Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

இந்திரா கிறுக்கல்கள்

நம்மைப் பற்றிய ரகசியங்கள் தெரிந்த கூட்டத்திலிருந்து தப்பித்தோடுகிறோம். யாருக்குமே நம்மைப் பற்றித் தெரியாதென்கிற இடத்தில் யாரிடமாவது நம் ரகசியங்களை சொல்லி அழ வேண்டுமெனத் தவிக்கிறோம். முரண் என்பது மனிதர்களுக்கே உரித்தானது.

bhavzmenon: சளைக்காம சண்ட செய்வோம்...
bhavzmenon: சளைக்காம சண்ட செய்வோம்...

teakkadai1

என்ன இருந்தாலும் வடிச்ச சாதம் மாதிரி வருமா? குக்கர் சாதம் டேஸ்டே இல்லை. எடுத்து வச்சா கட்டி ஆயிடுது என்று பலரும் புலம்பி இருப்பார்கள். குக்கரில் 3 விசில் வந்த உடன், அதிலேயே இளஞ்சூடான நீரை ஊற்றி 2-3 நிமிடம் கொதிக்க வைத்து பின் ஒரு பாத்திரத் திற்கு மாற்றி சோறு வடிப்பது போல வடித்து விடலாம். சோற்றுக் கஞ்சி முழுவதும் வடிந்து விடும். சோறும் ஒட்டாமல் உதிரி உதிரியாக எப்படி வடித்த சாதம் இருக்குமோ அப்படி இருக்கும். இதுக்கு நேராவே பாத்திரத்தில் வைத்து வேகவைக்கலாமே என்றால் குக்கரில் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் மேலும் காலை அவசரத்திற்கு செட் ஆகாது.

இந்த மெத்தட் ஒரு blended method. கூட சில நிமிட வேலை மட்டுமே. மேலும் சொல் பேச்சு கேட்காத பிள்ளைகளை நினைத்து புலம்பும்போது அந்தக்கால பெற்றோர்களைப் போல வடிச்சு வடிச்சு கொட்டினேனே என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

khushsundar: 22 வருஷ லவ்ஸ்...
khushsundar: 22 வருஷ லவ்ஸ்...

teakkadai1

நாம சரின்னு நம்பினத தவறுன்னு காலம் காட்டும் போது, அதை எவ்வளவு விரைவா ஏத்துக்கிட்டு நகருகிறோமோ அந்த அளவிற்கு நல்லது. ஈகோவால அது சரிதான்னு மெய்ப்பிக்கிறதல நேரம் செலவு பண்றது வேஸ்ட்.

saravankavi

மழை பெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடுவார்கள் என்று எதிர்பார்க்கும் மாணவர்கள் மனநிலைக்கு ஈடானது ஏதாவது மாநிலத்தில் தேர்தல் வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ஏற்ற மாட்டார்கள் என்ற மக்களின் மனநிலை!

amuduarattai

ஞாயிற்றுக்கிழமைகள் இல்லாமல் போயிருந்தால், திங்கட்கிழமைகள் இத்தனை சாபங்களை பெற்றிருக் காது.

star_nakshatra

“சேலை சூப்பர்” , “எப்டி அப்டியே இருக்க” எனும் இரண்டு பொய்கள் இல்லாமல் நிறைவடைவதில்லை...சில விசேஷங்கள்

talksstweet

ஆண்கள் தன் மனைவியிடம் செல்லும் மகத்தான பொய்... “உன்கிட்ட பொய் சொல்வேனா செல்லம்” என்பதேயாகும்.

tamil_rithika: மகளிர் தினம் வித் சைலஜா டீச்சர்...
tamil_rithika: மகளிர் தினம் வித் சைலஜா டீச்சர்...

Vijay Mani

Mom: பேசுனா தீராத சண்டை எதுவும் இல்ல. போர் தேவையில்லாத ஒண்ணு.

நீ ஏன் பக்கத்துவீடுகூட பேசல..?

அவ சோப்பு போட்டா தண்ணி நம்ம வாசல் பக்கம் வருது... அதான்.

வாசகிகளிடம் இருந்து சிறுகதைகளை வரவேற்கிறோம்!

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதளம், சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

சிறுகதைகள், அவள் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism