drkrvcvijay
தூங்கும் போது இடியே விழுந்தாலும் எந்திரிக்காத husband ஐயும், shelf-அ திறக்குற சத்தம் கேட்டாலே எந்திரிக்குற wifeஐயும் கடவுள் எப்படிதான் match பன்றாரோ...
mohanramko
இவங்க கிட்ட இதான் பிரச்னையே... வச்சா ஒரே நாள்ல 4 கல்யாணத்தை வச்சிட றாங்க, எங்கே டிபன் சாப்பிடறதுன்னே தெரியலை.
RsRaviramesh8
பாதி வாழ்க்கை முடிந்த பிறகு தான்
மீதி வாழ்க்கை
எப்படி வாழ வேண்டும் என்று புரிகிறது




Primya Crosswin
வாழ்ந்த வீடு கை மீறிப் போகின்றபோது
தலைகுனிந்து நிற்கின்ற தகப்பனின் முகத்திற்கெதிரே...
மண் உண்டியலை நீட்டும் பிஞ்சுக் கைகளாய்
தேற்றத்தெரிந்த மனங்கள்
உடனிருக்கின்ற வரையில்
வாழ்வை நகர்த்துவது அப்படியொன்றும் சிரமமில்லை..
Krithika
தனக்கு என்ன வேண்டும் எனத் தெளிவாக தெரிந்த பெண்ணைக் கண்டால் எல்லாருக்கும் ஒரு வித பயம்தான். ஏனென்றால் அவளுக்கு படிப்பிக்க எதுவும் இல்லை.
தனக்கு தேவையானதை அவளே வாங்கி கொள்கிறார், அவளுக்கு செல்ல வேண்டிய இடத்துக்கு, அவளே சென்று வருகிறாள்.
அப்படி ஒரு பெண்ணை வீண் உணர்ச்சி குழம்புகளில் மூழ்கடிக்க முடியாது, வெற்று மிரட்டல்களுக்கு அடிப் பணிய வைக்க முடியாது.
ஆனால், இங்கே முக்கால்வாசி பேருக்கு, அப்படி ஒரு பெண் தனக்கு தெரிந்த ஒரு பெண்ணாக இருக்கலாமே தவிர, தன் வீட்டில் இருக்கக் கூடாது.