லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

கோல்டன் கேர்ள், soon to be Mom!
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டன் கேர்ள், soon to be Mom!

ஒருநாள் அல்லது இரண்டு நாள் அழுகை! அதன்பின் குடும்ப சாப்பாடு! இப்படியாக அத்தனை வருடங்கள் உடனிருந்த உங்களின் மரணம் மறக்கடிப்படும்

Primya Crosswin

சம்சார வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் மிக நுட்பமான கேள்வி ஒன்று... ‘இன்னிக்கி என் முகத்துல எதுனா வித்தியாசம் தெரியுதா?’

கூந்தலின் ஒற்றை மயிர் கற்றையை நெற்றியில் வழி தவறி தவழும் குழந்தையாய் அலைய விட்டிருப்பாள். அல்லது நெற்றியின் செந்தூரம் நிறம் மாறியிருக்கும். அல்லது மழை கரைத்த வயல் வரப்பாய் வகிடு தவிர்த்து பின்னியிருப்பாள்.

‘இன்னிக்கி என்கிட்ட எதுனா வித்தியாசம் தெரியுதா?’ - கேள்வி தீபாராதனை தட்டின் கற்பூரம் போல எரிந்துகொண்டிருக்க, அல்லிக்கும் அரளிக்கும் வித்தியாசம் தெரியாத நாளொன்றில், ‘என்னமோ தெரியல்லடி... ஆனா அழகா இருக்கியே’ என்றபடி கேள்வியின் தலைதொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு பின் இஷ்ட தெய்வத்தின் முகம் பார்ப்ப வனுக்கு என்றென்றும் நடை சாத்துவதில்லை விக்கிரகங்கள்...

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Bogan Sankar

எனக்கு ஒரு தெளிவு இருக்கிறது. எனக்குப் பிடித்திருப்பதெல்லாம் உயர்வானது என்று நான் சாதிப்பதில்லை. எனக்குப் பிடித்திருந்தது அவ்வளவு தான்.

உதாரணமாக பொன்னியின் செல்வன், அகதா கிறிஸ்டி, நடிகை சிவரஞ்சனி, அஞ்சாங்கிளாஸில் என்னுடன் படித்த கோவிந்த லட்சுமி.

உயர்வானவை எல்லாம் எனக்குப் பிடித்திருக்கும் என்கிற உத்தரவாதமும் இல்லை.

ஆனால், அவை உயர்வானவை என்பதை மறப்பதில்லை.

இந்திரா ராஜமாணிக்கம்

இரண்டு விதமான அபிப்ராயங்களை ஒரே நேரத்தில் தன் பிள்ளைகள் மீது வைக்கும் பழக்கம் அம்மாக்களுக்கு எப்போதும் உண்டு.

1. எம்புள்ளைக்கு ஒரு விவரமும் தெரியாது... அது அப்பாவி.

2. எம்புள்ளையா... அது ஊரையே வித்திடும்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Karthik

வெற்றுடல் என்றான பின்னும்

தூக்கி வளர்த்த கரங்களை

சாய்ந்து தூங்கிய மார்பை

ஓடி உழைத்த கால்களை

தொட்டுத் தொட்டு

மறைத்த தவறுக்கெல்லாம்

மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருத்தல்

ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருக்கும்

அப்பாவின் பழைய அழுக்குச் சட்டையை

கசங்கல் கலையாமல் பத்திரப்படுத்துதல்.

கண்ணாடியில் ஒட்டிவைத்திருக்கும்

அம்மாவின் ஸ்டிக்கர் பொட்டினை

உதிர்ந்துவிடாது

ரேகைகளோடு பாதுகாத்தல்

பத்திரமா இருந்துக்குவல்ல

என்று கேட்ட கடைசிக் குரலிடம்

எனக்கு பத்திரமா இருக்கத் தெரியாது

நீ போகாதே என்று

கால்மாட்டில்

இதயம் வெடித்து அழுது புலம்புதல்.

நாட்கள் சென்று

தனிமையில் அமர்ந்து

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது

ம்ம்ம் கொறிக்கல, நல்லா சாப்பிடறேன் என்று

தனக்குள் யாருக்கோ

பதில் சொல்லிக் கொண்டிருத்தல்.

மற்றும்

பத்திரமாயிருக்கப் பழகுதல்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Radhika

இந்த ஞாயிறு ஏன் தான் வருதோ??

என்ன எல்லாம் செய்யணும்னு plan பண்ணுறதுக்குள்ள அரை நாள் போயிருது!!

யாழினி

உண்மையான மனிதர்களை அறிந்து கொள்வதற்கு கொஞ்சம் கோபம் அவசியம்.

ராவணன்

ஒருநாள் அல்லது இரண்டு நாள் அழுகை! அதன்பின் குடும்ப சாப்பாடு! இப்படியாக அத்தனை வருடங்கள் உடனிருந்த உங்களின் மரணம் மறக்கடிப்படும். காலம் அதை மிக வீரியமாகச் செய்யும்! வாழும் காலத்தில் மகிழ்ந்திருங்கள்!

தீமையோ நன்மையோ உங்கள் வாழ்வினை சுகவாசியாக உங்கள் முடிவின் படி வாழுங்கள்!