Published:Updated:

2K kids: ‘வைரமுடைய நெஞ்சம் வேண்டும்!’ - ‘தன் நம்பிக்கை’ பச்சையம்மாள் பாட்டி

பச்சையம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பச்சையம்மாள் பாட்டி

அப்ரோஸ்.அ

2K kids: ‘வைரமுடைய நெஞ்சம் வேண்டும்!’ - ‘தன் நம்பிக்கை’ பச்சையம்மாள் பாட்டி

அப்ரோஸ்.அ

Published:Updated:
பச்சையம்மாள் பாட்டி
பிரீமியம் ஸ்டோரி
பச்சையம்மாள் பாட்டி

எத்தனையோ தன்னம்பிக்கை பேச்சாளர் களின் உரைகளைக் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் நம் ஒவ்வொருவரின் வீட்டில் உள்ள பெரியவர்களிடம், அவர்கள் கடந்து வந்த பாதையை அவர்களைப் பேசச்சொல்லிக் கேட்டாலே புரியும்... ஒவ்வொரு மனிதருமே ஒரு தன்னம்பிக்கை பேச்சாளர்தான் என.

அப்படி, ஆவடியைச் சேர்ந்த 68 வயதான பச்சையம்மாள் பாட்டியின் உரையைக் கேட்க நீங்கள் தயாரா?!

‘‘திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில பிறந்தேன். காந்தி பள்ளிக்கூடத்துல அஞ்சாம் வகுப்புவரை படிச்சேன். அங்க புதுசா வந்த ஒரு வாத்தியாரு ரொம்ப கண்டிப்பானவரு. அவருக்குப் பயந்து, அதுக்கு மேல படிக்கலை. ‘படிச்சுக்கோ, அப்போதான் பிழைச்சுக்க லாம்’னு அப்போ எனக்குச் சொல்லவும் யாரும் இல்ல. எங்க வீட்டுல மொத்தம் ஆறு புள்ளைங்க. மூணு ஆணு, மூணு பொண்ணு. எங்கப்பா பூ, காய்கறினு வித்துட்டு வந்தார். ரொம்ப வறுமையான குடும்பம். ஆனாலும், ‘வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். என்ன தான் வறுமை இருந்தாலும், கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் கடந்து வாழணும்’னு வீட்டுல கத்துக்கொடுத்தாங்க.

ஒரு கட்டத்துல வீட்டுல எல்லாருக்கும் பசி யாத்த முடியல. வீட்டுல ஆறு புள்ளைங்க இருந்ததால, கூடைபின்னுறது, கால்நடைத் தீவனம் தயாரிக்குறது, மண்பானை விக்குறது, ரெடிமேடு சப்பாத்தி செய்யுறதுனு ஆளுக் கொரு வேலையா பார்க்க ஆரம்பிச்சோம். நானும் பூ விக்கப் போனேன், அந்த வியாபாரத் தைக் கத்துக்கிட்டேன். கையில கொஞ்சம் காசு கிடைச்சது. அரும்பாடுபட்டு, பிள்ளை களுக்கு எல்லாம் ஒவ்வொண்ணா கல்யாணம் பண்ணி அனுப்பி வெச்சாங்க எங்கப்பா, அம்மா. எல்லாரும் அவங்கவங்க குடும்பத்தைப் பார்த்துக்கிட்டுப் போக ஆரம்பிச்சோம்.

பச்சையம்மாள் பாட்டி
பச்சையம்மாள் பாட்டி

நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த வீட்டுலயும், ‘வாடி ராசாத்தி’னு எனக்காகக் காத்திருந்துச்சு வறுமை. ஒருவேளை சாப் பாட்டுக்குக் கஷ்டப்பட்ட நாள்கள் எல்லாம் உண்டு. எங்களுக்கு நாலு பிள்ளைங்க. அதுகளும் எங்களை மாதிரி பசியில கிடக்கக் கூடாதுங்கிறதுக்காகவே, அரசுப் பள்ளிக்கு படிக்க அனுப்பி வெச்சேன். அங்க போடுற மதிய சாப்பாட்டை புள்ளைங்க சாப்பிட்டுக்கு வாங்க.

‘பசியும் பட்டினியுமாவே வாழ்க்கையை ஓட்ட முடியாது... சின்னதா ஏதாச்சும் வியாபாரம் செய்வோம்னு’னு மனசுல ஒரு எழுச்சி. கடன் வாங்கி ஒரு சின்ன கடை வெச்சேன். அதுல மண்பானை, அகல் விளக்குனு வித்தேன். பூவும் வாங்கிவெச்சு வித்தேன். தெனம் 100 - 150 ரூபாய் கிடைச்சது. அன்னன்னிக்குப் பொழுதுக்கு வழி கிடைச்சது. புள்ளைகள ஆளாக்கிவிட்டோம்.

என் மகள்களுக்குத் திருமணம் செஞ்சு வெச்சேன். நல்லா இருக்காங்க. ரெண்டு பையன்கள்ல ஒருத்தன் தையல் தொழில் செய்றான். இன்னொருத்தன் மாற்றுத் திறனாளிங்கிறதால அவனை நானே பார்த்துக்குறேன். இன்னிக்கு வியாபாரம் நல்லா போச்சுன்னா, அந்தப் பொழுதை பசியில்லாம தள்ளலாம். இல்லையினா, பக்கத்துல கடன் வாங்குவேன். அப்புறம் அதை அடைப்பேன். இப்புடியே வாழ்க்கை என்னைத் தள்ளிக்கிட்டு வந்துடுச்சு. நான் வாழ்க்கையைத் தள்ளிக்கிட்டு வந்துட் டேன்னும் சொல்லலாம்.

பார்க்காத கஷ்டமில்ல, நஷ்டமில்ல, துன்பமில்ல, துயரமில்ல. ஆனாலும், காசு இருக்கோ, இல்லையோ... புள்ள, குட்டி, குடும்பம்னு மகிழ்ச்சியாதான் இருந்திருக் கேன். தெனமும் நிம்மதியா தான் தூங்கியிருக்கேன்.

இந்த வாழ்க்கையைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி யைத்தான் சொல்லியிருக் கேன். ‘நீ ஏன் என்னை இப்படி வறுமையில பிறக்க வெச்ச, வறுமையோட வாழ வெச்ச, காசு, பணம் ஏன் கொடுக்கல?’னு சாமிகிட்ட ஒருநாளும் சண்ட போட்ட தில்ல. ‘நீ கொடுத்த கை, காலு, சொகம் எப்பவும் இருந்தா போதும், உழைச்சுப் பிழைச் சுக்குவேன்’னுதான் வேண்டி யிருக்கேன். காசு, பணம் வெச் சிருக்குறவனும் கடவுள் கிட்ட கையெடுத்து ஏதோ கேட்டுக்கிட்டேதானே இருக் கான்? அதனால, இருக் குறதுல நெறைஞ்சாதான் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும்.''

வைரம் உடைய நெஞ்சம் வேண்டும்... பச்சையம்மாள் பாட்டியைப்போல!