Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

மகளுக்கு யார் இந்த வழக்கத்தை சொல்லிக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மகனை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொல்லி அவனை அழவைத்துக்கொண்டிருக்கிறாள்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

மகளுக்கு யார் இந்த வழக்கத்தை சொல்லிக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மகனை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொல்லி அவனை அழவைத்துக்கொண்டிருக்கிறாள்.

Published:Updated:
லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

நேச மித்ரன்

சகலத்தையும் மன்னிக்கிற ஒருவரிடம் சொல்லும் பொய் அன்பின் நிமித்தமாய் இருக்க முடியாது.

Primya Crosswin

விடிகாலையில் ஒரு கனவு...

சிரித்தமுகத்துடன் தங்கை வந்தாள்!

எரிந்து போன ஒரு முதிர்மரத்தின்

பட்டையைப் போல

பாளம் பெயர்ந்திருந்த கன்னங்களில்,

செதுக்கிய இதய வடிவமாய் கடைசியாய்

நான் தந்த முத்தம்

இன்னும் அப்படியே தானிருந்தது...

அவளது பெருமூச்சுகளின் சூட்டில்

ஒரு கருப்பையைப் போல கதகதக்கும்

என் அறையின் சுவர்கள்

என்னை ஜனிக்க விடுவதாயில்லை...

புகை மண்டி உருகிப்போயிருந்த

அவளது கடைசி கொலுசுகளை

கால்களிலிருந்து பிரிக்க முடியாததால்,

ஒவ்வோர் இரவிலும்

இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறாள்!

குடும்பப் படம் எடுக்கின்ற

ஒவ்வொரு முறையும்

என் நாசியில் கமறும்

கெரசின் வாசனைக்குப் பின்பு

எவ்வாறு நான் புன்னகைப்பேன்?

தங்கைகள் ஒரு நாளில் எரிந்தடங்கிவிடுகிறார்கள்...

அண்ணன்கள் வாழ்நாளெல்லாம்

நின்று எரிகிறார்கள்...

dhanushkraja: ஹாலிவுட் அப்பா!
dhanushkraja: ஹாலிவுட் அப்பா!

Karthik

மகளுக்கு யார் இந்த வழக்கத்தை சொல்லிக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. மகனை குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொல்லி அவனை அழவைத்துக்கொண்டிருக்கிறாள். நானும் சும்மா இருக்காமல், “அய்யய்யோ பையனுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சா?” என்று அதிர்ச்சியாகவும், அவன் மேலும் அழ, தலைவிதான் வந்து, “இல்லையடா என் செல்வமே, உன்னை இந்த வயித்துல நான்தான் சுமந்து பெத்தேன், இவங்க சொல்றதுலாம் நம்பாத” என்று சமாதானித்தார். சமாதானமும் ஆகிவிட்டான்.

நேற்று வீட்டில் மீன்கறி. மகனின் தட்டில் சாதம் வைத்த பின் குழம்பு ஊற்ற கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது.

மகன்: ``ஓஹோ குப்பைத்தொட்டில இருந்து எடுத்துட்டு வந்ததாலதான என்னை இப்படி பண்றிங்க?”

ஏது! பத்து செகண்ட் லேட்டா குழம்பு ஊத்துனதுக்காடா? பிரச்னை அதுவல்ல.

மீனின் நடுப்பகுதி ஒன்றை நான் உண்ணவென கண்வைத்து இருந்தேன். நானே அதை எடுத்து என்னுடைய தட்டில் வைக்கும் நேரம் பார்த்து என்னிடம் இருந்து பிடுங்கி மகளிடம் தந்துவிட்டார் தலைவி.

``டேய் மகனே, உங்கம்மா நிஜமா என்னையத்தான்டா குப்பைத்தொட்டில இருந்து எடுத்துட்டு வந்துருக்கா.’’

மகன்: ``யாரை மொதல்ல எடுத்தா?’’

ஓ... இதுல சீனியர் சண்டை வேறயா!

himabindhu____: தாவணி பெண்கள்... தனி அழகு!
himabindhu____: தாவணி பெண்கள்... தனி அழகு!

Sowmya Ragavan

நேற்றையும் நாளையையும் மாற்றி மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்த குழந்தை திடுமென ஒருநாள் ‘முந்தாநேத்து’ என தெள்ளத்தெளிவாய்... அந்நாளை குறிப்பிடுகிறது. குழந்தைகள் வளர்வதை ரசிக்க முடிவதில்லை.

Abdul Hameed Sheik Mohamed

வாழ்க்கை முதல்முறைதான்

எதையும் அன்பாகச் சொல்லும்

கருணையுடன் சொல்லும்

பொறுமையுடன் சொல்லும்

மரியாதையாக

கேட்டுக்கொள்ள வேண்டும்.

lakshmimenon967: 'சந்திரமுகி 2'ல வர்றாங்களாம்... வெயிட்டிங்!:
lakshmimenon967: 'சந்திரமுகி 2'ல வர்றாங்களாம்... வெயிட்டிங்!:

Umanath Selvan

ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். “உனக்கு பள்ளியில் எது மாறினா இன்னும் நல்லா படிப்ப..? உனக்கும் சொல்லு, உன் ஃப்ரெண்ட்ஸுக் கும் சேர்த்துச் சொல்லு.”

“சார், ஸ்கூல்ல எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஒண்ணே ஒண்ணுதான் சார். டாய்டெல்ட்ல தண்ணி வந்தா போதும். ஆரம்பிச்ச அப்ப வந்துச்சு. ஆனா, நைட்ல காளிப்பசங்க வந்து உடைச்சிட்டு போயிடறாங்க. காம்பெளண்டு இருந்தாலும் குதிச்சு வந்து உடைக்கிறாங்க. காலையில வீட்ல போனா அதோட சாயந்தரம் வந்துதான் போவோம். அடக்கி வெச்சிப்போம்... அதுவும்...”

டாய்லெட்களைக் கட்டுவது, பராமரிப்பது மட்டுமல்ல, அதை பாதுகாப்பதும் தலையாய கடமை. இதே போன்ற கதையை பல்வேறு கிராமங்களில் இருந்தும் கேள்விப்படு கிறோம். பள்ளியால்/பள்ளி நிர்வாகத்தால் மட்டுமே இதை சரி செய்ய இயலாது, உள்ளூர் சமூகமும் திரண்டு வந்து அரணாக நிற்க வேண்டும்.

Ramanujam Govindan

வாழ்க்கையில் இரண்டு வகையான விஷயங்கள் இருக்கின்றன...

1. நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் விஷயங்கள்.

2. நம்மிடம் இருக்கும் விஷயங்கள்.

மாமத யானை

ஒரு சமூகம் எவ்வளவு தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கிறதோ அவ்வளவு பொய் பெருமித கதை களை உருவாக்கி, தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும்.

ச ப் பா ணி

‘ஏதாவதுனா கால் பண்ணுங்க’ என்பது விடை பெறுதலுக்கான நாகரிகக் குறியீடு.

trishakrishnan: கவிழ்ந்த கண்கள், கூர் நாசி... குந்தவை பராக்!
trishakrishnan: கவிழ்ந்த கண்கள், கூர் நாசி... குந்தவை பராக்!

கோழியின் கிறுக்கல்!!

சாகிற நேரத்தில்கூட நாட்டுக்காக ஒருவர் கடமையை செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில்தான் ICU-க்கு 5% GST போட்டிருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!?

யாத்திரி

இனியும் எப்போது சந்தித்தாலும் நாம் இன்றுபோல, இதேபோலத்தான் பேசிக்கொள்வோம் என நம் உறவின் மகத்துவம் பேசுவது, இதுவரை பேசாதிருந்த காலங் களுக்கும், இனி பேசாமலிருக்கப்போகும் காலங்களுக்கு மான சமாதானம்.