Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

அம்மாவுக்கு நாம் சொல்லாமலே தெரிவதெல் லாம், சொல்லியும் மற்றவருக்குப் புரிவதில்லை. ஒன்று அதீதமான கற்பனையான புரிதல், அல்லது அரைகுறை புரிதல்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

அம்மாவுக்கு நாம் சொல்லாமலே தெரிவதெல் லாம், சொல்லியும் மற்றவருக்குப் புரிவதில்லை. ஒன்று அதீதமான கற்பனையான புரிதல், அல்லது அரைகுறை புரிதல்.

Published:Updated:
லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
லைக் கமென்ட் ஷேர்

கிஷ்கிந்தா பாலாஜி

நம் பிரார்த்தனை

முழுதும் நிறைந்திருப்பது

கவலைகளன்றி

கடவுளில்லை.

Iyan Karthikeyan

வச்சு செஞ்சதும்,

வாழ வச்சதும்

சென்னைதான்...

வச்சு செஞ்சதும், வாழவைக்கத்தான்!

 ரெட்டை புள்ள, பாய்ஸ்!
ரெட்டை புள்ள, பாய்ஸ்!

Sowmya Ragavan

நேற்று தற்கொலை செய்து கொள்ளும் இளம் தாய்கள் பற்றி ஒரு வரி கூறி இருந்தேன். ‘குழந்தையை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்ளும் தாய், தன் பிள்ளையின் குழந்தைமையை யும் சேர்த்து கொன்று விட்டுச் செல்கிறாள்’.

இதுபற்றி எழுத நினைத்து பல நாள்கள் தவிர்த்திருக்கிறேன். அது ஒரு பரிதாபம் கோரும் பதிவாகக் கூடாதென்பதே காரணம். இப்பொழுதும் அந்த குறு குறுப்பு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு பதிவாய் மட்டுமே இதை முன் வைக்கிறேன்.

தாய்க்குப் பின் பிள்ளைகளுடைய நிலை என்பது வெளியிலிருந்து யாராலும் புரிந்து கொள்ளவே முடியாத துயரம். அம்மாவை இழந்த ஆரம்ப நாள்களில் நிறைய பரிதாபம் கிடைக் கும், பரிவும் கூட அதீதமாக இருக்கும். சிலது செயற்கையாக. அந்த வயதில் செயற்கை யெல்லாம் புரியாது.

போலிகளுக்கும் அசல்களுக்குமான வேறு பாடெல்லாம் வளர்ந்தவர்களுக்கே தெரிவதில்லை. பிள்ளைகளுக்கு எப்படித் தெரியும்? சில உதாரண சம்பவங்கள் இருக்கின்றன.

தெருவில் கைப்பிடித்து அழைத்துச் சென்ற உறவுப் பெண்மணியிடம், ‘உங்கள் மகளா?’ என யாரோ கேட்டதும் டக்கென கையை விட்டவர் பதறி, ‘எனக்கு இவ்ளோ பெரிய புள்ளைலாம் இல்ல’ என்றார். அதன்பின் அவர் கை பிடிக்கவே இல்லை. சாலை கடக்க கைப்பிடித்தே அத்தனை நாளும் பழகிய கைகள், காற்றில் துழாவி, கண்டுகொள்ளாத கைகளை பார்த்தபடியே முதன்முறையாக தனியாய் கடந்தது.

பசி என்ற உணர்வை அறிய அதீத விலை கொடுக்க வேண்டி இருந்தது. அம்மாவின் மரணம். விளையாடிக் களைத்து விட்டு பசிக்குது என யாரிடம் சொன்னாலும், ‘இப்பத்தானே சாப்டு இரண்டு மணி நேரம் கூட ஆகல’ என்ற முன்னொட் டுடனே சோறு கிடைக்கும். யாரும் தராமலில்லை. யாரும் வெறுப்பாளரில்லை. சித்தியோ பாட்டியோ அத்தையோ எனச் சொந்தங்கள்தான். எல்லாருக்கும் பாசம் இருந்தது. ஆனால் தேவை புரியவில்லை. யாரும் அம்மாவாய் இல்லை.

பாட்டிகளுக்கு இருந்த பாசம் அதீதமானது. அது பசியை விட பாதுகாப்பையே முக்கியமாக்கி இருந் தது. ’என்ன ரோட்ல விளையாட்டு’, ’இருட்டினப்பறம் எங்க போற’ எனக் கட்டுப்பாடுகளும் தலைமுறை இடைவெளியும் தோழமையைத் தடுத்திருந்தன. அம்மாவை தவற விடும் பெண்பிள்ளைகள் பெரிதும் இழப்பது இந்த தோழமையைத்தான்.

அம்மாவுக்கு நாம் சொல்லாமலே தெரிவதெல் லாம், சொல்லியும் மற்றவருக்குப் புரிவதில்லை. ஒன்று அதீதமான கற்பனையான புரிதல், அல்லது அரைகுறை புரிதல். அயர்ச்சியாகி யாரிடமும் எதையும் பகிர்வதை குழந்தைகள் நிறுத்தி விடுவர்.

பாலியல் சீண்டல்கள் முதல் வன்முறை வரை தானே சமாளிக்க, முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தங்களில் தடுமாறித் தடுமாறி தன்னை நிலைநிறுத்தி ஒரு கட்டத்தில் தனக்குத் தானே தாயாகிக்கொள்வர்.

மிக அல்பமாய் தோன்றினாலும் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன். உங்களுக்குப் பின் உங்கள் பிள்ளைகளை தூக்கிச் சுமக்கும் கைகள் உலகில் கிடையாது என்பதே உண்மை. நெடுந்தூரமும் நடத்தியே கூட்டிச் செல்லப்பட்ட நாள்களில் எல்லாருடைய முகமும் பார்த்து, ‘யாராவது தூக்கிக்க மாட்டாங்களா?’ என ஏங்கும் உங்கள் குழந்தை முகத்தை தற்கொலை முடிவுகளுக்கு முன் கண்ணில் கொண்டு வாருங்கள்.

கடைசியாய் ஒன்று. வளர்ந்து ஓரளவு படித்து, சில பல அனுபவங்களைக் கடந்த உங்களாலேயே இந்த உலகை சமாளிக்க வழியில்லாமல் சாகத் துணியும் போது... உங்களை மட்டுமே நம்பி உலகிற்கு வந்த பிள்ளைகள் இந்தக் கொடூர உலகை நீங்களும் இல்லாமல் போனால் எப்படி சமாளிப்பர் என சிந்தியுங்கள்.

இயற்கையாய் எப்படியும் மரணம் வரும். அதுவரை போராடியாவது வாழ்வோம். தீராத துன்பமோ இன்பமோ இல்லை. பிள்ளைகள் உங்கள் பொறுப்பு, கடமை.

 அம்மா டைம்!
அம்மா டைம்!

Shan Karuppusamy

ஒருவர் தன் சொந்தங்கள், நெருங்கிய நண்பர்கள், பக்கத்து வீடு, அலுவலகம் இவை அனைத்தையும் விட்டு சமூக வலைதளத்தில் வந்து அறிமுகம் இல்லாதவர்களிடம் பணம் கேட்கிறார் என்றால், அவர் அங்கே எல்லா இடங்களிலும் கடன்வாங்கி முடித்துவிட்டார் என்று பொருள். அதே போல கடன் கேட்பதில் இருக்கும் அடிப்படைக் கூச்சத்தை அவர் கடந்துவிட்டார் என்றும் புரிந்து கொள்ளவேண்டும். அப்படியே அவருக்குப் பணம் வந்தாலும், உலக அதிசயமாகக் கடனை அடைக்க வேண்டும் என்று முடிவு செய்தாலும், மேற்சொன்ன அனைவருக்கும் கொடுத்த பிறகுதான் உங்களுக்கு வந்து சேரும்.

 நட்சத்திரம் நகர்ந்துவிட்டது!
நட்சத்திரம் நகர்ந்துவிட்டது!

படிக்காதவன்

தூக்கம் இல்லாத இரவை போன்றது, வேலை இல்லாத பகல்.

கோழியின் கிறுக்கல்!!

கண் பார்வை Test பண்ணி கண்ணாடியை வாங்கி மாட்டாமல், வீட்டில் வைத்து விட்டால் கண் வலி சரியாகி விடும் என்று நம்புவர்களே அதிகம்!

kusumban

நம்மகிட்ட இருக்கும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று. நம் அருகில் இருப் பவர்களின் திறமை தெரியாது. அவர்கள் வைரம் என்று காட்ட, எங்கோ இருக்கும் கூழாங்கல் தேவைப்படும்.

நர்சிம்

‘சரி போய்த்தொலையுது’ என்பதன் தத்துவார்த்து மான பதம்தான், பக்குவம்.

 ப்ரியா இப்போ பிஸி!
ப்ரியா இப்போ பிஸி!

ஈரோடு வேலு

நிலைமை மாறினால்

மகிழ்ச்சியாக இருக்கலாம்

என்பது பொய்.

மகிழ்ச்சியாக இருந்தாலே

நிலைமை மாறிவிடும்

என்பதே உண்மை.

aravind

அடுத்த 5 ஆண்டுகளில் ஏடிஎம் கார்டுகள் இருக்காது! - ஸ்டேட் பேங்க்

இன்னும் 5 வருசத்துல உங்க பேங்கே இருக்குமானு தெரியல..?!

 அம்மா, பொண்ணு... அடுத்த அதகளம்!
அம்மா, பொண்ணு... அடுத்த அதகளம்!

நீர்ப்பறவை

முக்கியத்துவம்

இல்லாத இடங்களுக்கு

போகாமல் இருப்பது...

தன்மானத்தை காக்கும்..!