Published:Updated:

லைக்... கமென்ட்... ஷேர்... சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

விறகு அடுப்பில்தான் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். அந்த சமையலறை இருள் அப்பி, கண்மை டப்பாபோல் காட்சியளிக்கும்.

லைக்... கமென்ட்... ஷேர்... சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

விறகு அடுப்பில்தான் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். அந்த சமையலறை இருள் அப்பி, கண்மை டப்பாபோல் காட்சியளிக்கும்.

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

Whatsapp

ராஜாராணி ஓடிட்டிருந்தது. நயன்தாரா போன் நம்பர் ஆர்யாகிட்ட சொல்லுவா. இந்த மாதிரி படத்துல வர்ற நம்பரை கால் பண்ணிப்பார்க்கணும்னு தோணுச்சு. இன்னிக்கு பண்ணிட்டேன். ரொம்ப நேரம் ரிங் போய் ஒரு ஆண் குரல்தான் கேட்டது. ராங் நம்பர்னு வச்சிட்டேன்.

mozhi221087

எல்லா மிருகத்தையும் கூண்டுக்குள்ள அடைக்கிற மனிதன்...

கொசுவுங்கு பயந்து வலைக்குள் ஒளிஞ்சு கிறானே.. அதுதான் சார் வாழ்க்கை. பயப்படுறது எல்லாம் பயம் இல்லை... பயம் எல்லாம் பயப்படுவது இல்லை.

RajaAnvar_Offic

ஆல்பங்களில் சந்தோஷங்களை உறைய வைத்த புகைப்படங்கள், செல்போன்களால் குறையத் தொடங்கியிருக்கிறது!

லைக்... கமென்ட்... ஷேர்... சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

pandi_prakash

காலம் பதில் சொல்லும் என்று எல்லா நேரமும் கடந்துவிடாதீர்கள்; சிலவற்றுக்கு

நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

selvachidambara

கடித்து,நொறுக்கி,உடைத்து ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆயிரம் முறை மெல்லும் அந்த கூர்மையான பற்களிலிருந்து கெட்டிக்காரத்தனத்துடன் நாக்கை பாதுகாக்கத் தெரிந்த மனிதன்,

அதே நாக்கை மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தாமல் பாதுகாக்க தெரிவ தில்லை.

Suyanalavaathi

மேனேஜர்: இப்ப எதுக்கு அழுகுற...

``பிறகு என்னங்க... நானே வீட்டுல பிள்ளைங்கள விட்டுட்டு வேலைக்கு வரேன்... வேல பாக்க சொல்லி திட்டுறீங்க.''

Kozhiyaar

கரப்பான் பூச்சியை அழிக்கவே முடியாது என்று நன்கு தெரிந்திருந்தும், கலர் கலராக HIT அடித்துக் கொண்டிருப்பது போல்தான், சில மனிதர்களுக்கு அறிவுரையும்!

karna_sakthi

நம்ம மொபைல்ல ஒட்டியிருக்க Screen Protector என்னதான் ஒடஞ்சு, ஸ்க்ராச் ஆகி, சிதறல்களோட இருந்தாலும், நம்ம மொபைல் Display-க்கு ஒண்ணும் ஆகலங்கிற ஆறுதலோட அதை அப்படியே பயன் படுத்துறோம்ல? அதுபோலத்தான் நம்ம துன்பங் களையும் மீறி நாம வாழணும்.

g4gunaa

பொடியன் ரெண்டு அவிச்ச முட்டையை கப்புல வெச்சி தின்னுட்டுருந்தான். பசியா இருக்குனு ஒன்றை எடுத்து முழுங்கிட்டேன்.

“இவ்ளோ சீக்கிரம் சாப்புட்டியா... வழக்கமா லேட் பண்ணுவியே”னு என்கொயரி வெச்சிட்டுருக்கா அவங்கம்மா.

கேசுவலா இருப்போம்.

லைக்... கமென்ட்... ஷேர்... சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

bommaiyamurugan.murugan

எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக SETC பஸ்கள் இரண்டே வகைகள்தாம்... ஒண்ணு மூடியிருக்கிற ஜன்னல தெறக்க முடியாது... இன்னொன்னு தெறந்திருக்கிற ஜன்னல மூட முடியாது!

magendran.Gandhimathi

விறகு அடுப்பில்தான் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். அந்த சமையலறை இருள் அப்பி, கண்மை டப்பாபோல் காட்சியளிக்கும். விறகை சீரான இடைவெளியில் நெருப்புக்கேற்றவாறு அணைந்து விடாமல் முன் பின் என நகர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். காய்ந்த விறகுகளுக்கு இடையில் பச்சை விறகுகளும் வந்துவிடும். நீர் கோத்து படுக்கை வசத்திலான நிலக்கரி எஞ்சின் போல் அது புகை கக்கிக்கொண்டிருக்கும். சமையலறையின் உள்ளே அம்மாவின் முகம் அத்தனை எரிச்சலைக் கொண் டிருக்கும். பிய்ந்து விடாத தோசையோ, உப்பி வரும் பூரியோ கேட்டால், ‘வர்றத தின்னு பக்கத்துலயே உக்காந்து உயிர வாங்காத எந்திருச்சு போ இங்கேர்ந்து’ என்பார். உப்பலான பூரி வராததன் காரணம் சீரில்லாத நெருப்பின் ஜுவாலைகள்தான் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது. அம்மாவை குறைபட்டுக் கொள்வோம். அந்த அறையே அனல் தகிக்கும் கூடாரம்தான். நெருப்பெரிகிறதோ இல்லையோ அனல் இருந்துகொண்டே இருக்கும். இந்த அனல்தான் அம்மா எங்கள் மேல் எரிந்து விழ காரணமென்பது அப்போதெல்லாம் தெரியாது. அவரின் இயல்பே இதுதானென்றிருந்தோம்.

கேஸ் ஸ்டவ்கள் பரவலாகிவிட்டிருந்த 90-களின் முற்பகுதியில் எங்கள் வீட்டிலும் அதை வாங்க முடிவு செய்யப்பட்டது. அம்மாவுக்கு துளி விருப்பமும் இல்லை. உண்மையில், மிகவும் பயந்தார். கேஸ் ஸ்டவ் வெடித்துவிடும் எனத் திடமாக நம்பினார். ஆட்டோமேட்டிக் ஸ்டவ்கள் உண்டு, ரெகுலேட் டரை திருகினால் பற்றிக்கொள்ளும் வகையது அதை வாங்கிக்கொள்ளலாம் என்றபோது அரை மனதாய் சம்மதித்தார். பிற்பாடு, அதை வாங்கிக் கொள்ளவில்லைதான். லைட்டரை தயார் நிலையில் வைத்துக்கொண்டு மிக பவ்யமாக ரெகுலேட்டரை திருகுவார். காலப்போக்கில் ஆன் செய்துவிட்டு லைட்டரை தேடும் அலட்சியத்தை தொட்டிருந்தார். அதிகமான உபகரணங்கள் செய்யும் இயந்திரம் காலப்போக்கில் நமக்கு

நல்ல நண்பனாகிவிடும். அம்மாவுக்கு, கேஸ் ஸ்டவ் அப்படியான நண்பனாகி விட்டிருந்தது. ஹோட்டலில் செய்வது போன்ற முறுகலான தோசையும்,

உப்பிய பூரியும் கிடைக்கப்பெற்றோம். சமையலறை டைல்ஸ்களால் அலங்கரிக் கப்பட்டது. அம்மா முகத்தில் நிரந்தரமாய் குடிகொண்டிருந்த எரிச்சல் நீங்கி, புன்னகைக்க ஆரம்பித்தார், சமையலறைக்குள் எங்களை அனுமதித்தார். நேரம் மிகவே, புத்தகம் வாசித்தார், சீரியல் பார்த்தார். அதிகாலை வரை தூங்கினார். அம்மா என்றாலே கடுமையான முகத்தில் அடுக்களையில் அமர்ந்து கொண்டு விறகுகளைத் தள்ளிக் கொண்டிருக்கும் சித்திரம் மறைந்து வெவ்வேறு இடங்களில் புன்னகைக்கும் சித்திரம் தென்பட்டது. என்னைப் பொறுத்தவரை, கேஸ் ஸ்டவ் என்பது மிக மெலிதாக நிகழ்ந்த மாபெரும் புரட்சி.

திடும் திடுமென விலையேறிக்கொண்டிருக்கும் சிலிண்டரின் விலை பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்த வேளையில்... சோஷியல் மீடியாவில், கேஸ் ஸ்டவ்வில் சமைப்பதால்தான் நீரழிவு நோய் வருகிற தென்ற அபத்த கருத்தை உளறும் பைத்தியங்களும் மண் அடுப்புகளின் சிறப்புகள் குறித்து விவாதிக்க தொடங்கும் காரியக்கார கிறுக்கர்களும் மிக மிக ஆபத்தானவர்கள். மிக ஆரம்பத்திலேயே அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism