Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

வயசு நாலு மாசம்!
பிரீமியம் ஸ்டோரி
வயசு நாலு மாசம்!

இங்க பல பேருக்கு பல பிரச்னை இருக்கு. எல்லோரும் கண்ண மூடுனதும் தூங்கிடுறது கிடையாது.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

இங்க பல பேருக்கு பல பிரச்னை இருக்கு. எல்லோரும் கண்ண மூடுனதும் தூங்கிடுறது கிடையாது.

Published:Updated:
வயசு நாலு மாசம்!
பிரீமியம் ஸ்டோரி
வயசு நாலு மாசம்!

Saravanan Chandran

எனக்கு நானே விதித்துக்கொண்ட பத்துக் கட்டளைகள்...

1) பசிக்காமல் அமிர்தமே ஆனாலும் உண்ணாதே. தினமும் பத்து நிமிடமாவது கையைக் காலை ஆட்டு.

2) கழிப்பறையிலாவது சுவாசத்தைக் கவனி.

3) எதிர்மறைகளில் இருந்து தப்பித்து விலகி, நெருப்பு வளையமிட்டு, அதற்கு நடுவே ஒளிந்து கொள்.

4) கேட்பது, பார்ப்பது, படிப்பது மூன்றிற்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து விடு.

5) எதிலுமே மிதமான போதைக்கு உன்னைப் பழக்கு.

6) உறவுகளிடம் காது என்கிற உறுப்பை அதிகம் பயன்படுத்து.

7) யாராக இருப்பினும் தேவைக்கு அதிகமாக எதையும் சொல்லாதே. தேவைக்கு அதிகமான எதையும் கேட்காதே.

8) நன்றாகப் பழக்கமான உச்சி என்றாலும் சிறு பிடிமானமாவது இல்லாமல் நிற்காதே.

9) நீராய் உன்னைப் பாவனை செய்து கொள். வாய்க்கிற எந்தப் பாத்திரத்திலும் நிறைவாய் நிறைந்து கொள்.

10) நிதமும் இப்படி எதையாவது, மாடு எந்நேரமும், அசை போடுகிற மாதிரி எண்ணிக் கொண்டிருக்காமல், குறைந்தபட்சம் ஒரு தேநீரை யாவது ரசித்துக் குடி.

பாத்து எவ்ளோ நாளாச்சு... நந்தினி பராக்!
பாத்து எவ்ளோ நாளாச்சு... நந்தினி பராக்!

Ilangovan Geetha

ஒரு காலத்தில் நம்மிடம் அழுத்தமாக ஒட்டி இருந்த ஆணாதிக்க ஜம்பங்களை எல்லாம் மகள்கள் லெஃப்ட் ஹாண்டில் அடித்து நொறுக்கி விட்டு அசால்டாக கடந்து போவதை, வெளியே சொல்ல முடியாத விம்மலுடன் பார்த்து கண் கலங்கிக்கொண்டிருக்கும் அம்மாக்களின் உணர்வு தனி காவியம்.

Bogan Sankar

`மாத்ருபூமி'யில் பாடகி சித்ராவின் பேட்டி ஒன்று வந்திருக்கிறது.

கலைஞர்களின் வாழ்வுகளுக்கே உரிய அதீத துயரங்கள் சித்ராவின் வாழ்விலும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் அதைத் தங்கள் கலையால் எதிர்கொள்வார்கள்.

ஆனால் இந்தப் பேட்டியில் சித்ரா சொல்கிறார்...

“சோகம் ஏற்படுகையில் நான் பாட்டு கேட்ப தில்லை.”

ஏனோ இதைப் படிக்கையில் ஒரு துளி கண்ணீர் வந்துவிட்டது.

நலம் வாழ வாழ்த்துகள்!
நலம் வாழ வாழ்த்துகள்!

Erode Kathir

யாரைத் தவிர்க்க நினைக்கிறீர்களோ,

அவர்களையே அதிகம் கவனிப்பீர்கள்!

Mani Pmp

ஒரு யுகமென்பது

நீ பேசியதற்கும்

பேசாமல் போனதற்கும்

இடைப்பட்ட நாட்கள்.!

Primya Crosswin

தள்ளிப்போடப்பட்ட நீண்ட மரணமாய் ஒரு வாழ்வு!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

யாழினி

விட்டுட்டு போய்ட்டாங்க என்பதைவிட பயன்படுத்திக்கிட்டாங்க என்பதுதான் அன்பில் மிகவும் துயரமானது.

Selva Bharathi

குரல் தரும் ஆறுதலைக் குறுஞ்செய்திகள் தந்து விடுவதில்லை.

நட்சத்திரா

உற்சாக பயணம் செய்ய

திட்டமிட்ட உடனே

அம்மா சொல்லிவிடுவாள்

புளியோதரையும் துவையலும்

எடுத்துக்குவோமென

இரவே ஆரம்பிக்கும்

சமையல் ராஜ்ஜியத்தில்

தாளிக்கும் வாசத்திற்கே அடுப்படியை

சுற்றும் பிள்ளைகள்

பயண பரபரப்பில்

எண்ணப்படும் மூட்டைமுடிச்சுகளில்

முதலிடமும் புளியோதரைக்கே...

இப்பொழுதெல்லாம்

பயண திட்டத்தின் ஆரம்பமே

எந்த கடையில் சாப்பிடுவது என்பதுதான்

நினைவுகளில் மட்டுமே மணக்கிறது

புளியோதரை வாசம்!

டூர் வித் தங்கச்சி!
டூர் வித் தங்கச்சி!

5 எலி

இங்க பல பேருக்கு பல பிரச்னை இருக்கு.

எல்லோரும் கண்ண மூடுனதும் தூங்கிடுறது கிடையாது.

அந்த பிரச்னை மைண்ட்ல ஓடிட்டே இருக்கும்.

அப்போ மனச சமாதானம் பண்ணி தூங்குடானு சொல்ற வார்த்தை..

நாளைக்கு பாத்துக்கலாம்...

மாஸ்டர் பீஸ்

யாரு நம்மள பத்தி என்ன நினைச்சாலும் என்ன சொன்னாலும் அதை பத்திலாம் கவலைப்படாதீங்க. சந்தோஷமும் படாதீங்க.

அது உண்மையில்ல நாம நம்மள பத்தி என்ன நினைக்கிறோமோ அதான் உண்மை!

ஏன்னா நம்மள பத்தி முழுசா நமக்கு மட்டும்தான் தெரியும்!

வயசு நாலு மாசம்!
வயசு நாலு மாசம்!

டீ இன்னும் வரலை

ஒரு லிட்டர் தண்ணி

20 ரூபாய்க்கு

வாங்குறதை விட

2 லிட்டர் பாட்டில்

வாங்குனா 35 ரூபா தான்

5 ரூபா மிச்சம்னு யோசிக்குற மனசுக்கு

வண்டியில கிடக்குற பாட்டில்ல வீட்லயே தண்ணி புடிச்சுருந்தா... 35 ரூபாயுமே மிச்சம்னு யோசிக்கத் தெரியலை!