Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

திருமணமாகி 10 வருடங்களில் பெண்கள் உடல் எடை கூடி வயது முதிர்ந்து தெரியும்போதுதான் இன்னமும் படு இளமையாக இருப்பதாகப் பிதற்றிய ஆண்களை கண்டிருக்கிறேன்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

திருமணமாகி 10 வருடங்களில் பெண்கள் உடல் எடை கூடி வயது முதிர்ந்து தெரியும்போதுதான் இன்னமும் படு இளமையாக இருப்பதாகப் பிதற்றிய ஆண்களை கண்டிருக்கிறேன்.

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்

தமிழ்ச்செல்வி தி

‘நயன் மனசுக்குப் பிடிச்சவரைக் கல்யாணம் செய்துட்டா உடனே இரும்பு மனுஷியா?!’ - ஆமாம். மனசுக்குப் பிடிச்ச வரைக் கல்யாணம் செய்த நயன் மட்டுமல்ல, அப்படி கல்யாணம் செய்த பின்பு ஒத்து வரலைன்னு உறவை விட்டு வெளியே வரும் தைரியம் கொண்ட சமந்தாவும், தன்னை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒருவரைச் சந்திக்கும் வரை சிங்கிளாக இருப்பது பற்றிக் கவலை யில்லை என்கிற த்ரிஷாவும் கூட இரும்பு மனுஷிகள்தான். சிறு தோல்விகளை, ஏமாற்றங்களை, இழப்புகளைத் தாங்காமல் துவண்டுவிடும் பெண்களுக்கு மத்தியில், இது எதுவும் தங்களுடைய கேரியரை பாதித்துவிட முடியாது என எழுந்து நிற்கும் இவர்களும், இவர்களைப் போன்ற பெண்களும் எங்களுக்கு இரும்பு மனுஷிகள்தான், சூப்பர் பெண்கள்தான், தங்கக் கட்டிகள்தான்.

இந்திரா ராஜமாணிக்கம்

“இந்த வழியா ஃப்ரெண்டை பார்க்க வந்தேன்.”

“இந்த புக் நல்லாருக்கும், அதான் உனக்கு குடுக்க லாம்னு வந்தேன்.”

“இங்க ஒரு சிவன் கோவில் இருக்கு, அதுக்கு வந்தேன்.”

“இந்த கடைல டீ நல்லாயிருக்கும், அதுக்காக வந்தேன்.”

“வீட்ல பலகாரம் செஞ்சாங்க, அதான் கொண்டு வந்தேன்.”

“சும்மா அப்டியே நடந்து வந்தேன்.”

“ஏதோ சொல்லவந்து மறந்துட்டேன்.”

“பார்க்கணும்போல இருந்துச்சு...” என்பது தவிர்த்து மற்றெல்லாமே பிரியத்தின் சாக்கு.

 itsvg: அகத்தியன் எக்ஸ்பிரஸ்!
itsvg: அகத்தியன் எக்ஸ்பிரஸ்!

Geetha Karthik Netha

இறுதி முத்தங்கள் மட்டும்

நீண்ட ஆயுளைப் பெற்றுவிடுகின்றன...

ச ப் பா ணி

நம்மைச் சுற்றி இருக்கும் சொந்தம் இரண்டு வகைதான்

*இவனுக்கு ஏதாச்சும் செய்யணும்...

*இவன ஏதாச்சும் செய்யணும்!

Saravanankarthikeyan Chinnadurai

கடனைப் பெற்றவர் மறந்து போகலாம். ஆனால், கொடுத்தவருக்குப் பெற்றவரைப் பார்க்கும்போதெல்லாம் அது எவ்வளவு சிறிய தொகை என்றாலும் அந்தக் கடனே நினைவுக்கு வரும். அதுவும் குறிப்பாக, பெற்றவர் தன் வாழ்வின் டாம்பீகங்களைப் பிரஸ்தாபித்துக் கொள்ளும் போதெல்லாம் அதுவே தோன்றும்.

அதனால் எவ்வளவு சிறிய தொகை எனினும், பெற்ற கடனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். எப்போதும் ஒருவர் நினைவில் கடன்காரனாக மட்டுமே பதிந்து கிடப்பது என்பது எவரும் விரும்பாத ஒரு நிலைதானே!

திமிரழகி

நம்ம வாழ்க்கைல ரெண்டு

விஷயத்தை மட்டும்

மறக்கக் கூடாது

அது என்னன்னா...

விரும்பி எது வந்தாலும் Take care

விலகி எது போனாலும் Dont care.

 keerthysureshofficial : Peach பூ!
keerthysureshofficial : Peach பூ!

Shobana Narayanan

1996-ல் நான் கண்ணாடி போட்டுக்கொண்டேன்.

பவர் 0.5. பிற்பாடு 2016 வரை கண்ணாடி என் உடலில் ஓர் அங்கம். அதனால் அடைந்த இடைஞ்சல்களை தனிப் பதிவாகவே இடலாம்.

2016-ல் அறுவைசிகிச்சை செய்துகொள்கிறேன் என்றபோது, என் தம்பி உட்பட என்னைக் கேட்ட முதல் கேள்வி, “இனி நீ அறுவைசிகிச்சை செய்துகொண்டு என்ன செய்யப்போகிறாய்?” என்பதுதான்.

அதாகப்பட்டது, இந்த உலகில் ஒரு பெண்ணுக்கு திருமணமானவுடன், அவள் இனி அவளது அழகு, ஆரோக்கியம் என்பதை எல்லாம் பராமரிக்கத் தேவை இல்லை. அவள் சந்தையி்ல் விலை போய்விட்ட மாடு.

திருமணமாகி 10 வருடங்களில் பெண்கள் உடல் எடை கூடி வயது முதிர்ந்து தெரியும்போதுதான் இன்னமும் படு இளமையாக இருப்பதாகப் பிதற்றிய ஆண்களை கண்டிருக்கிறேன். உங்களுக்கு எத்தனை பிரசவம் நடந்தது என்றும் கேட்டிருக்கிறேன்.

இதில் இன்னமும் கூடுதல் சிறப்பென்பது, அந்தப் பெண்களே தங்களது உடல் அழகு மற்றும் ஆரோக்கியத்தின் மீது கவனமின்றி இருப்பது. இரு பிள்ளைகள் பிறந்து விட்டால் தான் ஒரு வயது முதிர்ந்தவள் என்றும், அழகு என்பதை பேணுவது ஏதோ தவறான நடத்தை உடைய பெண்களுக்கான பழக்கம் என்பதுபோல பேசுவதும்தான்.

என் வயதொத்த பல தோழிகள் உருவம், ஆரோக்கியம் இது இரண்டிலும் கவனமற்று, கண்டபடி உண்டு, மிச்சம் மீதியை தட்டில் கொட்டிக்கொண்டு, அம்மா என்றால் தியாகிப் பட்டம் வாங்க வேண்டும் என்ற கோதாவில் குதிக் கிறார்கள்.

 priyankachopra : 3G!
priyankachopra : 3G!

இதற்குக் காரணம் இரண்டு. ஒன்று, நம்மை கவனியாது பிள்ளைகள், குடும்பம் என்று இருந்தால்தான் தியாகி, சிறந்த தாய், குடும்பப் பெண் என்றெல்லாம் சினிமா டிராமா இலக்கியங்களின் கற்பிப்பு. (இப்போது அது கொஞ்சம் நகர்ப்புறங்களில் குறைந்துள்ளது எனலாம்).

அடுத்து, தன்னைக் கவனித்துக்கொள்ளும் பெண் சுயநலம் மிக்கவள், வீட்டுக்கு அடங்காதவள், ஆசை அடங்காதவள், தவறான வழியில் போவாள் இன்ன பிற கட்டுக்கதைகள். இதில் நகை முரண், இதை ஆண்களை விட பெண்களே அதிகம் நம்புகின்றனர். பின்பற்றுகின்றனர். தூற்றுகின்றனர்.

இரண்டு பிள்ளைகள் பெற்றவுடன் சாமியார் வேடம் தரிக்க வேண்டும். பிள்ளைகள் உண்டவுடன் உண்ண வேண்டும். மிச்சம் மீதி உண்ண வேண்டும். 24 மணிநேரமும் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கு மட்டுமே பெண். தனக்கென நேரம் எடுக்கக் கூடாது. உடல் ஆரோக் கியம் பேணக்கூடாது. நன்றாகக் கவனியுங்கள். நான் அழகெனக் குறிப்பிடவில்லை. ஆரோக்கியம் என்கிறேன்.

உடற்பயிற்சி செய்தல், ஒழுங்காக நேரத்துக்கு சாப்பிடுதல், மனவளக்கலைக்கான ஏதேனும் கலை கற்றல், உடல் எடை கூடாது கவனித்தல், ஆரோக்கியத் துக்கான விழப்புணர்வு, இவையெல்லாமே பெண்களுக்கு 35 வயதுக்கு மேல்தான் அவசியம். அட்லீஸ்ட் பேப்பராவது படிக்க வேண்டும்.

 shreyaanchan_official : காதலாட காதலாட..!
shreyaanchan_official : காதலாட காதலாட..!

இங்கு பெண்களுக்கான மரியாதை என்பது அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. மேலும், அது பணியாலும் கிடைப்பதில்லை. அரும்பாடு மட்டும்தான் பெற வேண்டி யுள்ளது. தன்னம்பிக்கை இல்லாத அலுவலகப் பெண் களையும் பார்த்துள்ளேன். கெத்து நிரம்பிய வீட்டுப் பெண்களையும் பார்த்திருக்கிறேன்.

பெண்களின் ஆளுமை என்பது ஆரோக்கியம், வாசிப்பு, தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றால் அமைவது. நேர்பட பேசுவதாலும், கடும் உழைப்பாலும் விளைவது.

டாட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism