Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

interestingபரவால்ல கேரி பேக்கை தலைல போட்டு போயி பழகிக்கிறோம் ஜி..

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

interestingபரவால்ல கேரி பேக்கை தலைல போட்டு போயி பழகிக்கிறோம் ஜி..

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

i_akaran

வெற்றிக்கு முதல் படி தோல்வின்னு சொன்னவனதான் தேடிட்டு இருக்கேன்... மொத்தம் எத்தன படி ஏறணும்னு தெரிஞ்சே ஆகணும்!

கால் வலிக்குதுடா! டேய்...

Sabarish

பொய் சொல்ல கூடாதுன்னு நினைக்கும் போதுதான் யாராவது நல்லாருக்கியானு கேட்கிறாங்க...

teakkadai1

சில விஷயங்களை நாம பந்தா / கெத்து /பெருமைன்னு நினைப்போம். பல வருஷம் கழிச்சு அது கிரிஞ்சுன்னு தோணும். ஆனா, அந்த வயசிலேயே அது கிரிஞ்சுன்னு உணர்ந்து விலகி கடந்தவன் நல்ல நிலையில் இருப்பான்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

sultan

பட்ஜெட்டில் குடைக்கான வரி 20 சதவிகித மாக உயர்வு ~ செய்தி

~ பரவால்ல கேரி பேக்கை தலைல போட்டு போயி பழகிக்கிறோம் ஜி..!

thug1one

ஒரு காலத்துல `சொந்த பந்தம் கூட

இருந்தா நெருப்புல நடக்கலாம்'னு பாட்டெல்லாம் பாடுனேன்...

அப்பறம்தான் தெரிஞ்சது... நெருப்புல நடக்க காரணமே, அவனுங்க கூட

இருந்தனாலதான்னு..!

sathisshzdoc

~ உள்ளாட்சியில மகளிருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எல்லாம் சரியா போயிட்டிருக்கா..?

~ போயிட்டிருக்குங்கய்யா…

~ யாருக்கு..?

~ மனைவி, மகள், மச்சினிச்சி, மாமி, மகனுக்கு பெண் கொடுத்தோர், அவர்கள் வீட்டில் பெண் எடுத்தோர்...

SanjaiGandhi

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% குடுக்கறதுக்கு முன்னாடி அனைத்துக் கட்சிகளின் பதவிகளிலும் 50% பெண்களுக்கு வழங்க சட்டம் போட்டிருக்கணும். எந்தக் கட்சியிலும் ஒரு பெண்கூட மாவட்ட தலைவ ராக இல்லை. வேட்பாளர் கிடைக்காம நிர்வாகிகள் தங்கள் வீட்டு பெண்களையே நிறுத்தறாங்க. கேலிக் கூத்து.

vinayaga.murugan.7

லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய முதல் பாடல் பற்றி அரிய தகவல் இது. 80-ன் தொடக்கத்தில் டிவி அந்தளவு வரவில்லை. குறைந்தளவு மக்களே டிவி பயன்படுத் தினார்கள். அப்போதெல்லாம் இலங்கை வானொலி, திருச்சி வானொலிதான் பிரபலம். இந்திப்பாடல்கள், தமிழ்ப்பாடல்கள் கேட்பதே பொழுதுபோக்காக இருந்தது. 1952-ல் இந்தி யில் வெளியான `ஆண்' என்ற திரைப்படம் தமிழில் ‘ஆண் முரட்டு அடியாள்’ என்று டப் செய்து வெளியிடப்பட்டது. இசை நௌசத், பாடல்கள் கம்பதாசன். அதில் தமிழ்ப் பாடல் களை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். யூடியூப்பில் பாடல்கள் உள்ளன. இந்தப் பாடல்களை எண்பதுகளில் வானொலிகளில் அதிகம் கேட்கலாம். அதுபோல சில பாடல்கள் அவர் தமிழில் பாடி படங்களில் இடம் பெறாமல் வானொலி, யூடியூப்களில் உள்ளன. தமிழில் இளையராஜாவுடன் இணைந்து மட்டும் அவர் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தியில் பாடியுள்ளார். எஸ்.பி.பி-யுடன் இணைந்து `ஏக் துஜே கேலியே' போன்ற இந்திப் படங்களில் பாடியுள்ளார். அவை எல்லாம் தமிழ்ப் பாடல்களாகவே கொண்டாடப்பட்டன.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

athishavino1

எடைக் குறைப்பாளர்கள் தீர்வாணையம்னு ஒன்று அமைக்க வேண்டும் போல... போன மாசம்தான் வாக்கிங் ஆரம்பிச்சாங்க... இந்த மாசமே எடை குறையலனு புலம்பினா எப்படி... பிப்ரவரி என்பது ஜனவரி சபதங் களின் கொலைக்காலம்.

NaveenFilmmaker/

தாலி, ஹிஜப் இரண்டையும் பெண்ணடிமைத்தனமாகவே நான் பார்க்கிறேன். ஆனால், எப்படி தாலி கட்டடிக்கக் கூடாது என்று நிர்ப்பந்திக்க முடியாதோ, அப்படியே ஹிஜப் அணியக் கூடாது என்றும் நிர்ப்பந்திக்க முடியாது. இஸ்லாமியராகப் பிறந்த என் தாய் பர்தா அணியவில்லை. இந்துவாகப் பிறந்த என் மனைவி தாலி கட்டிக்க மறுத்தார்.

ஆனால், அது இரண்டும் அவர்கள் எடுத்த முடிவு. யாருடைய ஆதிக்கத்தாலும் நிர்ப்பந்திக்கப்பட்டவை அல்ல. பெண்கள் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை அந்தப் பெண்களே முடிவு செய்ய வேண்டும். இதில் உத்தரவிட தந்தைக்கோ, கணவனுக்கோ இந்த சமூகத்துக்கோ உரிமை இல்லை.

teakkadai1

நாம எந்த அளவு ஒரு Sophisticated ஆன Life Style-க்கு வந்திருக்கோம்கிறதையே புரிஞ்சுக்காம பல பேர் ஏன் பின்னோக்கிப் போகணும்னு நினைக்கிறாங்க? ஆண்-பெண் சமம், சமுதாயத்தில் எல்லோரும் சமம்கிற நிலை வந்துட்டா ஒருவன் தன் தனித்திறமை யால்தான் தனிச்சுத் தெரிய முடியும்கிற பயம் தான். உயர்ந்தவன்னு எங்கேயும் நிரூபிக்க முடியாம போயிடுமோன்னு ஒரு உளச்சிக்கல்.