Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சிநேகா
பிரீமியம் ஸ்டோரி
சிநேகா

போனை நோண்டாமல் படத்தைப் பார்த்து விட்டால் அது நல்ல திரைப்படம். முன்பெல்லாம் சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்த்தால் அது சிறந்த படம்.

Vannadasan Sivasankaran S

அந்த ஊருக்கு நான் போக வேண்டும்.

இங்கிருந்து எவ்வளவு தொலைவு அது என்று சொல்லியது கறுப்பெழுத்தில் பெரிய எண்கள்.

‘அதையும் தாண்டிப் போ’ என்று

கண்ணுக்குத் தெரியாமல்

எழுதபட்டிருப்பதை

நான் மட்டும் வாசித்தேன்.

Iyyappa Madhavan

போனை நோண்டாமல் படத்தைப் பார்த்து விட்டால் அது நல்ல திரைப்படம். முன்பெல்லாம் சீட்டு நுனியில் உட்கார்ந்து பார்த்தால் அது சிறந்த படம்.

காலம் மாறிப்போச்சு.

Pon Vimala

ஒரு பத்து ரூபா கடன் குடுன்னு கேட்கிறவங்களை விட ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமா... ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குன்னு கூப்பிடுறவங்க தான் இப்போல்லாம் அதிகமாயிட்டாங்க.

யோசிச்சு பாத்தா முள்ளை முள்ளால எடுக்குற டெக்னிக்தான். இவங்க கூட எல்லாம் அஞ்சு நிமிஷம் பேசினாதான் தெரியும்... இதுக்கு நம்ம ஸ்ட்ரெஸ் எவ்வளவோ பரவாயில்லைனு!

கண்டிப்பா இதான் நிஜம். காசு பணத்தைவிட கொஞ்ச நேரமாச்சும் எதிர்ப்பார்ப்பில்லாம யாரோ யாருக்கோ காட்டுற அன்பில்தான் இந்த உலகம் இயங்குது போல!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

ரமேஷ் வைத்யா

சினிமாத்தனமே இல்லாத சினிமாவாம்.

நல்லாப் பாராட்டுறீங்க.

மாஸ்டர் பீஸ்

முன்னலாம் கூட இருந்தவங்க கொஞ்சம் விலகி போனாலே வலிக்கும் தக்க வச்சுக்க மனசு ரொம்பவே மெனக்கெடும்…

பட் இப்போலாம் நான் உங்களுக்கு கம்போர்ட்டபுளா இருந்தா, கூட இருங்க... இல்லனா நீங்க தாராளமா போகலாம்ற மைண்ட் செட்தான்.

இது பக்குவமா விரக்தியானுலாம் தெரியாது பட் ரொம்பவே நல்லாயிருக்கு!

  மம்மீஸ், பேபீஸ்! , ஹோம் ஸ்வீட் ஹோம்!
மம்மீஸ், பேபீஸ்! , ஹோம் ஸ்வீட் ஹோம்!

யாழினி

மெளனத்தை விட ஆழமான புறக்கணிப்பு வேறொன்று இல்லை.

ச ப் பா ணி

உரையாடல் குறையும்போது

உரையை முடித்துக்கொள்வதே நல்லது.