neander.selvan
பெரிய மகள் போன மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டில் எல்லாம் வேலை செய்ததால் கூடுதலாக சம்பளம் கொடுத்தார்கள். பள்ளி முடிந்து போகும் பார்ட் டைம் வேலைதான்.
அத்துடன் குக்கிகளை ஒரு பாக்ஸில் போட்டு கொடுத்திருந்தார்கள். செக்கை என்னிடம் கொடுத்துவிட்டாள். குக்கி பாக்ஸ் டேபிள் மேல் இருந்தது
என் கெட்ட புத்தி என்னை விட்டு எங்கே போகும்? எல்லாரும் தூங்கியபின் குக்கிகளை தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன்
காலை எழுந்து ஒரே சண்டை, ``ஒரே குக்கி சாப்பிட்டுட்டு மீதியை என் பிரண்ட்ஸுக்குக் கொடுக்கலாம் என இருந்தேன். அதுக்குள் தூக்கி போட்டுட்டாய்” என.
“தப்புக்கு பரிகாரமா ஒரே ஒரு குக்கி வாங்கி கொடுக்கட்டுமா?”
“குக்கி வேண்டாம். டோநட்.”
சரின்னு பக்கத்தில் இருக்கும் க்விக் ட்ரிப் பெட்ரோல் நிலைய கடைக்குக் கூட்டி போனேன். ஒரு டோநட் பில் போட்டு $1.10 கொடுக்கையில் எனக்கே பாவமா இருந்தது. சம்பாதிச்ச காசை எல்லாம் அப்படியே கொண்டுவந்து கொடுத்துட்டு ஒரு டாலர் குக்கியை சண்டை பிடிச்சு வாங்கி சாப்பிடு கிறாள். அவள் எனக்கு கொடுத்த காசில் டப்பா, டப்பாவா குக்கி வாங்கி சாப்பிட்டு இருக்கலாம். பதினெட்டு வயசு ஆகியும் இன்னும் மாறாம இருக்காள்.
குற்ற உணர்ச்சி தாங்காமல் “வேற எதாச்சும் வாங்கிக்க” என்றேன்.
முகத்தில் உடனே ஒரு மலர்ச்சி... ``சாயந்திரம் வருகையில் வெள்ளரிக்கா பிக்கிள் வாங்கிட்டு வா.”
இப்படி இன்னசன்ட் ஆக இருந்தால் என்ன செய்வது என எல்லாம் யோசித்து குழம்பவில்லை. அவள் இன்னசன்ட் எல்லாம் கிடையாது. என்னை விட விவரம். சொல்ல போனால் எந்த பெண்ணும் இன்னசன்ட் எல்லாம் கிடையாது. அவர்களுக்கு யாரிடம் அன்பு இருக்கோ... அவர்களிடம் மட்டுமே அந்த இன்னசன்ட் வெளிப்படும்.
அப்படி உங்களை முழுமையாக நம்பும் பெண்களின் இன்ன்சன்ஸை அழிக்காமல் கடைசிவரை அன்பாக இருக்கமுடிந்தால் நீங்கள் நல்ல அப்பா, நல்ல கணவர், நல்ல மகன்.
manipmp
இணைய வழி இலக்கிய கூட்டத்தில் ஆகப்பெரிய சவுகரியம் என்னவென்றால் சுதந்திரமாய் கொட்டாய் விட அனுமதிப்பதே!
manushya.puthiran
‘அண்ணே’ என்பவனுக்கும்
‘ப்ரோ’ என்பவனுக்கும் இடையில்தான்
எத்தனை தூர இடைவெளி?
இரண்டு கிரகங்களின் மனிதர்கள்போலகாட்சியளிக்கிறார்கள்
எல்லோரும் எல்லோரை
‘மாப்ளே’ என்றோ
‘மாமா’ என்றோ
அழைக்கும் ஊரிலிருந்து ஒரு மஞ்சள் பையோடு வருகிறேன்.
இந்த ‘ ஜி’ யை எப்படி எதிர்கொள்வதெனத்
தெரியவில்லை...
அழைக்கும்போதே திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்தை தந்துவிடுகிறார்கள்.
revathy.ravikanth
ஒரே நாளே திரும்ப திரும்ப நடந்தா எப்பிடியிருக்கும்...
காணுங்கள் மாநாடு - வெங்கட்பிரபு.
ஹவுஸ் வைஃபு லைஃபு தெரியுமா பாஸ்!
Kozhiyaar
‘ஏன் பேசினோம்?’ என்ற சூழ்நிலையும்,
‘ஏன் பேசவில்லை?’ என்ற சூழ்நிலையும்
மாறி மாறி வாழ்க்கையில் வந்து தொலைத்துக்கொண்டே இருக்கின்றன!
Kozhiyaar
ஒருசில பெரியவர்களுக்கு
மகனோ, மகளோ மருத்துவமனைக்கு அழைத்துசெல்வதே நோயை பாதி தீர்த்து விடுகிறது!
manushya.puthiran
இன்றைய தேவ வாக்கு...
உன்னிடம் இரண்டு டோலோ 650 இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு.
pachaiperumal23
வீட்டுக்குள் நுழையும்போது
புன்னகையையும்
வெளியே செல்லும்போது
பொறுமையையும்
மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்...
வாழ்க்கை நன்றாக இருக்கும்.
FareethS
முன்னெல்லாம் யாருக்காவது கால் பண்ணா...
முன்னாடி இருமல் சத்தத்தோட கொரோனா விளம்பரம் வரும்...
இப்போ கால் அட்டன்பண்ணுற ஆளே இருமுறாங்க.