
நிகழ்ச்சியில் மோடி இந்தியில் பேச அதனைபுரிந்துகொண்டு பியர் க்ரில்ஸ் ஆங்கிலத்தில் பேசியிருந்தார். இதனை வைத்து பியர் க்ரில்ஸ்க்கு எப்படி இந்தி தெரியும்... என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கடுமையான சூழல்கள் கொண்ட வனப்பகுதிகளில் இறக்கிவிடப்படும் ஒருவர் எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்பதை சாராம்சமாக வைத்து நடத்தப்படுவதுதான் டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கும் தொகுத்து வழங்கும் பியர் க்ரில்ஸ்க்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். முன்னா அமெரிக்க அதிபர் ஒபாமா முதல் பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் வரவாக பங்கேற்றவர் நமது பிரதமர் நரேந்திர மோடி. புல்வாமா தாக்குதலின்போது இந்த ஷூட்டிங்கில்தான் மோடி இருந்தார் என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது கடந்த 12-ம் தேதி ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சி. உத்தரகாண்ட்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த எபிசோடு படமாக்கப்பட்ட போதும் தற்போதும் நிகழ்ச்சி குறித்து சர்ச்சைகளும், பேச்சுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
நிகழ்ச்சியில் மோடி இந்தியில் பேச அதனைபுரிந்துகொண்டு பியர் க்ரில்ஸ் ஆங்கிலத்தில் பேசியிருந்தார். இதனை வைத்து பியர் க்ரில்ஸ்க்கு எப்படி இந்தி தெரியும்... என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார். அதில், ``கார்பெட் தேசிய பூங்காவில் இந்த எபிசோடு படமாக்கப்பட்ட போது, நான் இந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என கேள்வி கேட்கின்றனர்.

இன்னும்சிலரோ இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டதா அல்லது பலமுறை காட்சிபடுத்தப்பட்டதா என்றும் கேட்கின்றனர். உண்மை என்னவென்றால் எனக்கும், பியர் க்ரில்ஸ்க்கும் இடையில், டெக்னாலாஜி பெரிய பாலமாக இருந்தது. எனது இந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார். பியர் க்ரில்ஸ் தனது காதில் பொருத்தியிருந்த சிறிய மென்பொருள் சாதனம் ஒன்று நான் பேசிய இந்தியை நொடி பொழுதில் ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தது" எனக் கூறினார்.