Published:Updated:

கொரோனா காலத்தில் மலைபோலக் குவியும் மருத்துவக்கழிவுகள்!

மருத்துவக்கழிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக்கழிவுகள்!

சுத்திகரிப்பு மையங்கள் அதிகரிக்கப்படுமா?

கொரோனா காலத்தில் மலைபோலக் குவியும் மருத்துவக்கழிவுகள்!

சுத்திகரிப்பு மையங்கள் அதிகரிக்கப்படுமா?

Published:Updated:
மருத்துவக்கழிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மருத்துவக்கழிவுகள்!

முகக்கவசம், பி.பி.இ கிட், சானிடைஸர் என கொரோனா நம்மைப் புதிய இயல்புகளுக்குப் பழக்கியுள்ளது. இத்தனை கோடி மக்கள் முகக்கவசமும் சானிடைஸரும் பயன்படுத்து கிறார்கள். அத்தனை டாக்டர்களும் பி.பி.இ கிட் அணிகிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு மருத்துவ மனைகளில் நோயா ளிகள் குவிகிறார்கள். இதனால் எவ்வளவு மருத்துவக்கழிவுகள் சேரும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. எல்லா குப்பைத் தொட்டிகளிலும் கேரி பேக்குகளும், காலி தண்ணீர் பாட்டில் களும் சாதாரணமாகக் கிடக்கும். முகக்கவசங்களும் அப்படி ஆகிவிட்டன.

கொரோனா பெருந்தொற்றின் மற்றோர் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது மருத்துவக் கழிவுகள் விவகாரம். ‘தமிழ்நாட்டில் வழக்கமாகச் சேகரமாகும் மருத்துவக்கழிவுகளைவிட கொரோனா காலகட்டத்தில் பலமடங்கு அதிகமாகக் குவிகின்றன. அவற்றைச் சுத்திகரிக்கும் வசதிகள் நம்மிடம் இல்லை; இதனால், பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும்’ என்று எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழலியாளர்கள்.

கொரோனா காலத்தில் மலைபோலக் குவியும் மருத்துவக்கழிவுகள்!
கொரோனா காலத்தில் மலைபோலக் குவியும் மருத்துவக்கழிவுகள்!

மருத்துவக்கழிவுகள் விவகாரத்தைத் தொடர்ந்து கவனித்துவரும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பொறியாளர் வீ.பிரபாகரனிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே மருத்துவக் கழிவுகள் மேலாண்மையில் தெளிவு இல்லை. கடந்த 2020, ஜூன் 21-ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்ச் முதல் ஜூன் வரை சுமார் 90 நாள்களில் மொத்தம் 490 டன் மருத்துவக்கழிவுகள் பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முந்தைய 2019-ம் ஆண்டு அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 58.2 டன் மருத்துவக்கழிவுகள் உற்பத்தியாகின்றன’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே 90 நாள்களுக்கு என்று எடுத்துக்கொண்டால் மொத்தம் 5,238 டன்கள். ஆனால், 2020-ம் ஆண்டு வெறும் 490 டன்களை மட்டும் கணக்கில் காட்டியிருப்பது 10 மடங்கு குறைவு. மருத்துவக்கழிவு களின் கணக்கைக் குறைத்துக்காட்டி, பிரச்னையி லிருந்து தப்பித்துக்கொள்ளும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் அணுகுமுறை தற்போது வரை தொடர்கிறது.

பிரபாகரன் - எஸ்.எஸ்.பாலாஜி
பிரபாகரன் - எஸ்.எஸ்.பாலாஜி

வழக்கமான காலகட்டத்தில் ஒரு நோயாளி யிடமிருந்து ஒரு நாளைக்கு சுமார் 300 முதல் 500 கிராம் வரை மருத்துவக்கழிவுகள் உருவாகும். கொரோனா காலகட்டத்தில் ஒரு நோயாளிக்குச் சராசரியாக ஒரு கிலோ மருத்துவக் கழிவுகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 97,370 கொரோனா படுக்கைகளிலிருந்து ஒரு நாளைக்கு 97.3 டன் மருத்துவக்கழிவுகள் உருவாகின்றன. இவை தவிர, சாதாரண மருத்துவக்கழிவுகள், கொரோனா பரிசோதனை மையங்களின் மருத்துவக்கழிவுகள், தடுப்பூசி மையங்களின் மருத்துவக்கழிவுகள் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு நாளைக்கு சுமார் 150 டன்கள் இருக்கலாம்.

தமிழகத்தில் தற்போது 11 மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு 55.16 டன் மருத்துவக்கழிவுகளை மட்டுமே சுத்திகரிக்க முடியும். எனவே, மாவட்டத்துக்கு ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மருத்துவக் கழிவுகளைக் கையாள் வதற்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மருத்துவக்கழிவு களைக் கையாளுவதற்கான முறையான பயிற்சியை சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல... பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளுக்கும் காரணியாகிவிடும் என்பதால் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்றார்.

கொரோனா காலத்தில் மலைபோலக் குவியும் மருத்துவக்கழிவுகள்!

சமீபத்தில் பொதுவெளியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகளை ஆய்வுசெய்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ-வான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். “எனது தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, ஸ்பாட்டுக்குச் சென்று ஆய்வுசெய்ததில் அந்தப் பகுதியில் மருத்துவக்கழிவுகளோடு மனித உறுப்புகளும் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். மருத்துவக்கழிவுகளை அகற்ற சென்னையில் ஆறு அல்லது ஏழு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி, சுத்திகரிப்பு செய்கின்றனவா என்பதை யாரும் கவனிப்பதில்லை. இதில் பல்வேறு சட்ட மீறல்கள் நடக்கின்றன. தற்போது தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை போதாது. சொல்லப் போனால், கொரோனா தொற்றுக் காலத்துக்கு பிறகு மாசு கட்டுப்பாடு வாரியத்தையே முற்றிலும் சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மருத்துவக்கழிவுகள் தொடர்பாக ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்பதால் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

சிவ.வீ.மெய்யநாதன்
சிவ.வீ.மெய்யநாதன்

சிவ.வீ.மெய்யநாதஇந்தப் பிரச்னைகள் குறித்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் பேசினோம். “மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் மருத்துவக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்குக் கூடுதலாகத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் யோசனை உள்ளது. மருத்துவக்கழிவுகளை முறைப்படி அகற்றாத தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மாவட்டம்தோறும் சுத்திகரிப்பு மையங்கள் தொடங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கழிவுகள் தொடர்பாக எழும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism