Published:Updated:

‘தாயை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த மகன்!’ - ஒரு ட்வீட் மூலம் லைக்ஸ்களை அள்ளும் ரயில்வே

Train
Train

ரயிலில் பயணம் செய்த தாயை தொடர்புக்கொள்ள முடியாமல் தவித்த மகனுக்கு ட்விட்டர் மூலம் இந்தியன் ரயில்வே உதவிப்புரிந்துள்ளது.

ரயிலில் பயணம் செய்த தாயை தொடர்புகொள்ளமுடியாத சாஷ்வாத என்பவர் டிவிட்டர் மூலம் இந்திய ரயில்வேயிடம் உதவிக்கேட்டார். அந்த ட்விட்டர் பதிவில், “ சார் எனது தாயார் ஷீலா பாண்டே கடந்த 28-ம் தேதி அஜ்மீர் - ஷெல்டா எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 12988 -ல் s5 கோச்சில் பயணமானார். ரயில் 12 மணிநேரம் தாமதமாக வருகிறது. என் தாயை என்னால் தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் நலமாக இருக்கிறாரா எனத் தெரிந்துக்கொள்ள எனக்கு உதவுங்கள். எனப் பதிவிட்டிருந்தார். இதனை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இந்தியன் ரயில்வே ட்விட்டர் ஹேண்டிலில் டேக் செய்திருந்தார்.

‘தாயை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த மகன்!’ - ஒரு ட்வீட் மூலம் லைக்ஸ்களை அள்ளும் ரயில்வே

இதற்கு உடனடியாக ட்விட்டரில் பதிலளித்த ரயில்வே, சாஷ்வாத்திடம் PNR மற்றும் தொலைபேசி எண்களை கேட்டது. அதற்கு பதிலளித்த சாஷ்வாத் பிஎன்ஆர் நம்பர் தெரியவில்லை. ஐஆர்சிடிசி ஆப்பில் தான் டிக்கெட் புக் செய்தேன் என அந்த மொபைல் நம்பரை பதிவிட்டார். தொடர்ந்து பதிலளித்த ரயில்வே எந்த ரயில்வே நிலையத்தில் எந்த தேதியில் ஏறினார் என்ற விவரத்தை கேட்டது. சாஷ்வாத்தும் அதற்கு பதிலளித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டது.

அதன்பின்னர் அவரது தாயை தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர். ரயில்வேயின் உதவியால் சாஷ்வாத் அவரது தாயாரிடம் பேசினார். இதனையடுத்து சாஷ்வாத் தனது மற்றொரு பதிவில், “உங்களது உடனடி நடவடிக்கைக்கு நன்றி. உங்கள் உதவிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில் “ இந்திய ரயில்வே துறை பயணிகளின் பாதுகாப்பில் அக்கறைக்கொண்டுள்ளது. ரயில் பயணத்தில் இருந்த தனது தாயை தொடர்புக்கொள்ள முடியவில்லை என மகன் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ரயில்வே நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இருவரும் பேசிக்கொள்ள உதவி செய்தது” எனப் பதிவிட்டுள்ளது.

பின் செல்ல