Published:Updated:

`பெண்களின் உந்துசக்தி!' - பேராசிரியர் ரோகினி கோட்பலேவுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

ரோகினி கோட்பலே
ரோகினி கோட்பலே

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் இந்திரா நாத், கோவர்த்தன் மேத்தா ஆகியோருக்கு இதற்கு முன்பு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் 68 வயதாகும் ரோகினி கோட்பலே.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் பிரிவில் (Centre for High Energy Physics) பணியாற்றி வரும் பேராசிரியர் ரோகினி கோட்பலேவுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான `ஆர்டரே நேஷனல் டி மெரிட்டே (Ordre National du Mérite)' என்ற விருது கிடைத்துள்ளது.

இந்திய அரசின் `பத்மஸ்ரீ' விருது பெற்றவரான ரோகினி, இந்திய அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர். இயற்பியல் துறையில் நிபுணர். இந்தியப் பெண் அறிவியலாளர்களில் முதன்மையானவர். இந்தியா - ஃபிரான்ஸ் கூட்டு அறிவியல் ஆய்வுகளில் சிறந்து விளங்குவதற்கும், அறிவியல் துறையில் பெண்களை பங்களிக்க வைக்க இவர் தரும் ஊக்கத்துக்கும் இவரை ஃபிரான்ஸ் நாடு அங்கீகரித்து இந்த விருதினை வழங்கியுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் இந்திரா நாத், கோவர்த்தன் மேத்தா ஆகியோருக்கும் இதே விருது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் 68 வயதாகும் ரோகினி கோட்பலே.

1952-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர் கோட்பலே. பி.எஸ்சி., பிசிக்ஸ் படிப்பை புனே பல்கலைக்கழகத்தில் முடித்தார். அதில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். எம்.எஸ்சி-யை மும்பை ஐ.ஐ.டி-யில் முடித்தார்.

Photo: CERN
Photo: CERN
3 நாள்கள், 7 கண்டங்கள், 208 நாடுகள்... பயணத்தில் உலக சாதனை படைத்த பெண்!

அதிலும் முதலிடம்தான். பின்னர் நியூயார்க்கின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி ஆய்வை முடித்தார். ஐரோப்பிய அணு ஆய்வுக் கழகத்தின் CERN (Conseil Européen pour la Recherche Nucléaire) ஆய்வுகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார் ரோகினி என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆனந்தி ஜெயராமன்
அடுத்த கட்டுரைக்கு