Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

நடிகையை வாழ்த்துறேனு மத்தவங்களைக் கலாய்ச்சுட்டு இருக்கானுங்க.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நடிகையை வாழ்த்துறேனு மத்தவங்களைக் கலாய்ச்சுட்டு இருக்கானுங்க.

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

Elambarithi Kalyanakumar

பெரிதாக ஒன்றுமில்லை.

யாரேனும் ஒருவருடைய பிரார்த்தனையிலேனும் வாழ்ந்துவிட வேண்டும்.

என் கண்மணி...
என் கண்மணி...

Sohbana Narayanan

ஏதோ காத்துவாக்குல ரெண்டு காதலாமே...

2018 இப்படி எழுதி செம்மையா வாங்கிக்கட்டிக்கிட்டேன். 2022-ல மாறிட்டாங்களான்னு பார்த்தா... அட இல்ல... இன்னும் இதையே உருட்டிட்டு இருக்கானுக.

படித்துவிட்டு வந்து கும்மவும்.

கடவுளைக் கைப்பற்றியாவது

இழுத்து வரலாம்

என்று படக் கடைக்குச் சென்றிருந்தேன்.

வித விதமான

சட்டங்களுக்குள்

தரிசனம் தந்தவர்களுள்

யாரை வாங்குவது?

சோர்வான சிரிப்புடன்

ராமனும்

சோபயற்றவளாய் சீதையும்...

பாவமாய் இருந்தது.

இரு மனைவிக்கு நடுவில்

சிறிதும் கூச்சமின்றி முருகன்.

முப்பாட்டன் என்றார்கள்...

பாட்டி பற்றித் தகவலில்லை.

மறைத்து வைத்து

மனைவியுடன்

ஈசன்...

கங்கைக்கு தாகமில்லையா?

காதலியுடன் மட்டுமே

சிரிக்கும் கிருஷ்ணன்...

ஊரெல்லாம் காதலிகள்.

தனித்த காட்டுக்குள்

விநாயகனும் ஐயப்பனும்

ஆஞ்சநேயனுமாக

பெண்களை ஒதுக்கியவர்கள்

என் பூசை தேவையற்றவர்களாய்...

மகாலட்சுமியின்

அலங்காரம்

அவளைக் காட்டவில்லை...

இயல்பாய் இல்லை.

காளி மட்டும்

பெண்ணாய்...

அவளும் நாக்குத் தள்ளியபடி.

ஏங்க

ரெண்டு புருஷன்

இருக்கற பெண்சாமி இல்லிங்களா என்றேன்...

கடைக்காரன்

பார்த்த பார்வையில்

யுகம் யுகமான

கடவுள் சித்தாந்தங்கள்

சிதைந்து தூளாதலின் அச்சம் தெறித்தது

ஆணும் பெண்ணும்

சமமில்லாத கடவுளிடம்

என்ன கேட்டுவிட முடியும்?

யாராவது

எப்போதாவது பார்த்தால்

பார்க்க இயலும் என்று

தோன்றினால் சொல்லுங்கள்...

இரண்டு கணவனுடன்

அருள் பாலிக்கும்

பெண் கடவுள் படத்தை...

வந்து வாங்கிக்கொள்கிறேன்!

இது எப்டி இருக்கு?!
இது எப்டி இருக்கு?!

RavikumarMGR

சேகரு என்று கூப்பிட்டால் மிடில் கிளாஸ்...

ஷேக்கர் என்று அழைத்தால் அப்பர் மிடில் கிளாஸ்...

manipmp

சில பிரச்னைகள் எல்லாமே

“objects in the mirror are closer than they appear” ஆகவே தெரிகிறது.

Toshila Umashankar

நடிகையை வாழ்த்துறேனு மத்தவங்களைக் கலாய்ச்சுட்டு இருக்கானுங்க.

Limelightல இருக்கவங்க வேலையே தன்னை பேணிக்காப்பதுதான், நாலு மணி நேர gym,diet, protein, relaxing spa and treatments, prolonged rest on off days, skin care, botox அது இதுனு எல்லாமே அவர்கள் வாழ்வுக்கும் தொழிலுக்கும் மிக அவசியமான ஒன்று. இதில் தவறு ஒன்றும் இல்லை. கையில தட்டு குடுத்து சாப்பாடு பரிமாறி கை கழுவ mug குடுத்து tissue குடுத்து குறைந்த பட்சம் ஒன்றில் இருந்து ரெண்டு மூணு assistants பூப்போல பார்த்துக்கொள்வார்கள். ஏன்னா artist dressல கறைபட்டா, dress change பண்ண hair dress பண்ணனு நேர செலவு shooting delay எனப் பல இருக்கின்றன. முகம் வாடாம பார்த்துக்க tired ஆகாம இருக்க முடிந்தவரை பார்த்துக் கொள்வார்கள் because படம் முழுக்க பணம் கொட்டப் பட்டுருக்கு. இதை எல்லாம் மிக அழகா நேர்த்தியாக செய்றவங்கதான் நடிகர்கள். அதுவே தொழில் மரியாதை. அதில் அழகாகப் பயணிப்பவர்கள் inspirationதான் இல்லை என்று மறுக்க முடியாது

ஆனால், அவங்களையும் ரெண்டு புள்ளைய பார்த்துக்கிட்டு நேரத்துக்கு திங்காம, நேரத்துக்கு தூங்காம இருக்கிற பிள்ளைகளையும், குடும்பத்துக்கு உழைச்சுக்கிட்டு எதை எதையோ தியாகம் பண்ணி பார்த்து பார்த்து சேர்த்து வைக்க வேண்டிய அழுத்தத்துல இருக்கிற ஆள்களையும் compare பண்ணி body shaming பண்ணி கலாய்க்கிற உங்க அறிவ கண்டு வியக்குறேன்.

அக்காவும் நானும்...
அக்காவும் நானும்...

Karthika Kumari

கடந்த மூன்று நாள்கள் அப்பா ஊருக்கு போய்விட, அம்மா தனியாக இருக்கும் சூழல். முதல் நாள் நானும் பிரணவும் கூட இருந்துவிட்டு வந்தோம்.

மறுநாள் வகுப்பு முடிந்ததும் திரும்ப போகலாம் என்று சொன்னபோது முடியவே முடியாது என்றான். கேட்டால் ‘தாத்தா ஊரில் இல்லைன்னா பாட்டி ஜாலியா இருக்கட்டும். அவருக்கும் சமைக்க வேண்டாம். நமக்கும் எந்த வேலையும் செய்ய வேண்டாம். அவளுக்கு தோணுவதை செய்யட்டும்’ என்று விட்டான்.

அம்மா தொலைபேசியில் அழைத்து, ‘தனியா இருக்க எனக்கு போரடிக்கும் வாடா’ என்றபோது, ‘தனியா இருந்தா அது உங்களுக்கு me time. ஜாலியா இருங்க. Do grand ma stuff’ என்றான்.

‘நீ இல்லாம எனக்கென்ன பாட்டி stuff?’ என்று அம்மா மடக்கி கேட்க, ‘அப்படின்னா do ‘.......’ (அம்மா பேரை சொல்லி) stuff. Books வாசிங்க. தூங்கு. உங்களுக்கு பிடிச்சதை செஞ்சி சாப்பிடு. சாப்பிடாம மட்டும் இருக்காதே' என்று அசராமல் பதில் சொல்கிறான்.

ஒரு feminist ஐ தான் பெத்து வச்சிருக்கேன் போல...

பி.கு: அம்மா என்னவோ தோசை ஊற்றி சாப்பிட்டு விட்டு வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையைதான் செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism