Published:Updated:

நெல்லை: பள்ளிச் சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்... தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூவர் கைது!

மாணவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை
News
மாணவர்களின் உடலுக்கு இறுதி மரியாதை

பள்ளிச் சுவர் இடிந்து இறந்த மாணவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நெல்லை டவுன் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இடைவேளையின்போது, கழிப்பறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன், சுதீஷ், அன்பழகன் ஆகியோர் உயிரிழந்தனர். சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக் அபுபக்கர் சித்திக், அப்துல்லா ஆகிய நான்கு பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் சபாநாயகர் அப்பாவு
உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் சபாநாயகர் அப்பாவு

இந்த நிலையில், பள்ளிச் சுவர் இடிந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்த மாணவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் உதவித்தொகையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்தத் தொகையை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அளிக்க அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பள்ளி நிர்வாகத்தினர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவர்களிடம் சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.

சம்பவ,ம் நடந்த பள்ளி
சம்பவ,ம் நடந்த பள்ளி

பின்னர் சபாநாயகர், அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் உயிரிழந்த மாணவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டதுடன் அவர்களுக்கு தலா மூன்று லட்சத்துகான காசோலையை வழங்கினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ``சாஃப்டர் பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிந்த தமிழக முதல்வர், உடனடியாக என்னைச் சம்பவ இடத்துக்குச் செல்லுமாறு அனுப்பியதால் இங்கு வந்திருக்கிறேன். பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளித் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி, கட்டட ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

பேட்டியளிக்கும் அமைச்சர் கண்ணப்பன்
பேட்டியளிக்கும் அமைச்சர் கண்ணப்பன்

இதற்கிடையே, பள்ளிச் சுவர் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாஃப்டர் மேல்நிலைப்பள்ளிக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்க நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷிணி உத்தரவிட்டுள்ளார்.