Published:Updated:

Tamil News Today: ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு... ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி! - உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க-பன்னீர்செல்வம் - பழனிசாமி
Live Update
அ.தி.மு.க-பன்னீர்செல்வம் - பழனிசாமி

14-12-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

14 Dec 2021 11 AM

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வாகினர். இந்த நிலையில், இந்தத் தேர்வு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக தேர்தலில் தலையிட்டுக் கண்காணிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

14 Dec 2021 9 AM

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நிலநடுக்கம்
நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தோனேசியாவின் மெளமரே அருகே 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் கடலில் பெரும் அலைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக, பசிபிக் சுனாமி எச்சரிகை மையம் எச்சரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS