Published:Updated:

மதுரை விகடன்: ஆயிரம் முகங்கள்!

பதினைந்து வருடங்களாக மதுரையையும் அதன் அடுக்குகளையும் இயல்பு மாறாமல் புகைப்படம் மற்றும் ஓவியங்களின் மூலம் கலை வடிவமாக தொடர்ந்து பதிவுசெய்து வரும் கட்டட வடிவமைப்பாளர்.

பிரீமியம் ஸ்டோரி

ஆயிரம் முகங்கள்!

“இஸ்தான்புல் நகரத்துக்குள்ள போனால் ஆயிரம் கதைகளோட வெளிவரலாம்னு சொல்லுவாங்க. கிட்டத்தட்ட அதே அமைப்போடதான் மதுரையையும் நான் பார்க்குறேன். வைகைப்பாலத்தைத் தாண்டி மாசி வீதிகளுக்குள்ள போயிட்டு வந்தோம்னா ஆயிரக்கணக்கான முகங்கள். அத்தனைக்கும் பின்னால் சுவாரஸ்யமான கதைகள்னு விரிஞ்சு கிடக்கும். அந்த முகங்கள், அதை ஒட்டிய கலாச்சாரம்... இது தான் இன்னமும் என்னை இயக்கிட்டு இருக்கு!”- கண்கள் விரியப் பேசுகிறார் வல்லபாய் அருணாச்சலம்.

பதினைந்து வருடங்களாக மதுரையையும் அதன் அடுக்குகளையும் இயல்பு மாறாமல் புகைப்படம் மற்றும் ஓவியங்களின் மூலம் கலை வடிவமாக தொடர்ந்து பதிவுசெய்து வரும் கட்டட வடிவமைப்பாளர். இவர் வரைந்த ஓவியமே ‘நம்ம விகடன் - மதுரை’ அட்டைப்படமாக இடம்பெற்றுள்ளது.

மதுரை விகடன்: ஆயிரம் முகங்கள்!

ஆக்டர்... நம்ம அமைச்சர் தம்பி!

பரபரப்பான அமைச்சராக அறியப்படும் ஆர்.பி.உதயகுமாரின் தம்பி, எந்தவொரு ஆர்பாட்டமுமில்லாமல் அமைதியாக திரைப்படங்களில் கிடைக்கிற வேடங்களில் நடித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? திரைப்பட வட்டாரங்களில் யோகி என்றழைக்கப்படும் யோகேஸ்வரனுக்கு சிறு வயது முதல் சினிமா மீது காதல். அமைச்சரான அண்ணனுக்கு உதவியாக இருந்தவர், சில வருடங்களுக்கு முன் ‘பதினெட்டாங்குடி’ என்ற படத்தை தயாரித்தார். அதில் காமெடி கேரக்டரில் நடித்தார். இதை பார்த்து கொம்பன், மருது, கடைக்குட்டி சிங்கம் என் பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியலிலும் நடித்துள்ளவர், உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மதுரை விகடன்: ஆயிரம் முகங்கள்!
மதுரை விகடன்: ஆயிரம் முகங்கள்!
மதுரை விகடன்: ஆயிரம் முகங்கள்!

மதுரையின் `ஆத்தாடி' ரகசியங்கள், மதுரையின் ரியல் தளபதிகள் - அடுத்த இதழில்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு