Published:Updated:

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்..! - நீண்டகாலத்தில் பெற என்ன வழி?

பணவீக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
பணவீக்கம்

பணவீக்கம் உயர்ந்ததால் செலவுக்கும் கிடைக்கும் வருமானத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது!

ந்தியா 1983-ம் ஆண்டு முதன்முதலில் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை வென்றது. அன்றைய காலகட்டத்தில் 60 ஓவர்களில் வெறும் 183 ரன்களே வெற்றிக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்து 2011-ம் ஆண்டு மீண்டும் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. ஆனால், இதில் வெற்றியடைய 277 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஓவரின் அளவோ 50 மட்டுமே.

உலக கிரிக்கெட் போட்டியில் 28 வருடம் கழித்து உலகக் கோப்பையை வெல்வதற்கான ஓவர்கள் குறைக்கப்படுகின்றன. ஆனால், ரன்களின் தேவையோ அதிகமாகிறது. இப்போது 20-20தான். ஒரு அணிக்கு 20 ஓவர்கள் மட்டுமே தரப்படுகிறது. அதாவது, 120 பந்துகள். இந்த 120 பந்துகளில் விக்கெட்களை இழக்காமல், எந்தளவுக்கு அதிகமான ரன்களை எடுக்க முடியுமோ, அந்த அணிதான் ஜெயிக்கிறது. கிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டுவரும் இந்த நடைமுறையை நாம் சரியாகப் புரிந்துகொண்டால், நம் முதலீட்டைச் சரியாக அமைத்துக்கொள்ள முடியும். எப்படி?

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்..! - நீண்டகாலத்தில் பெற என்ன வழி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பணவீக்கமும் முதலீட்டு மூலமான வருமானமும்

முதலீட்டு உலகில் இருப்பவர்களுக்கு பணவீக்கத்தைப் பற்றியோ, முதலீட்டு மூலமான வருமானத்தைப் பற்றியோ விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வுதான் பணவீக்கம் (Inflation). அதேபோலத்தான், முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம். இது முதலீட்டு வகைக்கேற்ப மாறும் என்பதுடன் காலத்துக்கு காலம் மாறும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டும் முதலீடும்...

இப்போது கிரிக்கெட்டில் நடப்பதே நம் முதலீடுகளிலும் நடக்கிறது. அதாவது, பணவீக்கம் என்பது ரன்கள் மாதிரி. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, கிரிக்கெட்டில் ஜெயிப்பதற்கான ரன்கள் அதிகரிக்கிற மாதிரி, நம் வாழ்க்கையில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஓவர்கள் குறைக்கப்படுகிற மாதிரி, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சில உதாரணங்கள்...

முதலீட்டின் மூலமான வருமானம் நாம் அனைவருக்கும் பரிச்சயமான தபால் அலுவலக முதலீட்டை எடுத்துக்கொள்வோம். 1992-ம் ஆண்டு தபால் அலுவலக ஐந்தாண்டு டேர்ம் டெபாசிட்டுக்கான வட்டியோ 13.5%. ஆனால், தற்போது கொடுக்கப்படும் வட்டியோ 6.7% மட்டுமே. (கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.) ஆனால், பணவீக்கம்..?

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்..! - நீண்டகாலத்தில் பெற என்ன வழி?

1992-ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை 4,334 ரூபாய்தான். ஆனால், இன்று ரூ.48,420. 1997-ம் ஆண்டில் இன்ஜினீயரிங் முடிக்க மொத்த செலவே ரூ.50,000-க்குள்தான் இருந்தது. ஆனால், இப்போது இதே டிகிரியை முடிக்க செலவோ ரூ.4 - ரூ.5 லட்சம் என்பதால், பலர் கல்விக் கடன் பெற்று வேலைக்குச் செல்லும் முன்பே கடனாளியாக மாறும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதேபோலத்தான் மருத்துவச் செலவும். இன்றைக்கு மாரடைப்பு, கேன்சர், பக்கவாதம் என்று தனியார் மருத்துவமனைக்குப் போனால், நாம் சேமித்த பணத்தில் பெரும்பகுதியை நிச்சயம் இழக்க வேண்டியிருக்கும்.

இப்படிக் கல்வி, மருத்துவ செலவுகள், தங்கத்தின் விலை விஷம்போல் ஏறிவரும் நிலையில், நமது சேமிப்பின் வட்டியோ 6 - 7 சதவிகிதமாகக் குறைந்து வருகிறது. பணவீக்கம் உயர்ந்ததால் நாம் செய்ய வேண்டிய செலவுக்கும் முதலீட்டில் கிடைக்கும் வருமானத் துக்கும், மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தந்த வருமானம் வேறு எதுவும் தரவில்லை என்பதை எடுத்துச்சொல்ல எத்தனையோ புள்ளிவிவரங்களைத் தரமுடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்னதான் தீர்வு?

குழந்தைகளின் கல்வி, திருமணம் என்ற அடிப்படையான விஷயங்களுக்கு அப்பாற்பட்டு நமது ஓய்வுக்காலம் மற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் என்று நமது தேவைகளின் பட்டியல் நீளும். இவற்றுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், நீண்டகால அடிப்படையில் நல்ல வருமானம் தரும் முதலீட்டைக் கண்டறிவது காலத்தின் கட்டாயம்.

இப்படி நம் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளே பெரும் உதவியாக இருந்துவருகிறது. இப்படிச் சொல்வதன்மூலம் நான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சிபாரிசு செய்வதாக யாரும் நினைக்கத் தேவையில்லை. கடந்த 20 ஆண்டு களில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தந்த வருமானம் வேறு எதுவும் தரவில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்ல எத்தனையோ புள்ளி விவரங்களைத் தர முடியும்.

அலுவலக வேலை, பிசினஸில் பிசி என்று இருப்பவர்கள் பங்குச் சந்தை மூலம் கிடைக்கும் நன்மைகளை நேரடியாகப் பெற முடியாதவர்கள். ஆனால், விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை என்பதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்படும் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

வெறும் ரூ.1,000 முதலீட்டில் நம்மூர் எஸ்.பி.ஐ முதல் அமெரிக்காவின் இருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை மியூச்சுவல் ஃபண்ட் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

1995-ம் ஆண்டு முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஒன்றின் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு மேற் கொண்டிருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ.1 கோடிக்கு மேலாக இருக்கும். இதை நாம் சொல்லும்போது, ‘25 ஆண்டெல்லாம் ரொம்ப நீண்டகாலம் பாஸ்’ என்று சொல்வார்கள்.

ஆனால், பாட்டியின் நகைகள் பேத்திக்கும் முப்பாட்டனின் நிலத்தில் பேரன் வீடு கட்டி மூன்று தலைமுறைகளுக்குச் சொத்துகள் மாறிச் செல்வதைப் பார்க்கும் நமக்கு 25 வருடம் என்பது நீண்டகாலமே அல்ல.

உத்தரவாத வருமானம் தரும் முதலீட்டையே நம்மவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். கிரிக்கெட் ஜாம்பவான் என்று புகழப்பட்ட சச்சின் இல்லாத கிரிக்கெட் அணியும் இன்று உள்ளது. இதுபோன்று காலத்துக்கேற்ப மாறுதல்கள் நம் முதலீட்டுக்கும் தேவையே.

3சி-கள் (Cash, Crisis, Courage) இருந்தால் நாம் பெரும் லாபத்தை ஈட்டலாம் என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் விதிமுறை. கிரிசிஸ் என்பது அத்திப்பூத்தாற்போல் அரிதாக வரக்கூடியது. நம்மிடம் இருக்கும் ரொக்கப் பணத்தைத் துணிச்சலாக முதலீடு செய்து பயனடையலாம்.

இறைவனின் படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் என்பது இல்லை. நாம் ஏழையாகத் தொடர் வதும், செல்வந்தராவதும் நாம் பணத்தைக் கையாளும் விதம்தான் தீர்மானிக்கிறது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நீண்டகால அடிப்படையில் மேற்கொண்டால் வெற்றி நமதே!