Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நம் சமூகத்தைப் பொறுத்தவரை திருமண உறவை முறித்துக்கொள்ளும் முடிவை ஆணோ, பெண்ணோ அவ்வளவு எளிதாக எடுத்துவிடுவதில்லை.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நம் சமூகத்தைப் பொறுத்தவரை திருமண உறவை முறித்துக்கொள்ளும் முடிவை ஆணோ, பெண்ணோ அவ்வளவு எளிதாக எடுத்துவிடுவதில்லை.

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Elambarithi Kalyanakumar

பிறரை பாதிக்காத வகையில், ஏதேனும் ஒரு விஷயத்தால் யாரேனும் மகிழ்ச்சியடைந்தால் அதைக் கடந்துவிடுவது உத்தமம். ஏனெனில், நம்மைப்போல எல்லோருக்குமே இங்கு privileged வாழ்க்கை அமைந்து விடுவதில்லை.

Karthik

மனம்கசந்த பொழுதுகளில்,

சொல்லி அழுதால் போதும்

தேறிவிடுவோம் எனும் நிலைதனில்,

எம்முகம் நினைவில் தோன்றுகிறதோ

அங்குதான் இருக்கிறது உங்களின் வீடு.

Primya Crosswin

வாழ்ந்த வீட்டைவிட்டு செல்கின்றபோது, அந்தக் கொடி முல்லையை எல்லோரும் மறந்தேவிட்டார்கள். மெள்ள மெள்ள தன் நாள்களை எண்ணிக்கொண்டும், இன்னும் காயாத பக்கங்களில் பூத்துக்கொண்டும் கிடக்கும் மிக நீளமானதொரு மரணம் அதற்கு விதிக்கப் பட்டுள்ளது.

Sangeetha R

சேலை எடுத்துக்கிட்டு வந்தப்புறம்... நல்ல சேலை கண்ல படுறதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம்தெரியுமா?

 srubee: நாங்க
நாலு பேரு!
srubee: நாங்க நாலு பேரு!

மு.வி.நந்தினி

ஆற்றுப்படுத்துதல் பலன் தருமா என்றால், முழுமையாக முடியாது என்பதே என் பதில். இப்படியான முடிவெடுத்தால் இப்படியான பிரச்னைகள் வரும். இதை இப்படிச் செய்யலாம் என சில யோசனைகள் சொல்லலாம். ஆனால், அவரவர்தான் தன் சூழலிலிருந்து விடுபட வேண்டும். சில தோல்விகள் துயரமளிக்கக்கூடியவை தான். இல்லை நான் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது மோசமான மனநிலை. குறிப்பாக, திருமண உறவுகளில் பிரிவு நேரும்போது, `இல்லை நாங்கள் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும். என்னால் இந்த சமூகத்தில் துயரப்பட முடியாது. குழந்தைக்களுக்காகவாவது சேர்ந்து வாழ வேண்டும். அவ்வளவு சீக்கிரம் என்னால் விட்டுவிட முடியாது’ எனச் சொல்லிக்கொண்டிருப்பது கடைந்தெடுத்த சுயநல மனநிலை.

நம் சமூகத்தைப் பொறுத்தவரை திருமண உறவை முறித்துக்கொள்ளும் முடிவை ஆணோ, பெண்ணோ அவ்வளவு எளிதாக எடுத்துவிடுவதில்லை. இனி முடியாது என்கிற அழுத்தத்தின் பேரிலேயே பிரியும் முடிவை எடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை இழுத்துப் பிடித்து, இல்லை என்னோடு வாழ்ந்துதான் ஆக வேண்டும் என வற்புறுத்தி வாழ வைத்தால், அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்குமா? மனநோய்க்குத்தான் ஆளாக வேண்டியிருக்கும். மீண்டும் அந்த உறவு எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம்.

இதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி விடாப்பிடியாக வற்புறுத்துவது நல்ல மனநிலைக்கான அறிகுறியே அல்ல. கணவன் வீட்டின் முன்னால் குழந்தையோடு வாழ வையுங்கள் என தர்ணா செய்யும் பெண்களின் மனநிலையும், மனைவி வாழ மறுக்கும்போது அவளைப் பின் தொடர்ந்து துன்புறுத்தும் ஆணின் மனநிலையும் இத்தகைய பின்னணியில் இருந்தே உருவாகின்றன.

 namita.official: மீ... மம்மி!
namita.official: மீ... மம்மி!

ஒருவேளை குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருந் தால் சட்ட ரீதியான தீர்வை தேடலாம். ஆனால், எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவராக இல்லாதபட்சத்தில் திருமண வாழ்க்கை முழுக்க சுயநலத்தோடு தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியும் மட்டுமே முடிவுகளை எடுத்த வர்கள், விடாப்பிடியாகச் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என வற்புறுத்துவது அப்யூசர் மனநிலையின் வெளிப்பாடு. இதன் அடுத்தகட்டமாக, தன்னைவிட்டுப் பிரிந்து செல்ல நினைப்பவருக்கு இடையூறுகள் செய்வது, தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ள முயற்சி செய்வது, தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுவதெல்லாம் நடக்கும்.

இப்படிப்பட்டவர்கள் காதல், அன்பு, குடும்பநலன் என பிதற்றுவது சுயநலனின் அடிப்படையில் சொல்லும் காரணங்களே அன்றி திருமண உறவை வாழவைக்க வேண்டும் என்கிற உந்துதலில் அல்ல. (திருமண உறவில் முதல் மூன்றாண்டுகளில் எழும் பிரச்னைகளைத் தீர்த்து கொள்ளாவிட்டால், அந்தத் திருமண உறவு புகைந்துகொண்டு தான் இருக்கும். அறிந்து அறியாமலும் இதைத் தீர்த்துக்கொண்டு, திருமண உறவை பலர் சிறப்பாகவே பேணுவார்கள். ஆனால், சிலருக்கு அது சரிசெய்ய முடியாத விஷயமாகவே நீடித்துவிடுகிறது.) பத்தாண்டுக்காலம் காதல், அன்பு, குடும்பநலன், குழந்தை மீதான பாசம் என்ன செய்துகொண்டிருந்தது எனக் கேட்டால், அவர்களிடம் பதில் இருக்காது. ஓர் உறவில் பிரிவு நேரும்போது, கடினமாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு விலகிவிடுவது, நீங்கள் நேற்றுவரை நேசித்தவரின் முடிவுக்குக் கொடுக்கும் ஆகச் சிறந்த மரியாதையாக இருக்க வேண்டும். வற்புறுத்தி அன்பை ஒருபோதும் பெறவே முடியாது! தன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கியவனை திருமணம் செய்து வைப்பது, காதலின்றி தன் இணையிடம் கட்டாய உறவு கொள்வதை இயல்பாக நினைப்பதுபோல இது போன்ற நச்சு மனநிலையில் உள்ளவர்களையும் சமூகம் இயல் பாகவே பார்க்கும், ஊக்குவிக்கும். அது உண்மையில் பாதிக்கப் பட்டவர் (மனரீதியாக)களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும்!

 nazriyafahadh : கம்பேக்!
nazriyafahadh : கம்பேக்!

சௌம்யா

எங்கு விளையாடச் சென்றாலும் தாயைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளும் பிள்ளைபோல் யாருடனான உரையாடலுக்கு நடுவிலும் உன்னைத் தேடிக்கொள்கிறேன்.

நட்சத்திரா

ஒரு தலைமுறை இடைவெளி எனப்படுவது...

பானிபூரிக்காக அழுததுக்கும் ஷவர்மாவுக்காக அழுததுக்கும் இடைப்பட்ட காலமே.

Vigneswari Suresh

இந்திய பெண்கள் தன்னைச் சுற்றி நிறைய dependency (சார்ந்திருத்தல்களை) தெரிந்தும், தெரியாமலும் உருவாக்குகிறார்கள்.

தான் இல்லாவிட்டால் வீடு இயங்காது என்பது மகிழ்ச்சியையும் identity-யும் தருகிறது.

எனினும், இத்தகைய dependency-களே நாம் விரும்பி மாட்டிக்கொள்ளும் வலை.

 r_sarath_kumar : கிராஜுவேஷன் டே... ஹேப்பி அம்மா, அப்பா!
r_sarath_kumar : கிராஜுவேஷன் டே... ஹேப்பி அம்மா, அப்பா!

ச ப் பா ணி

கடன் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி செலுத்தினால் பஜாஜ் ஃபைனான்ஸ்.

கல்யாணத்துக்கு மொய் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி வைத்தால் மேரேஜ் ஃபைனான்ஸ்.

Abdul Hameed Sheik Mohamed (Manushya Puthiran)

கண்ணில் நீர் பெருக

திரும்பிக்கொண்டிருந்தேன்

‘ஏன் அழுகிறீர்கள்?’

என்றான் உடன் வந்த நண்பன்

‘இறந்த என் அம்மாவை நினைத்தேன்

அதுதான் அழுகை வந்துவிட்டது' என்றேன்.

‘முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு

இறந்த அம்மாவையா

இப்போது நினைத்து அழுகிறீர்கள்?'

என்றான் நம்பமாட்டாமல்

‘எப்போதெல்லாம் என் இதயம்

இறந்து போகிறதோ

எப்போதெல்லாம்

நான் நேசித்தவர்களால்

நான் நேசிக்கப்படவில்லை என்பதைப்

புரிந்துகொள்கிறேனோ

அப்போதெல்லாம்

என் அம்மா

மீண்டும் ஒருமுறை

இறந்துபோகிறாள்’ என்றேன்.

29.5.2022

இரவு 11.58

மனுஷ்ய புத்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism