Published:Updated:

சுவிஸ் வங்கியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த இந்தியர்களின் முதலீடு - அறிக்கை சொல்வது என்ன?!

சுவிஸ் பேங்க்

சுவிஸ் வங்கியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியர்களின் நிதி 2021-ம் ஆண்டு 30,500 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் அறிக்கை சொல்வது என்ன?

சுவிஸ் வங்கியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த இந்தியர்களின் முதலீடு - அறிக்கை சொல்வது என்ன?!

சுவிஸ் வங்கியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்தியர்களின் நிதி 2021-ம் ஆண்டு 30,500 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சுவிஸ் அறிக்கை சொல்வது என்ன?

Published:Updated:
சுவிஸ் பேங்க்

சுவிஸ் வங்கியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் நிதி 2021-ம் ஆண்டு 30,500 கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கடந்த வியாழன் அன்று சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி, வருடாந்தர அறிக்கையை வெளியிட்டது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி தங்கள் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் வைப்புத்தொகை குறித்து தகவல் அளித்திருக்கிறது.

2020-ம் ஆண்டு இறுதியில் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் மொத்த நிதி 2.55 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக (Swiss franc) இருந்தது. இந்நிலையில் 2021-ம் ஆண்டின் வருடாந்தர அறிக்கை இந்திய நிதி தொடர்ந்து இரண்டாவது வருடமாக உயர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஏழு வருடங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வாடிக்கையாளர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் நிதி சுமார் ₹ 4,800 கோடியாக உயர்ந்திருக்கிறது.

சுவிஸ் தேசிய வங்கியின் (SNB) தரவுகளின்படி 2006-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்களின் மொத்த நிதி (6.5 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்) இறங்கு முகமாகவே இருந்துவந்திருக்கிறது. 2011, 2013, 2017, 2020 ஆண்டுகளின் வரிசைகளில் 2021-ம் ஆண்டின் நிதியும் ஏறுமுக பாதையில் அமைந்திருக்கிறது.

சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கி

2019-ம் ஆண்டு சரிவில் இருந்தாலும் 2020-ம் ஆண்டு குறைவான சரிவையே எட்டியது. ஆனால் 2021-ம் ஆண்டு அனைத்து வகைகளிலும் நிதி அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இந்த அறிக்கை, சுவிஸ் தேசிய வங்கிக்கு சுவிஸ் வங்கிகள் அளித்த தரவுகள் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்தியர்களின் சொத்துகள் கறுப்புப் பணம் அல்ல என்பது சுவிஸ் அதிகாரிகளின் கூற்று. மேலும் வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிரான இந்தியாவை அவர்கள் தீவிரமாக ஆதரிக்கின்றனர் என்றும் கூறியுள்ளனர். நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இந்தியர்களின் கணக்குகள் பற்றிய விவரங்கள் மற்றும் முதன்மையான ஆதாரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு பகிர்ந்துவருகிறது.

2021-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்ட வாடிக்கையாளர் வைப்புத்தொகை கிட்டத்தட்ட 2.25 ட்ரில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்திருக்கிறது. சுவிஸ் வங்கிகளில் அதிக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் கணக்கு வரிசையில் யு.கே., யு.எஸ் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

போலந்து, தென் கொரியா, ஸ்வீடன், பஹ்ரைன், ஓமன், நியூசிலாந்து, நார்வே, மொரீஷியஸ், வங்கதேசம், பாகிஸ்தான், ஹங்கேரி, ஃபின்லாந்து போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 44-வது இடத்தில் இருக்கிறது.

இந்த வரிசையில் பிரிக்ஸ் நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யா (15-வது இடம்), சீனா (24-வது) நாடுகளுக்குப் பின்னாலும் ஆனால் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலுக்கு முன்னாலும் இருக்கிறது.

சுவிஸ் வங்கியில் 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த இந்தியர்களின் முதலீடு - அறிக்கை சொல்வது என்ன?!

சுவிஸ் வங்கிகளில் பாகிஸ்தான் குடிமக்கள் மற்றும் அதன் நிறுவனங்களின் நிதி 712 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்குகளாக அதிகரித்துள்ளது. அதேபோல பங்களாதேஷின் நிதியும் 872 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக உயர்ந்துள்ளது. இவ்விரு நாடுகளிலும் இந்தியாவில் இருப்பதுபோல கறுப்புப் பணம் என்பது பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்குப் பிறகு சுவிஸ் அதிகாரிகளிடம் அதன் தரவுகள், தகவல்கள், ஆதாரங்களை இந்திய அரசு கேட்டது. அதற்கு சுவிஸ் நிதியமைச்சகம் தனது பதில் அறிக்கையில், `சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருப்பதாகக் கூறப்படும் கறுப்புப் பணத்தின் அளவைப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடவில்லை. மேலும், இந்தப் புள்ளிவிவரங்களில் இந்தியர்கள், என்.ஆர்.ஐ-க்கள் அல்லது பிறர் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கக்கூடிய பணம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறியிருக்கிறது. மேலும், இந்திய நிறுவனங்களின் வர்த்தகப் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு, இந்தியாவில் அமைந்துள்ள சுவிஸ் வங்கிக் கிளைகளின் வர்த்தகம் காரணமாக வைப்புத்தொகை அதிகரிப்பு, சுவிஸ் மற்றும் இந்தியர்களுக்கு இடையேயான வங்கிப் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு உள்ளிட்டவை வைப்புத்தொகை அதிகரிப்பதற்கு வழிவகுத்த காரணங்கள் என்றும் நிதி அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism