Published:Updated:

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

ஆரம்பத்துல, நானும் லெங்த்தி வீடியோக்களைதான் போட்டுட்டு இருந்தேன். வியூஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. 30 செகண்ட்ஸ், ஒன் மினிட் வீடியோக்கள் மக்களை ஈர்க்கும்னு தெரிய வந்துச்சு.

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

ஆரம்பத்துல, நானும் லெங்த்தி வீடியோக்களைதான் போட்டுட்டு இருந்தேன். வியூஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. 30 செகண்ட்ஸ், ஒன் மினிட் வீடியோக்கள் மக்களை ஈர்க்கும்னு தெரிய வந்துச்சு.

Published:Updated:
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

பார்த்துப் பார்த்து சப்ஜெக்ட் யோசித்து, பல மணி நேரம் உழைத்து வெளியிடும் யூடியூப் வீடியோக்களைவிடவும், பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் சில விநாடிகளில் கடந்துபோகும்படியான இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸுக்கு இன்று மக்கள் மத்தியில் மவுசு அதிகம். சர்வசாதாரணமாக மில்லியன் வியூஸை அள்ளும் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸில் கலக்கவென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸில் டிரெண்டில் இருக்கும் சிலரிடம் பேசினோம்.

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

ஜெனி, சென்னை

``ஆரம்பத்துல ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சு. Hacks and Challenges பண்ணிட்டிருந்தேன். ஒருநாள் வித்தியாசமான கெட்டப்ல ஏதாவது பண்ணலாம்னு தோணுச்சு. அதுக்காகவே தனியா புது சேனல், அதுல ரீல்ஸ்னு புதுசா முயற்சி செய்தேன். சப்ஸ்கிரைபர்ஸ் என்ன கமென்ட் பண்ணுவாங்களோனு கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு. பெரிய பயத்தோடதான் முதல் ரீல் வீடியோ அப்லோடு பண்ணேன். ‘உனக்கெதுக்கு இதெல்லாம்’னாங்க. ‘ஓவர் ஆக்டிங்’னு கலாய்ச்சாங்க. நெகட்டிவ் கமென்ட்ஸை தள்ளிட்டு பாசிட்டிவ் கமென்ட்ஸை மட்டும் எடுத்துக்கிட்டேன். அடுத்தடுத்த வீடியோவுல என் தவறுகளை நானே சரிசெய்தேன். தொடர்ந்து வீடியோ போடப் போட என் ரீல்ஸ், ஷார்ட்ஸுக்கு செம ரீச் கிடைச்சது. ‘வேலன்டைன்ஸ் டே அலப்பறைகள்’னு நான் போட்ட வீடியோக்கு 11 மில்லியன் வியூஸ் கிடைச்சுது. என்னோட ஷார்ட்ஸ் வீடியோக்கள் அசால்ட்டா மில்லியன் வியூஸ் வாங்கிடுது. இப்பல்லாம் விடிய விடிய தூங்காம, கன்டென்ட் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிருக் கேன். தினம் ஒரு கெட்டப், அதுக்கான அக்ஸஸரீஸ்னு தேடிப் பிடிக்கிறது கஷ்டமாதான் இருக்கு. அதையெல்லாம் தாண்டி அம்மா, அப்பா, தம்பியோட சப்போர்ட்டும், சப்ஸ்கிரைபர்ஸோட பாசிட்டிவ் கமென்ட்ஸும் அடுத்து என்னன்னு தேடி ஓட வெச்சிடும். அடுத்து டிராவல் வீடியோவுல குதிக்கப் போறேன்.’’

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

ஷர்மிளா, திருநெல்வேலி

``ஆரம்பத்துல, நானும் லெங்த்தி வீடியோக்களைதான் போட்டுட்டு இருந்தேன். வியூஸ் ரொம்ப கம்மியா இருந்துச்சு. 30 செகண்ட்ஸ், ஒன் மினிட் வீடியோக்கள் மக்களை ஈர்க்கும்னு தெரிய வந்துச்சு. நியூ இயர் டைம்ல ஆன்லைன் கிளாஸை கலாய்த்த ஷார்ட்ஸ் வீடியோ 12 மில்லியன் வியூஸ் அடிச்சுது. ஒன் மினிட் வீடியோக்கள் பக்கம் போனதும் வியூஸும் சப்ஸ்கிரைபர்ஸும் அதிகமாகவே, அதுதான் எனக்கான ரூட்டுனு முடிவு பண்ணிட்டேன். என்னோட சின்ன வயசு சேட்டைகள்தான் கான்செப்ட். Snapchat, இன்ஸ்டாகிராம் ஃபில்டர்ஸ் யூஸ் பண்ணி கெட் டப்பை மாத்துவேன். இப்பல்லாம் பொது இடங்கள்ல என்னைப் பார்க்குற குழந்தைங்க `ஷர்மி அக்கா’னு ஓடிவரும்போது உண்டாகுற சந்தோஷம் வேற லெவல். இந்த அன்புக்காகவே இன்னும் நிறைய என்டர்டெயின் பண்ணணும்னு ஒரு பொறுப்பு கூடவே வந்துடும். அடுத்து Vlog, Challenge பக்கம் ஒரு ரவுண்டு வரலாம்னு யோசிச் சிட்டிருக்கேன்.’’

