Published:Updated:

கொரோனா பாதிப்பு... பொருளாதாரத்தை மீட்பது எப்படி? - வழிகளைச் சொல்லும் புத்தகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பொருளாதாரத்தை  
மீட்பது எப்படி
பொருளாதாரத்தை மீட்பது எப்படி

ECONOMY

பிரீமியம் ஸ்டோரி
கோவிட்-19 என்ற பெருந் தொற்று உலகளவில் இதுவரை பார்த்திராத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த இக்கட்டான காலகட்டத்திலிருந்து மீண்டுவர புதுமையான, வழக்கமான சிந்தனை யிலிருந்து மாறுபட்ட நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கிய இந்தியா இந்தப் பெருந்தொற்றால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மீள்வது எப்படி, ஊரடங்கால் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என்ன, வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்குமான போராட்டத்தில் நாம் எந்தப் பக்கம் என்று தெரிவு செய்வது சாத்தியமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கும் ஒரு முயற்சியாக பலதரப்பட்ட தரவுகளுடன் பிரபல பொருளாதாரப் பேராசிரியர் அருண் குமார் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் `இண்டியன் எகானமி’ஸ் கிரேட்டஸ்ட் க்ரைசிஸ் (Indian Economy’s Greatest Crisis)’ என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருப்பது என்ன என்று பார்ப்போம்.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

V அல்ல, U வளர்ச்சியே சாத்தியம்...

ஏழு பகுதிகளைக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம், நவீன கால பொருளாதாரத்துக்கும் பண்டைய காலப் பொருளாதாரத்துக்குமான வித்தியாசங்களையும், இந்த மாதிரியான பெருந்தொற்றால் தொழில்நுட்ப வசதி மிகுந்த இந்தக் காலகட்டத்திலும் நவீன பொருளாதாரத்தை எந்தளவுக்கு ஸ்தம்பித்துப் போகச் செய்திருக்கிறது என்பதைப் பற்றிப் பேசத் தொடங்கு கிறது.

இந்தப் பெருந்தொற்றால் அதன் சூத்ரதாரியான சீனா தவிர்த்து (ஜி.டி.பி வளர்ச்சி 2%) மற்ற அனைத்துப் பெரிய பொருளாதார நாடுகளும் தேக்க நிலையைத் தாண்டி வீழ்ச்சி என்ற நிலையை அடைந்திருக் கின்றன. இதிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்டகாலம் ஆகலாம். அரசாங்கம் கூறிவருவது போல, உடனடியாக V வடிவிலான மீட்சி சாத்தியமில்லை என்றும், மிஞ்சிமிஞ்சிப் போனால் U வடிவிலான பொருளாதார மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறதென்றும் ஆசிரியர் பல தரவுகளை அடிப்படை யாகக் கொண்டு தனது கருத்துகளை முன்வைக்கிறார்.

போர் காலத்தைவிட மோசம்...

கோவிட்-19-ஆல் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியானது இரண்டாம் உலகப் போரின்போது எதிர்கொண்ட வீழ்ச்சியைவிட மிகவும் மோசமானது என ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். உற்பத்தியானது இப்போது பாதிக்கப்பட்டிருப்பது போல, போர்க்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. உதாரணமாக, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் சாக்லேட் தயாரித்து வந்த நிறுவனம், விமானத்தை முன்னோக்கி செலுத்தும் காற்றாடி களைத் (propeller) தயாரித்தன. அமெரிக்காவில் கார் உற்பத்தி நிறுவனம், விமானம் தயாரிப்பதில் ஈடுபட்டது. வேலையிழப்பு என்பது அப்போது பெரிதாக இல்லை. மக்களில் பெரும்பாலோர் ராணுவப் பணிகளில் அமர்த்தப்பட்டனர்.

ஆனால், கோவிட்-19 பெருந் தொற்றால் நடைமுறைப்படுத்தப் பட்ட ஊரடங்கால் விநியோகம், உற்பத்தி அனைத்தும் முடக்கப் பட்டதால் முறைசார் மற்றும் முறைசாரா துறைகளில் வேலை வாய்ப்பிழப்பும் எப்போதுமில்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டிருக் கிறது.

பொருளாதார தேக்கநிலை, வீழ்ச்சியின்போது பொருள்களுக்கான தேவை குறையும், வேலையிழப்பு அதிகரிக்கும். ஆனால், விநியோகம் அவ்வளவாகப் பாதிப்புக்கு உள்ளாவது இல்லை. உற்பத்திக்கும் தடை ஏற்படாது. தேவை குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப் படலாம். ஆனால், இந்த ஊரடங்கால் உற்பத்தியே நிறுத்தி வைக்கப் பட்டதால், விநியோகமும் தேவையும் வீழ்ச்சியடைந்தன. இதனால் பணியாளர்கள் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு வேறு வருமானத்துக்கு வழியில்லை. இதனால் பொருள்களுக்கான தேவை யிலும் (demand) பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால்தான் பொருளாதார வளர்ச்சி கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது ’’ என்கிறார் ஆசிரியர்.

கொரோனா பாதிப்பு... பொருளாதாரத்தை மீட்பது எப்படி? - வழிகளைச் சொல்லும் புத்தகம்...

‘‘இந்தத் தொற்று வருவதற்கு முன்பாகவே இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிதான் சென்று கொண்டிருந்தது. இதற்குக் காரணம், பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட தாக்கம், சரக்கு மற்றும் சேவை வரி நிறைவேற்று வதில் ஏற்பட்ட சிக்கல், பலூன் போல பெரிதாககிவந்த வாராக் கடன் பிரச்னை ஆகியவையாகும். இந்தப் பிரச்னை களுக்கிடையே பொருளாதாரம் எப்படி V வடிவ மீட்சியைப் பெறமுடியும்’’ என்று கேட்கிறார் புத்தக ஆசிரியர்.

அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் அறிவித்திருக்கும் நிதித் தொகுப்போடு நமது அரசு அறிவித்திருக்கும் நிதித் தொகுப்பை ஆசிரியர் ஒப்பீடு செய்திருக்கிறார். அமெரிக்கா அறிவித்திருக்கும் 2.5 ட்ரிலியன் டாலர் நிதித் தொகுப்பானது அதன் ஜி.டி.பி-யில் 19 சதவிகிதமாகும். ஆனால், இந்திய நிதி அமைச்சர் ரூ.20.97 லட்சம் கோடிக்கு நிதித் தொகுப்பை அறிவித்தாலும் அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே நலிவடைந்த பிரிவினருக்கு (marginalized sections) வழங்கப்பட்டது. மீதம் கடனாகத்தான் வழங்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு... பொருளாதாரத்தை மீட்பது எப்படி? - வழிகளைச் சொல்லும் புத்தகம்...

இனி என்ன செய்ய வேண்டும்?

‘‘வேலையிழப்பைத் தடுப்பது, மருத்துவக் கட்டமைப்பு, தேவையை அதிகரிப்பதன் மூலம் தொழில்களை மீட்பது ஆகிய மூன்றும் இந்த காலகட்டத்தில் முக்கியமான அம்சங்கள் ஆகும். ஆனால், அரசானது இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டையோ, வாய்ப்புகளையோ உருவாக்க வில்லை என்பது வருத்தத்துக்கு உரியதாகும்.

இந்தியாவிலிருக்கும் மொத்த பணியாளர்களில் முறைசாரா தொழில் துறையைச் சார்ந்திருப் பவர்களின் எண்ணிக்கை சுமார் 94 சதவிகிதமாகும். ஆனால், அரசு இந்தப் பிரிவு மக்களுக்கென்று பெரிதாக எதுவும் செய்யவில்லை’’ என்கிற விமர்சனத்தை முன்வைக் கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

தேவையை அதிகரிக்க வேண்டும்...

வளர்ந்த நாடுகள் எதிர் கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்னையிலிருந்து விரைவாக மீண்டுவிடும். ஏனெனில், அவை நமது நாட்டைப் போல பெருமளவுக்கு முறைசாரா தொழில் துறையைச் சார்ந்திருக்க வில்லை. எனவே, ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி யிலிருந்து மீண்டுவர அரசு நன்கு சிந்தித்து தேவையை அதிகரிக்கும் வகையில் (boosting demand) அது சார்ந்த துறைகளுக்கு நிதித் தொகுப்பை அறிவிக்க வேண்டும்.

இதுவரை அறிவிக்கப் பட்ட நிதித் தொகுப்பானது பெரும் பாலும் விநியோகத் துறை (supply) சார்ந்ததாகவே இருந்து வந்திருக் கிறது. இதை மாற்றி தேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கை களை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். அதுதான் மிகவும் என்று சொல்கிறார் ஆசிரியர்.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளும் வழிகள் குறித்து பேசும் இந்தப் புத்தகத்தை அனைவரும் பொருளாதார ஆர்வலர்கள் அவசியம் படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு