ஒபாமா குடும்பம் இன்னும் பிஸிதான். மிச்சல் ஒபாமா, தனது ‘பிகமிங்’ புத்தகத்தை வைத்து டாக்குமென்டரி ஒன்றை நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டிருந்தார். ஒபாமா அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகைத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை வைத்து சத்துமிகுந்த உணவுகளுக்கான பிரசாரம் மேற்கொண்டார் மிச்சல். தற்போது, சமையல் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஆயத்தமாகி வருகிறார். Waffle, Mochi என்ற இரண்டு பொம்மைகளுக்கு சமையல் கற்றுத் தந்து, அவற்றை சிறந்த செஃப் ஆக்குவதுதான் தொடரின் நோக்கமாம். இதுதவிர, புலம்பெயர்ந்த மக்களின் வலிகளைப் பதிவு செய்த ஒரு நாவலைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்களாம். குக் வித் அதிபர்!

‘எப்படியாவது விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.’ பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லி நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி வைத்து வசூல் செய்பவர்கள்தான் மத்திய அரசிடம் இப்படிக் கெஞ்சுகிறார்கள். விவசாயிகள் போராட்டத்தால் வசூல் தடைப்பட்டதில், ஜனவரி மாதம் வரை சுமார் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். பாதிக்கப்பட்ட 52 சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை தனியாருடையவை. ‘`இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும்’’ என அவர்கள் கேட்பதால், மத்திய அரசு தர்மசங்கடத்தில் உள்ளது. அவங்க பிரச்னை அவங்களுக்கு!

நம்மூரில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைப்போல கேரளாவில் யானைகளுக்குப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும், தெச்சிக்கோட்டுகாவு தேவஸ்தானம் சார்பில் வளர்க்கப்படும் ராமச்சந்திரன் என்ற யானைக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். புகழ்பெற்ற திருச்சூர்பூரம் நிகழ்ச்சியில் யானைகள் கூட்டத்துக்குத் தலைமையேற்பது இந்த 55 வயது யானைதான். 2019-ம் ஆண்டு மதம்பிடித்து மனிதர்கள் மற்றும் யானைகளைத் தாக்கியதால், ராமச்சந்திரனுக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டது. தடையை நீக்க கேரள யானை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தடை நீங்கியுள்ளது. இதனால், ராமச்சந்திரனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..!

டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி பதவி விலகியிருக்கிறார். இந்த வாரம் போர்டு மீட்டிங்கில் பெண் நிர்வாகிகளை ‘சோம்பேறிகள்’ என்ற டோனில் அவர் பேசப் போக, பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்குப் பெண்கள் கண்டனக்குரலை இணையத்தில் பதிவு செய்ய, தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் மோரி! ஏற்கெனவே கொரோனாவால் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இதனால் இன்னும் சிக்கலாகியுள்ளன. இப்பவே இணையத்தில், `ஒலிம்பிக்கை நடத்தலாமா வேண்டாமா’ என ஓட்டெடுப்பு நடத்திவருகிறார்கள் சிலர். ‘கிலி’ம்பிக்!

‘இந்தியன் - 2’ படத்தின் மீதமிருக்கும் படப்பிடிப்பை, ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளனர். சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கும் இயக்குநர் ஷங்கர், சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு கமல் நடிக்கும் காட்சிகளைப் படமாக்குகிறாராம். இதையடுத்து ராம் சரணை ஷங்கர் இயக்குகிறார். இது தெலுங்கு, தமிழ் என இருமொழிப் படம். ராம் சரண் தற்போது ராஜமெளலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடிப்பதால், அவரின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. ஷங்கர் பிஸி!

‘மகாநடி’க்குப் பின்னர் கீர்த்தி சுரேஷுக்குப் பெரிதாக எந்தப் படமும் கைகொடுக்கவில்லை. இடையில் ஓ.டி.டி-யில் வெளியான பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களும், ‘என்ன கீர்த்தி இதெல்லாம்’ மோடில்தான் ரசிகர்களைப் பழிவாங்கியது. ஆனாலும், ரஜினியின் ‘அண்ணாத்த’, மகேஷ் பாபுவின் ‘சர்காரி வாரி பாட்டா’ எனப் பெரிய படங்கள் ஒருபுறம், சாணிக்காயிதம், ரங் டீ, குட் லக் சகி என நடிப்புக்கு ஸ்கோப் இருக்கும் படங்கள் இன்னொரு புறம் என கீர்த்தியின் கிராஃப் உச்சத்தில் இருக்கிறது. அதோடு, ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும், ‘30 வயதுக்குள் பிரபலமான 30 நபர்கள்’ பட்டியலிலும் இடம்பெற்றிருப்பது கீர்த்திக்குக் கூடுதல் மகிழ்ச்சி. சிறப்பு!

பிரதமர் மோடி குறித்த அவதூறு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பெயரில் 17 பேர்மீது பெலூப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விஷயம் என்னென்னா... இதில் கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் ஒருவர். பின்னர் சுதாரித்த காவல்துறையினர் சுந்தர் பிச்சை உட்பட கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளின் பெயர்களை நீக்கியுள்ளனர். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் காவல்துறையினர் அளிக்கவில்லையாம். நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தை முடித்தபிறகு, தேனாண்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். ‘தேனாண்டாள் பிலிம்ஸ் - விஜய்’ கூட்டணியில் உருவான ‘மெர்சல்’ படத்தின் ரிலீஸ் சமயத்திலேயே உறுதியான படம் இது. கிராமம் சார்ந்த கதையாகத்தான் இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்த நிலையில், இதை சிவா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அவர் விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதால், ‘அண்ணாத்த’ படத்தை முடித்ததும், இந்தப் படத்தின் வேலைகளை சிவா ஆரம்பிப்பார் எனக் கூறப்படுகிறது. அஜித்துக்கு ‘வி’ டைட்டில்னா விஜய்க்கு ‘அ’ டைட்டில் வைப்பாரு!

குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுத்தருவது எவ்வளவு நன்மை தரும் என்பதற்கு உதாரணம் இந்த அமெரிக்கச் சம்பவம். ஜெய்டன் கர் என்ற எட்டு வயது அமெரிக்கச் சிறுவன், 2019-ம் ஆண்டு சலுகை விலையில் வீடியோ கேம்கள் வாங்க முயல்கிறான். வீடியோ கேம் ஆர்வத்தில் இருந்த மகனை, சேமிப்புப் பக்கம் திருப்புவதற்காக, அந்த வீடியோ கேம் நிறுவனத்தின் பங்குகளை அதே விலைக்கு வாங்கிக் கொடுக்கிறார் அம்மா. 60 டாலர் முதலீடு செய்த அந்தச் சிறுவனுக்கு ஷேர் மார்க்கெட்டில் லாட்டரி அடித்திருக்கிறது. 15 மாத இடைவெளியில், அது 3,200 டாலராக உயர்ந்திருக்கிறது. இப்போது அந்தச் சிறுவன், வேறொரு வீடியோ கேம் நிறுவனத்திலும் முதலீடு செய்யவிருக்கிறான். சின்னக் கல்லு பெத்த லாபம்.