Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

 shrutika_arjun
பிரீமியம் ஸ்டோரி
shrutika_arjun

ஒரு பெண்ணின் காதல் விவகாரம் (அது விவகாரமா என்ன, விஷயம்தானே!) வெளியே வருவதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் சரி, அவள் குடும்பத்துக்கும் சரி, என்ன அவமானம் இருக்கிறது?

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

ஒரு பெண்ணின் காதல் விவகாரம் (அது விவகாரமா என்ன, விஷயம்தானே!) வெளியே வருவதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் சரி, அவள் குடும்பத்துக்கும் சரி, என்ன அவமானம் இருக்கிறது?

Published:Updated:
 shrutika_arjun
பிரீமியம் ஸ்டோரி
shrutika_arjun

Ram Vasanth

ஆதியிலே எல்லா சேல்ஸ் மேனேஜர்களும் உண்மை பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் ppt வந்தது.

Maanaseegan (மானசீகன் )

பேரழகு நிறைந்த பெண்களுக்கு சிறு வயதிலேயே அவர்கள் யார் என்பதை ஆண்கள் பார்வைகளால், சொற்களால், உடல் மொழியால் உணர்த்திவிடுவர்.

பெண்களைப் பொறுத்தவரை அழகு தருகிற பெருமிதத்துக்கு இணையே இல்லை. அதில் சிக்கிக் கொண்டு தற்பெருமை கொண்ட அசடுகளாக, அதீத கர்வம் கொண்ட திமிர் படைத்தவர்களாக, எல்லோரையும் பயன்படு பொருள்களாகவே கருதும் சாகசக்காரர்களாக, இன்னாரென்றே யூகிக்க முடியாத மர்மமும் வசீகரமும் நிரம்பியவர்களாகப் பலரும் உருமாறிவிடுகின்றனர்.

 aishwaryarajini: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பை பை போனப்போ!
aishwaryarajini: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு பை பை போனப்போ!

இயற்கையின் பேரருளாலோ, குடும்பத்தின் நல்வளர்ப்பாலோ, தீவிர வாசிப்பு தரும் விடுதலையாலோ, வாழ்வின் அனுபவங்களால் உருவாகும் பக்குவத்தாலோ அல்லது அனைத்துமே இணைந்தோ சில பேரழகிகள், ‘நான் என்பது இந்த உடம்பல்ல’ என்று யோசித்து

தம் அழகை, அதை ஆராதிக்கும் சமூகத்தின் போலித் தனங்களை பாசியென விலக்கி நதியில் மூழ்குகின்றனர். அவர்கள் தம் அறிவாலும் திறமையாலும், பண்புகளாலும் மட்டுமே பிறரால் கொண்டாடப்பட வேண்டும் என்கிற உயரிய மனோபாவத்தை நோக்கி தம் நீர்மையால் நகர்கிறார்கள் (இதை வெறும் பாவனையாகக் கைக்கொள்வோரும் உண்டு. ஆனால் சீக்கிரம் சாயம் வெளுத்துவிடும்).

இந்த இடத்தை நோக்கி நகர்ந்துவிட்ட பெண்கள் அசையும் சிறு சுடரென எரிந்துகொண்டிருப்பவர்கள். இவர்களைக் கையில் ஏந்தி கருவறை நோக்கி நடப்பவர்களே அபூர்வமான தரிசனத்தைப் பெறுவார்கள். அந்தக் காதலன் படைப்பாளனாகவும் இருந்துவிட்டால் காண்டாமணியின் இழுவை அவன் குரலிலோ, விரலிலோ தொடங்கி வாசிப்பவரின், கேட்பவரின் மனதில் விண்ணென்று தெறித்து ஆதி ஓசையாய் ஒலிக்கும்.

*மானசீகன்*

Saravanakarthikeyan Chinnadurai

ஒரு பெண்ணின் காதல் விவகாரம் (அது விவகாரமா என்ன, விஷயம்தானே!) வெளியே வருவதில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் சரி, அவள் குடும்பத்துக்கும் சரி, என்ன அவமானம் இருக்கிறது? எனக்கு இவ்விஷயம் நிஜமாகவே புரியவில்லை. வயதுக்கு வந்த ஒரு பெண் காதல் செய்வது இயல்பான மனித உணர்வு. அதைச் சொல்லா மல் மறைப்பதன் மூலமும் சொல்பவர்களை வசை பாடுவதன் மூலமும் நாம் ஒரு சாதியச் சமூகத்தை மிக ஜாக்கிரதையாகப் பேணுகிறோம் என்பதே உண்மை. முதலில் நம் சமூகம் காதலை இயல்பாக்க (normalise) வேண்டும்.

 shrutika_arjun : வெற்றியின் கண்ணீர்!
shrutika_arjun : வெற்றியின் கண்ணீர்!

வசந்த்

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷனே, ஜி.எஸ்.டி-யை மட்டும் கட்டு. விலைவாசி குறைவை எதிர்பார்க்காதே என்பதாகும்.

பழைய சோறு

ஹலோ என்றதும்

சளி பிடித்திருப்பதைக் கண்டுபிடித்துவிடும்

அம்மாவிடம்

வாழ்வின் காயங்களை

எப்படி மறைப்பது..?

Mannar & company™

மரங்கள், வயல்வெளிக்கு நடுவில் குடிசை வீட்டை வீடியோவில் பார்த்துட்டா போதும் இந்த மாதிரி இயற்கை யோட வாழணும்னு சொல்ல வேண்டியது. ஆனா, ஃபிளாட் வாங்குறப்போ பக்கத்தில் மெட்ரோ இருக்கான்னு கேட்க வேண்டியது!