Published:Updated:

85 தலைப்புகள்...195 தேசிய கீதங்கள்... அசரவைக்கும் கூகுள் குழந்தை!

ஆராத்யா
பிரீமியம் ஸ்டோரி
ஆராத்யா

இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தா...’’ என்றோம் ஆராத்யாவிடம். “Uncle I love everyone uncle...’’ என்ற ஆராத்யாவின் முதல் வாக்கியம், அழகு. ‘

85 தலைப்புகள்...195 தேசிய கீதங்கள்... அசரவைக்கும் கூகுள் குழந்தை!

இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தா...’’ என்றோம் ஆராத்யாவிடம். “Uncle I love everyone uncle...’’ என்ற ஆராத்யாவின் முதல் வாக்கியம், அழகு. ‘

Published:Updated:
ஆராத்யா
பிரீமியம் ஸ்டோரி
ஆராத்யா

195 உலக நாடுகளின் தேசிய கீதங்கள் ஒவ்வொன்றாக மொபைலில் ஒலிக்க விடப்படுகின்றன. இசை தொடங்கிய இரண்டு, மூன்று நொடிகளிலேயே ‘ஆப்கானிஸ்தான்’, ‘அல்ஜீரியா’, ‘கொலம்பியா’ என்று அது எந்த நாட்டின் தேசிய கீதம் என்று சொல்லிவிடுகிறார் ஐந்து வயதுச் சுட்டி ஆராத்யா. இது மட்டுமல்லாமல் இந்திய வரலாற்று நிகழ்வுகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாநிலங்கள், இந்திய எல்லைகள், இந்திய மலைகள், நதிகள், தீவுகள், அணைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என்று கிட்டத்தட்ட 85 தலைப்புகளில் என்ன கேட்டாலும் கூகுள்போல குழந்தையிடமிருந்து உடனடியாகப் பதில் வருகிறது.

ஆராத்யாவின் பெற்றோர், கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் - இந்துமதி தம்பதி. ஐந்து வயதுக்குள்ளேயே, நினைவாற்றலுக்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தொடங்கி வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வரை இடம்பெற்று சாதனை படைத்துள்ள தங்கள் குழந்தை குறித்த பெருமிதம் அவர்கள் முகத்தில்.

இந்துமதி 85 தலைப்புகளில் கேள்விகள் கேட்க, பதிலளித்துக்கொண்டே வந்த ஆராத்யா, ‘சாப்பிட்டுட்டு அப்புறமா சொல்றேன்’ என்று பிரேக் விட்டார். சாப்பிட்ட பின்னர், குறும்பு மோடுக்குச் சென்று, பின் அவராக ஃபார்முக்கு வந்து, ‘சரி கேளுங்க...’ என்று மீண்டும் அமர்ந்தார். ‘கைதட்டி உற்சாகப்படுத்தினா ஆராத்யாகிட்ட இருந்து சடசடனு பதில் கொட்டுமே’ என்றபடி மீண்டும் ஆரம்பித்தார் இந்துமதி.

85 தலைப்புகள்...195 தேசிய கீதங்கள்... அசரவைக்கும் கூகுள் குழந்தை!

“இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது...” என்று இந்துமதி கேட்க, “ஸ்ரீநகர் டு கன்னியாகுமரி என்.ஹெச் 44” என்று உடனடியாகப் பதில் வந்தது. நாம் கைதட்டியதும் இன்னும் உற்சாகமானார். பிறகு, ஆண்டை குறிப்பிட்டு அப்போது என்ன நடந்தது என்று கேட்பது, படத்தைக் காண்பித்து இது என்ன என்று கேட்பது எனப் பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.

“இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தா...’’ என்றோம் ஆராத்யாவிடம். “Uncle I love everyone uncle...’’ என்ற ஆராத்யாவின் முதல் வாக்கியம், அழகு. ‘`அம்மா தான் எல்லாம் சொல்லிக்கொடுத்தா. எனக்கு இதெல்லாம் கத்துக்கிறது ரொம்பப் பிடிக்கும். அப்புறம் எனக்கு சர்ப்ரைஸ் பிடிக்கும், பில்லியர்ட்ஸ் விளையாடப் பிடிக்கும், பீச்ல விளையாடப் பிடிக்கும், பிரியாணி பிடிக்கும்... யம்மியா இருக்கும். பெரியவளானதும் நான் ஐ.ஏ.எஸ் ஆவேன்” - கம்பி மத்தாப்பின் நட்சத்திர பொறிபோல ஆராத்யாவின் பேச்சு.

பெருமிதம் பூக்க நம்பக்கம் திரும்பிய இந்துமதி, “நான் எம்.பில் முடிச்சிருக்கேன். என் கணவர் பிசினஸ் செய்றார். நான் ஊட்டச்சத்து ஆலோசகரா இருந்தேன். அஞ்சு வருஷமா ஆராத்யாவுக்காக எல்லாத்தையும் விட்டுட்டேன். ஆராத்யா ரொம்ப சுறுசுறுப் பான, அதிக அறிவுள்ள குழந்தை. அவளை போன், டி.வி-யில் மூழ்கடிக்கக் கூடாதுனு எப்பவும் அவளுக்கு ஏதாவது கத்துக் கொடுத்துட்டே இருப்பேன். ரெண்டு வயசு லேயே தலைவர்கள், நினைவிடங்கள்னு 1,000 படங்களைக் காண்பித்தால் பெயர்களைச் சொல்வா. மேப்ல மாநிலங்களோட பெயர் களைச் சொல்வா. அவ எல்.கே.ஜி போனப்போ, லாக்டெளன் வந்துடுச்சு. அவளுக்கு ஆன்லைன் வகுப்புகள் பிடிக்கலை. அதனால, எல்.கே.ஜி பாடங்களை நானே சொல்லிக்கொடுத்தேன். அந்த போர்ஷனை எல்லாம் மூணே மாசத்துல முடிச்சுட்டா. ரெண்டாம் அலையின்போது தான், இந்தியா குறித்து இன்னும் சொல்லிக் கொடுப்போம்னு ஆரம்பிச்சேன். மூணே மாசத்துல 85 தலைப்புகள் முடிஞ்சிடுச்சு. எதை சொல்லிக் கொடுத்தாலும் ரெண்டு முறைக்குப் பிறகு, அவ திருப்பிச் சொல்லிடுவா’’ என்றவர்,

‘`கிட்டத்தட்ட 200 கதை புத்தகங்களை நாங்க முடிச்சுருக்கோம். 2,500 வார்த்தைகள் அவளுக்குத் தெரியும். கடினமான வார்த்தை களைக்கூட தெளிவாக உச்சரிப்பா. எங்கே போனாலும் அது என்ன, இது என்னன்னு கேட்டுட்டே இருக்குற அவளுக்காகவே நாங்க நிறைய கத்துக்க ஆரம்பிச்சோம். தேசிய கீதங்களைப் பொறுத்தவரை ஆடியோவை போட்ட நொடியிலேயே நாட்டின் பெயர்களை சரியா சொல்வா. தேசிய கீதங்கள்ல வரும் அந்தந்த நாட்டின் மொழிகளை சரியான உச்சரிப்பில் அவ பாடும்போது எங்களுக்கே ஆச்சர்யமா இருக்கும்.

85 தலைப்புகள்...195 தேசிய கீதங்கள்... அசரவைக்கும் கூகுள் குழந்தை!

அவ சாப்பிட ஒரு மணி நேரம் ஆகும். அப்போவெல்லாம், தகவல்களை ஒரு உரையாடல்போல அவகிட்ட சொல்லிட்டே இருப்போம், அதை மனசுல வாங்கிக்குவா. அப்புறம் ஓடியாடி விளையாடும்போது, அதையெல்லாம் அவளா சொல்லிட்டே விளையாடுவா’’ என்றவர், இதற்காக குழந்தைக்கு எந்த அழுத்தமும் தருவதில்லை என்கிறார். “ஒரு குழந்தைக்கு அழுத்தம் கொடுத்து சொல்லிக் கொடுக்க முடியும். ஆனா, அழுத்தம் கொடுத்து ஞாபகம் வைத்துக்கொள்ள வைக்க முடியுமா? ஆராத்யாவுக்கு பிடிச்சாதான் கத்துக்குவா, அதை உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சா தான் சொல்லுவா. குழந்தையை நானும் கணவரும் எப்பவும் சந்தோஷமா வெச்சுக்கு வோம். அந்த சந்தோஷமான மனநிலையால தான் எதைச் சொல்லிக் கொடுத்தாலும் உடனடியா கத்துக்கிறானு நினைக்கிறோம்’’ என்று இந்துமதி சொல்லிக்கொண்டிருக்கும் போதே சதீஷ்குமார் தொடர்ந்தார்.

“எல்லா குழந்தைகளுக்கும் நிறைய திறமைகள் மறைந்திருக்கும். நாம அவங்க கூட நேரம் செலவிடுதைப் பொறுத்துதான் அது வெளிப்படும். பொதுவா, பல பெற்றோர்களும் மொபைல், டி.வியில வீடியோ போட்டுட்டுப் போயிடுவாங்க. படுக்கையிலகூட ஆளுக்கு ஒரு மொபைல் போனை எடுத்துட்டு, குழந்தை கையிலும் ஒரு போனை கொடுக்குறாங்க. மொபைல்ல நல்லதும் கெட்டதுமா குழந்தைகள் எவ்ளோ விஷயங்கள் கத்துக் கிறாங்க... அந்த ஆயிரமாயிரம் விஷயங்களை நாமளே அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்க முடியும் இல்லையா... அதைத்தான் நாங்க செய்யுறோம்’’ என்கிறார் சிம்பிளாக.

ஆராத்யாவுக்கு அன்பு முத்தங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism