Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று தினமும் எனக்கு கிடைத்துவிடுகிறது...

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று தினமும் எனக்கு கிடைத்துவிடுகிறது...

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Elambarithi Kalyanakumar

சிலர் இருக்கிறார்கள்...

ஆண்டுக்கொரு முறை பரஸ்பர பிறந்தநாள் வாழ்த்துகளில் மட்டும் வந்து கையசைப்பார்கள்.

வேறெங்கேயும் முகம் தெரியாது. புன்னகை தெரியாது. மீறித் தெரிந்தாலும் அதில் வஞ்சம் தெரியாது. வன்மம் தெரியாது.

மறக்காமல் ஒவ்வோர் ஆண்டிலும் வரும்

அந்த வாழ்த்தில் எதுவும் மாற்றம் இருக்காது.

அந்த சிலர் நிரந்தரமாக இருக்கிறார்கள்.

சர்வ நிஜமாகவும் இருக்கிறார்கள்... சிலர் மட்டும் இருக்கிறார்கள்.

 wikkiofficial : ஹனிமூன் போட்டோ 
@தாய்லாந்து!
wikkiofficial : ஹனிமூன் போட்டோ @தாய்லாந்து!

நேச மித்ரன்

மனமோ, உடலோ தளரும்போது புதியன மீதான வேட்கை குன்றுகிறது. எந்த பந்தயத்திலும் மனம் ஒன்றுவதில்லை. நாம் நிம்மதியாய் இருந்த காலம் என்று நம்பும் நேற்றின் மீது ஒரு காதல் பிறக்கிறது. அங்கே அழைத்துச் செல்லும் பாடல்களைக் கேட்கிறோம். சராசரி என்று நிராகரித்த ரசனைகளில் கூட ருசியேறிவிடுகிறது. இது ஓர் இளைப்பாறல் காலம். மீண்டும் எழுச்சியுறும் நிமித்தம், சமிக்ஞைகள் எல்லாம் நம் கைமீறியவை. :)

Primya Crosswin

எல்லா பேருந்திலும் யாரும் அமராத ஒரு பக்கத்து இருக்கையுடன் திருநங்கை ஒருவர் எனக்காக காத்திருக்கிறார்...

ஒவ்வொரு பிரார்த்தனை வேளையிலும் என் முன் வரிசையில் ஒரு குழந்தை என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கின்றது...

ஒவ்வொரு வகுப்பறையிலும் எனக்கென்று முகிழாது காத்திருப்பான் ஒரு மெல்ல கற்பவன்...

எனக்கு பரிசாக தான் படிக்காத அல்லது தனக்கு பரிசாகக் கிடைத்த புத்தகங்களை அளித்து தன் செலவை மிச்சம் பிடித்துக்கொள்கிறார்கள் நண்பர்கள்...

விழாக் கூட்டத்தில் மேடை சரியாகத் தெரியாத மூலையில் எப்பொழுதும் எனக்கென்று ஒரு நாற்காலி கிடைத்துவிடும்...

அதனருகில் ஒரு தொட்டிசெடியும் சில பூக்களும் இருந்துவிடும்...

யாரும் எடுத்துக்கொள்ளாத ஏதாவதொன்று தினமும் எனக்கு கிடைத்துவிடுகிறது...

அதுவே எனக்கு பிடித்தும் இருக்கிறது!

 ddneelakandan : பிளவுஸும் பியூட்டிஃபுல்!
ddneelakandan : பிளவுஸும் பியூட்டிஃபுல்!

Karthik (யாத்திரி)

சிறந்த அப்பா எப்படி இருப்பாரென்று எந்தக் குழந்தைக்கும் யோசனை கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களது சிறிய உலகில் தன்னுடைய அப்பாதான் சிறந்த அப்பா.

ஒருவன் சிறந்த அப்பாவாக இருக்க முயல்வதே அச்சிறிய மகளின் நம்பிக்கையில் இருந்துதான்.

 simranrishibagga : மூணாவது தடவையா... ஸ்கிரீன் ஜோடி!
simranrishibagga : மூணாவது தடவையா... ஸ்கிரீன் ஜோடி!

Vidhya Vijayaraghavan (வித்யா)

பெண்களைப் பெற்ற பூமர்களுக்கு மட்டுமே தோன்றும், கல்யாணம்தான் பொண்ணோட பிறவிப்பயன் என்று.

பொண்ணுன்னா கல்யாணம் பண்ணிக் குடுத்துடணும்ங்குற நினைப்போடயேதான் நிறைய பெத்தவங்க வாழ்க்கையே இருக்கு. அதைச் சுத்திதான் அந்தப் பொண்ணோட படிப்பு இருக்கணுமா, வேணாமா, எவ்ளோ படிச்சு

இருந்தா அவங்க நினைச்ச மாதிரி மாப்பிள்ளை கிடைக்கும்ன்னு யோசிச்சுதான் படிக்கவே வைக்கிறாங்க.

பொண்ணுங்களுக்கும் வேலை முக்கியம்,

சுய சம்பாத்தியம் முக்கியம்னா, `அத அவளுக்கு வரப்போற புருஷனும் மாமியாரும் முடிவு பண்ணட்டும்’னு சொல்றாங்க.

அதாவது, கல்யாணம் பண்ணிக் குடுக்குற வரைக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கை தொடர்பா என்னவா இருந்தாலும், இவங்கதான் முடிவெடுப்பாங்களாம். சாதாரணமா முடி வெட்டுறது, ஒரு டூர் போறதுல தொடங்கி வேலைக்குப் போறது வரைக்கும் எல்லாமே இவங்க மனசு வெச்சாதான் நடக்கும்.

கல்யாணம் ஆனதுக்கப்பறமாச்சும் சொந்தமா முடிவெடுக்கலாம்னு பார்த்தா, அப்ப, புருஷன், மாமனார், மாமியார், நாத்தனார்னு அவங்க சொல்றதைக் கேட்டு, அவங்க எல்லார் மனசும் கோணாத வகையில நடந்துக்கணும்பாங்க.

அப்பறம் கொழந்தை பொறந்ததும் அந்தக் கொழந்தைக்காக வாழணும், கொழந்தையைச் சுத்தி மிச்ச வாழ்க்கையைக் கடத்தணும்னு சொல்வாங்க.

அடேய்... அப்ப அவ தனக்குன்னு எப்படா வாழ்வா?

சரி... அந்தக் கும்பலுக்குப் புரியுற பாஷைலயே சொல்றேன்.

இப்ப படிப்பும் வேலையும் இல்லாத பொண்ணா இருந்தா, `நீ என்னை நம்பி இருக்க’னு சொல்லி அவளை சுரண்டுவாங்க. வேலையில இருக்கற பொண்ணுகிட்டயே சம்பளத்தை வாங்கி வெச்சுட்டு சுரண்டுவாங்க. அப்படிப்பட்ட ஆளுங்க இருக்கற ஊர்தான் இது.

ஆனா, படிப்பும் வேலையும் இருந்தா, நிலைமை மோசமாகும் போது விட்டுட்டுப் போயி சொந்தக் கால்ல நிக்குறதுக்குக் குறைஞ்சபட்ச தைரியமாச்சும் இருக்கும். ஏன்னா, உன்கிட்ட திரும்பி வந்தா நீதான், `அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போ, கொடுமைப்படுத்தறவங்க எல்லாம் அப்டி இப்டிதான் இருப்பாங்க’ அப்டின்னு எல்லாம் பேசுவ.

அவ எங்கயும் போக நாதியில்லாம தூக்குல தொங்கி சாவக் கூடாதுல்ல? அதுக்காண்டியாச்சும் படிக்க வெய்ங்க, வேலைக்குப் போக விடுங்க.

பசங்க வேலை, காசு, வீடுன்னு பல கனவுகளுக்கு மத்தியில ஒரு கனவாதான் காதலும் கல்யாணமும் வெச்சுருப்பாங்க. ஆனா, பொண்ணுங்களுக்கு மட்டும் சின்ன வயசுலேர்ந்து கல்யாணம், புருஷன், புள்ளகுட்டி மட்டும்தான் கனவா இருக்கணும்ங்குற மாதிரி ட்யூன் பண்ணி விட்டுடுறீங்க. இதனாலதான் நிறைய பொண்ணுங்களுக்கு, தான் யாரு, தனக்கு என்ன வேணும், தனக்கு என்ன புடிக்கும்னு தெரியாமலே இருக்கு.

எவ்வளவு பெரிய உலகம் இது, இதுல அனுபவிக்க எவ்வளவு விஷயம் இருக்கு? இத்தாப் பெரிய பிரபஞ்சத்துல இந்தப் பூமியே ஒரு புள்ளியளவுகூட இருக்காது. அதுக்குள்ளாற நீங்களும், உங்க வறட்டு கௌரவமும், நாறிப்போன பழைய காலத்து எண்ணங்களும், அதுக்கு நீங்க குடுக்குற முக்கியத் துவமும் கால் பைசாகூட பெறாது.

கல்யாணம் வாழ்க்கையில be-all and end-all எல்லாம் இல்லை. அதைத் தாண்டி எவ்ளோவோ இருக்கு. ப்ளீஸ் புரிஞ்சிக்கங்கடா பூமர்களா!

 rambhaindran_ :  rambhaindran_
rambhaindran_ : rambhaindran_

கோழியின் கிறுக்கல்!

குழந்தையுடன் விளையாடினால், நாம் தோற்க வேண்டும் என்பது மட்டுமே விதி!

ச ப் பா ணி

பழைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நினைவுகளைவிட... அதிக முடி இருந்ததே பெரும் ஆயாசத்தைத் தருகிறது.

Selva Bharathi

நம்முடைய குணங்களில் ஏதோ ஒன்றை யாரிடம் காண்கிறோமோ, அந்த உறவுகள் நிலைக்கும்.