Published:Updated:

`இந்தியா பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாறும்!' - பிரதமர் மோடி

``பெட்ரோலிய மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விடுத்து, சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது." - பிரதமர் மோடி

2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள எரிசக்தி துறை மேம்பாட்டுக்கான திட்டங்கள் பற்றி நடந்த இணையவழி கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது பசுமை ஹைட்ரஜன் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

``பெட்ரோலிய மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விடுத்து, சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனுக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சூரிய மின் உற்பத்தி/ Representational Image
சூரிய மின் உற்பத்தி/ Representational Image
Pixabay

சூரிய மின் உற்பத்தியை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும். 15% வரை ஒவ்வொரு குடும்பமும் மின்சாரத்தை சேமிக்க சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தி தேவையை, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியிலிருந்து பெற இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்திய நாட்டில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளமானது அதிகம் இருக்கிறது. விரைவில் சர்வதேச அளவில் இந்தியா பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாறும்" எனப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism