Published:Updated:

ஊரடங்கு ஓராண்டு! - இன்ஃபோகிராபிக்ஸ்

இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்

ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) -23.9 சதவிகிதமாகக் குறைந்தது. வேலைவாய்ப்பு இன்மையும் அதிகரித்தது

ஊரடங்கு ஓராண்டு! - இன்ஃபோகிராபிக்ஸ்

ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) -23.9 சதவிகிதமாகக் குறைந்தது. வேலைவாய்ப்பு இன்மையும் அதிகரித்தது

Published:Updated:
இன்ஃபோகிராபிக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஃபோகிராபிக்ஸ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் 24, 2020 நள்ளிரவிலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், ஒரு ரீகேப்!

மார்ச் 26, 2020: கொரோனா நிவாரண நிதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மார்ச் 31, 2020: ரயில்வே அமைச்சகம், கொரோனா சிகிச்சைக்காக 20,000 ரயில் பெட்டிகளை தயார்ப்படுத்தத் தொடங்கியது. மார்ச் மாத இறுதியிலிருந்து நாடு முழுவதுமிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களுக்கு நடந்து செல்லத் தொடங்கினர்.

ஊரடங்கு ஓராண்டு! - இன்ஃபோகிராபிக்ஸ்

ஏப்ரல் 5, 2020: மார்ச் 22... முன்களப் பணியாளர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தச் சொன்ன மோடி, ஏப்ரல் 5-ம் தேதி மின் விளக்குகளை அணைத்துவிட்டு, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபமேற்றச் சொன்னார்.

ஏப்ரல் 13, 2020: கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடல், அம்பத்தூர் மின் மயானத்துக்கு தகனம் செய்யக் கொண்டுவரப்பட்டது. அப்போது அந்தப் பகுதி மக்கள், `கொரோனா பாதித்தவரை இங்கு தகனம் செய்யக் கூடாது’ எனப் போராட்டம் நடத்தினர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறின.

ஊரடங்கு ஓராண்டு! - இன்ஃபோகிராபிக்ஸ்

ஏப்ரல் 14, 2020: இந்தியாவில், 10,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஏப்ரல் 29, 2020: இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது. (1,008 பேர்).

மே 1, 2020: கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்த கிரீன், ஆரஞ்ச் Zone-களில் சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு. மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

மே 7, 2020 : அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்டுவருவதற்கான `வந்தே பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டது.

மே 16, 2020: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவைத் தாண்டி 85,940 என்ற எண்ணிக்கையைத் தொட்டது இந்தியா.

மே 17, 2020 : மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. உலக நாடுகளில் தொடர்ச்சியாக அதிக நாள்கள் ஊரடங்கு அறிவித்த நாடானது இந்தியா!

மே 19, 2020: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. அதிக கொரோனா தொற்றாளர்கள் இருக்கும் மாநிலங்களில், தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடம் வகித்தது.

மே 31, 2020: இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,00,000-ஐ தாண்டியது.

ஜூன் 8, 2020: முதற்கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஐந்தாம் இடத்திலிருந்தது இந்தியா.

ஜூன் 17, 2020: கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் அதிகம் பேர் உயிரிழந்தது இந்த நாளில்தான். (2,003 பேர்).

ஜூலை 2, 2020: ஊரடங்கு அறிவித்து 100 நாள்கள் ஆகியிருந்தன. அன்றைய தேதி வரை இந்தியாவில் 6.04 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர், 17,834 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஜூலை 27, 2020: தமிழகத்தில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாள். (6,993 பேர்).

ஊரடங்கு ஓராண்டு! - இன்ஃபோகிராபிக்ஸ்

ஆகஸ்ட் 31, 2020: ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) -23.9 சதவிகிதமாகக் குறைந்தது. வேலைவாய்ப்பு இன்மையும் அதிகரித்தது.

செப். 16, 2020: இந்தியாவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாள். (97,894 பேர்).

அக்டோபர் 27, 2020: ஆறாம்கட்டமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. செப்டம்பர் மாதத்திலிருந்தே இந்தியா இயல்புநிலைக்குத் திரும்பியதுபோலவே இருந்தது. மக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தவறினர்.

ஜனவரி 4, 2021 : திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜனவரி 8-ம் தேதி இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டு, 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

மார்ச் 2021: மார்ச் மாத தொடக்கத்திலிருந்தே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மீண்டும் கொரோனா நம்மைச் சீண்டாமலிருக்க, ஊரடங்கு வராமலிருக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism