Published:Updated:

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்... எதிர்கொள்ளத் தயாரா மருத்துவத்துறை?

வைரஸ் காய்ச்சல்
பிரீமியம் ஸ்டோரி
வைரஸ் காய்ச்சல்

இது பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு. ஃப்ளு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தாங்களாகவே குணமடைந்துவிடுகிறார்கள்.

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்... எதிர்கொள்ளத் தயாரா மருத்துவத்துறை?

இது பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு. ஃப்ளு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தாங்களாகவே குணமடைந்துவிடுகிறார்கள்.

Published:Updated:
வைரஸ் காய்ச்சல்
பிரீமியம் ஸ்டோரி
வைரஸ் காய்ச்சல்

தமிழ்நாட்டில் ஃப்ளு காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாகப் பரவிவருகின்றன. கடந்த சில தினங்களில் சென்னையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஃப்ளு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேசமயத்தில் தமிழ்நாடு முழுவதும் 1,040-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஃப்ளு காய்ச்சல் கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 360-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஃப்ளு காய்ச்சலால் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ``காய்ச்சல் அறிகுறி இருக்கும் குழந்தைகளை வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை” என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்... எதிர்கொள்ளத் தயாரா மருத்துவத்துறை?

பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாடு மருத்துவத் துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகத்திடம் பேசினோம். ``தற்போது ஃப்ளு வகை காய்ச்சலைவிட, சாதாரண காய்ச்சலால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உயிரிழந்த எட்டுப் பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்; இணை நோய் உடையவர்கள் என்பதால் மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு நாள்களில் சரியாகவில்லையென்றால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். காலம் தாழ்த்தாமல் சிகிச்சை பெற்றால், உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்து, படுக்கை வசதிகள் போதிய அளவில் இருக்கின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தாலும், தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தயாராக இருக்கின்றன” என்றார்.

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையைச் சேர்ந்த அரசு மருத்துவரிடம் பேசியபோது, ``இது பருவகால மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு. ஃப்ளு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தாங்களாகவே குணமடைந்துவிடுகிறார்கள். காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு கை மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவர வேண்டும். குழந்தைகளுக்கு எந்தவகைக் காய்ச்சல் வந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து மருத்துவம் பார்க்க வேண்டும்” என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவத்துறைச் செயலாளர் செந்தில் குமாரிடம் கேட்டோம். “கொரோனா காலகட்டத்தில், பெரும் பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்ததால் காய்ச்சல் பரவும் விகிதம் குறைந்திருந்தது. இப்போது, 10% பேர்கூட முகக்கவசம் அணிவதில்லை. கொரோனா விதிமுறைகள் இன்றளவும் நடைமுறையில்தான் இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. இது, டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் காலகட்டம். பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அனைவரும் முகக்கவசம் அணிந்தாலே நோய்ப் பரவலைப் பெருமளவு தடுத்துவிடலாம்” என்றார்.