Published:Updated:

2K kids: வளர்ப்பு... ஒரு பாடம்!

வளர்ப்பு... ஒரு பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
வளர்ப்பு... ஒரு பாடம்!

அர்ச்சனா.கா

2K kids: வளர்ப்பு... ஒரு பாடம்!

அர்ச்சனா.கா

Published:Updated:
வளர்ப்பு... ஒரு பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
வளர்ப்பு... ஒரு பாடம்!

சில மனிதர்களின் வாழ்வு, ‘இவரைப் போல வாழணும்’ என்று சிலருக்கு முன்னுதாரணம் ஆகிறது. சிலரின் வாழ்வோ, ‘இந்தத் தப்பை மட்டும் நாமளும் செய்திடக் கூடாது’ என்ற பாடமாக மற்றவர்களுக்கு அமைந்துவிடுகிறது. அப்படி நான் பார்த்து வளர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்து வந்த விவசாய தம்பதியர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகள். அவர் மூலமாக ஒரே பேரன். சில வருடங்களில் மகள் இறந்துபோக, பேரனை வளர்க்கும் பொறுப்பு இவர்களிடம் வந்தது. அம்மாவை இழந்த பிள்ளை என்பதால், அளவற்ற அன்புடன் அவனை அரவணைத்துக்கொண்டனர். அதே நேரம், வசதி படைத்த அந்தக் குடும்பத்துக்கு அவன்தான் ஒரே வாரிசு என்பதால், செல்லம் மிகுதியாகவும், ஒழுக்கமும் பொறுப்பும் குறைவாகவும் வளர்ந்தான்.

2K kids: வளர்ப்பு... ஒரு பாடம்!

வளர வளர, சிகரெட், குடி என எல்லா பழக்கங்களுக்கும் ஆளானான். ஐந்தில் வளையாததை அதன்பின் வளைக்க முடியுமா என்ன... தாத்தாவும் பாட்டியும் அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். அவர்கள் நிலத்தில் கிடந்துழைத்த பணமெல்லாம் அவனின் ஊதாரி செலவுகளுக்குச் சென்று கொண்டிருந்தது. ஒருபக்கம் அவன் குடிப்பழக்கம் அதிகரித்துக்கொண்டே வர, இன்னொரு பக்கம் தாத்தா, பாட்டியின் சேமிப்பு கரைந்து, வருமானமும் குறைந்து கொண்டே வந்தது.

ஒருகட்டத்தில், முதியவர்களின் விவசாய நிலங்கள், வாழ்ந்த வீடு என அனைத்தையும் விற்றுத் தொலைத்துவிட்டான். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்தவர்கள், சாலையோரம் புறம்போக்கு நிலத்தில் ஒரு சிறிய தகர குடிசையில் வாழ்ந்த காட்சி ஊரையே அதிர வைத்தது. அதன் அருகில் சிறிய பெட்டிக்கடை வைத்து வாழ்ந்தார்கள்.

2K kids: வளர்ப்பு... ஒரு பாடம்!

ஒரு கட்டத்தில், தாத்தா வயோதிகத்தால் படுத்த படுக்கையாக, தன் மூட்டுவலியுடன் அந்தப் பாட்டி, தெருக்களில் கிடக்கும் நெகிழிகளைச் சேகரித்து பழைய பேப்பர் கடைகளில் கொடுத்தும், அக்கம் பக்கத்தினரின் உதவியாலும் காலத்தை கடத்தினார். அந்தச் சூழலிலும் அவர்களை அடிக்கடி தொந்தரவு செய்து அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சி குடிப்பதற்காக வைத்திருக்கும் பணத்தையும் பறித்துச் செல்வது அவன் இயல்பு.

சிறிது காலத்தில் தாத்தா உயிரிழக்க, சாலை விரிவாக்கத்தில் புறம்போக்கு குடிசையும் பெயர்க்கப்பட, பின்னர் அருகில் இருந்த சிறு கோயிலில் வசித்தார் பாட்டி. அவர் உயிரிழந்த நாளில், ‘இது அவருக்கு ஒருவகையில விடுதலை’ என்று கண் கசிந்தது ஊர். எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்றும் அதே வாழ்க்கையைத்தான் தொடர்கிறான் பேரன்.

பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்காதவர்கள், பிற்காலத்தில் அதற்கான தண்டனையாகப் பிள்ளைகளால்

பாதுகாக்கப்படாமல் போகும் நிலைக்கு ஆளாவார்கள் என்பதை உணர்வோம்.

பிள்ளைகள் கைவிட்டால்... சட்ட நடவடிக்கை!

பெற்றோரைப் பாதுகாக்காத பிள்ளைகள் மற்றும் முதியவர்களைப் பேணிக் காக்காத பிள்ளைகள் மீதான சட்ட நடவடிக்கைகள் பற்றிச் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யா. ‘`பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ், பெற்ற பிள்ளைகளோ, பேரனோ, பேத்தியோ, வாரிசு இல்லா ஒருவரின் சொத்தை அனுபவிக்கும் உறவினர்களோ தனி வருமானம் இல்லா பெற்றோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரைக் காப்பது அவசியம்.

இச்சட்டத்தின் கீழ், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் சொத்துகளைத் திரும்பப் பெற முடியும். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125-ன்படி, தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவர் கைவிட்ட நிலையிலும் இருக்கும் ஒருவர், தன் மகன் அல்லது மகளிடம் நீதிமன்றத்தை அணுகி ஜீவனாம்சம் கோரலாம்.’’