Published:Updated:

சுதந்திர இந்தியா

சுதந்திர இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர இந்தியா

அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அய்யர் - ஓவியங்கள்: கோபுலு

சுதந்திர இந்தியா

அல்லாடி கிருஷ்ணஸ்வாமி அய்யர் - ஓவியங்கள்: கோபுலு

Published:Updated:
சுதந்திர இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
சுதந்திர இந்தியா

நமது தேசத்தின் சரித்திரத்திலே இது ஒரு மிக முக்கிய தினம் ஆகும். இன்று முதலாக இந்தியா இரு துண்டுகளாக்கப்படுகிறது. இதை யொட்டி வர்த்தகம், கைத்தொழில், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிக்கலான பல பிரச்னைகள் ஏற்படவிருக்கின்றன. இந்தக் காரணங்களினால் தேச மக்கள் மனம் குன்றுவார்கள் என்றாலும்கூட, இந்திய தேசம் விடுதலை பெற்றதையும், இந்நாட்டு மக்கள் எதிர்கால அரசியலைத் தாங்களாகவே நிர்ணயித்து தேசத்தின் விதியை முடிவு செய்து கொள்ளும் பொறுப்பைப் பெற்றிருப்பதையும் மறுக்க முடியாது.

வெகு நீண்ட காலமாகவே ஒரு தேசம் தன் சுதந்திரத்திற்காக இன்னொரு அந்நிய வல்லரசுடன் நடத்திய போராட்டத்தின் வெற்றியைக் குறிக்கும் தினமாக இந்த நாள் அமைகிறது. அதோடு, இதுகாறும் விடாப்பிடியாக இந்திய மக்களின் சுதந்திர எழுச்சியை அடக்கியாண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள், மகாத்மா காந்தியின், ‘இந்தியாவை விட்டு வெளி யேறு!’ என்ற சுலோகத்தைக் கண்ணியத்துடனும் தீர்க்க திருஷ்டியுடனும் நிறைவேற்றி வைக்கும் தினமாகவும் அமைகிறது.

சுதந்திர இந்தியா

ஆனால், தேசமக்கள் சுதந்திரம் வருவதுடன் கூட அதை வகிப்பதில் பெரிய பொறுப்பும் இருக்கிறதென்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

கிடைத்திருக்கும் இந்த சுதந்திரமானது குறிப்பிட்ட ஒரு வகுப்பினரையோ, சாராரையோ, அடக்கியாள்வதற்கு முகாந்திரமாக ஏற்பட்டாலும் சரி,

சுதந்திரமானது நாட்டின் நலத்துக்காக மேதைகளைப் பயன்படுத்திக்கொள்வதில் வகுப்பு, கட்சி, ஜாதி வேற்றுமைகளைப் புகுத்தினாலும் சரி,

சுதந்திரமானது தேசத்தின் பல கோடி மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தடை செய்வதாக இருந்தாலும் சரி,

சுதந்திரமானது நாட்டினர் தங்களுக்கு அத்தியாவசியமான உணவு உடைகளைப் பெறவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் பயனற்றதாகப் போனாலும் சரி,

சுதந்திரமானது தேச சுபிட்சத்துக்கும் கைத்தொழில்களுக்கும் குந்தகமாக நின்றாலும் சரி,


பொது நலனுக்காகவென்றே ஏற்பட்ட அந்த சுதந்திரத்தின் லட்சியம் பங்கமடைகிறது. இது எந்த நாட்டுக்கும் பொருந்தும்.

ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி ஒரு விசேஷ கொண்டாட்ட தினம்தான். இந்த தினத்தில் சிந்தனைகளை ஓடவிட்டுத் தங்கள் சந்தோஷத்துக்குக் களங்கம் ஏற்படுத்திக்கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள்.

சுதந்திர இந்தியா

எனினும், இந்த மாகாணத்திலும், இதர இடங்களிலும் நிர்வாகத்தை வகிக்கும் சிலர் குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்வதைக் கவனிக்காமல் இருந்துவிட முடியாது. வெகு பிரயாசையின் பேரில் கிடைத்திருக்கும் இந்த சுதந்திரம் மகத்தான காரண காரியங்களுக்குப் பயன்படுமென்றும், இந்திய தேசம் உலக நாடுகளிலேயே உன்னத ஸ்தானத்தை வகிக்க உதவியாக இருக்கும் என்றும், விஞ்ஞானம் தத்துவம் கலை ஆகியவற்றில் ஓங்கி வளர்ந்து, உலகமே மெச்சத்தக்க மேதாவிகளை அந்தத் துறைகளில் சிருஷ்டிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசத்தின் மதிப்பும் உயர்வும், ஆதிக்கம் செலுத்துபவர்களின் குறுகிய புத்தியுடன் ஒருபோதும் இணைந்திருக்காது.