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

நிவேதா, சென்னை

‘`வீட்டுல தொணதொணன்னு பேசிட்டே இருப்பேன். அதனாலயே நான் ஆரம்பிச்ச யூடியூப் சேனலுக்கு `blah blah girl'னு பேர் வெச்சிட்டேன். தினசரி வாழ்க்கையில நடக்குற காமெடிகளை வெச்சு ரீல்ஸ், ஷார்ட்ஸ் போடத் தொடங்கினேன். கெட்டப் போடறதுக்கு முதல்ல கொஞ்சம் தயங்கினேன். நாம போடற கெட்டப்பை பார்த்துட்டு கழுவிக் கழுவி ஊத்தப் போறாங்கன்னு பயந்தேன். ஆனா, அதுக்கு நேர் மாறா மக்கள் ரொம்பவே பாராட்டினாங்க. பையன் கெட்டப்னா, அப்பா சட்டையோட முகத்துல மீசை வரைஞ்சு ரெடி ஆயிடுவேன். கெட்டப் போடறதைப் பார்த்துட்டு, `சொந்தக்காரங்க என்ன சொல்வாங்க... நாளைக்கு கல்யாணம் ஆகுமா’ன்னு அம்மா பயந்தாங்க. என் வீடியோஸுக்கு வியூஸும் சப்ஸ்கிரைபர்ஸும் ஏறவே அம்மா அமைதியாயிட்டாங்க. குறிப்பா, ‘எக்ஸாம் பேப்பர் டிஸ்ட்ரிபியூஷன்’ வீடியோ 3 மில்லியன் வியூஸ் அள் ளுச்சு. இனிவரும் காலத்துல நிறைய ஃபன் பண்ணுவோம்... வெயிட் பண்ணுங்க.’’

பண்றோம்... பின்றோம்... ஷார்ட்ஸ், ரீல்ஸில் கலக்கும் யூத்!

ஸ்ரீமதி சீமு, சென்னை

``சின்ன வயசுலயே கேமரா முன்னாடி பேசற ஆசை இருந்தது. ‘ஹலோ மக்களே வெல்கம் டு மை சேனல்’னு பேசிப் பேசி பயிற்சி எடுத்திருக்கேன். எம்பிஏ என்ட்ரன்ஸ் எக்ஸாம் அன்னிக்கு யூடியூப் சேனல் ஆரம்பிக்கிற ஆசை வந்துச்சு. ஆரம்பகால வீடியோவெல்லாம் ஆயிரம் வியூஸை தொடவே ஒரு வாரமாயிருக்கு. ‘தங்கச்சி சோதனைகள்’னு நான் போட்ட வீடியோ சீரிஸ் பெருசா ரீச் ஆகவே, விதம்விதமான கெட்டப் போட ஆரம்பிச்சேன். ஃபங்ஷன் போயிட்டு வரும் பெண்களின் மேக்கப் காமெடி பற்றி நான் போட்ட வீடியோ 9.5 மில்லியன் வியூஸ் போச்சு. ஃபில்டர்ஸ் யூஸ் பண்ணாம முடிஞ்சவரை நானே கேரக்டரா மாறி நடிச்சிடுவேன். எந்த கேரக்டர் பண்ணவும் தயங்கவே மாட்டேன். என் ரீல்ஸ் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கறதா சொல்றதைக் கேட்கறபோது அப்படி இருக்கும். குறிப்பா கேன்சர் பாதிச்ச ஒரு பையன் எப்போதும் என் ரீல்ஸ் பார்த்திட்டிருப்பான்னு ஒரு டாக்டர் சொன்னபோது உருகிட்டேன். புதுசா நிறைய பிளான்ஸ் இருக்கு. மீட் யூ சூன்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism