தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நீ என்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சொல்பவனை ஒரு போதும் காதலிக்காதீர்கள்.

கவிதா சொர்ணவல்லி

சென்னையை ஓர் ஆண் பார்ப்பதற்கும் ஒரு பெண் பார்ப்பதற்கும் பாரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.

ஊரிலிருந்து இயல்பான, அவனுக்கான ஈகோ வுடன் வருகிற ஆணை, இங்கே இருக்கிற பூக்கார அக்காவோ, ஆட்டோக்கார அண்ணாவோ எளிதில் உடைத்து விடுகிறார்கள். சக மனிதர்களிடம் இருந்து தனக்கு போதுமான மரியாதை கிடைக்க வில்லை என்று சட்டென்று முடிவுக்கு வந்து விடுகிறான் அவன்.

ஆனால், ஊரில் இருந்து வருகிற பெண் சென்னையைப் பார்க்கிற பார்வை வேறாக இருக் கிறது. எந்த இடர்பாடுகளும் இல்லாத, எந்தக் கேள்விகளும் இல்லாத, எந்த spy கேமராக்களும் இல்லாத, பரந்த சுதந்திரத்தை வழங்குகிற அட்சய பாத்திரமாக சென்னை திகழ்கிறது.

எனக்கு சென்னை அப்படியான ஒன்றுதான்.

எனக்கான சுதந்திரத்தை சென்னைதான் வழங் கியது. எனக்கான அங்கீகாரத்தை, அதைப் பெறு வதற்கான உத்வேகத்தை சென்னைதான் அளித்தது.

முக்கியமாக... கிராமங்கள் எனக்கு அளித்திருந்த சாதி ரீதியான inferiority complex-சை சுக்குநூறாக உடைத்தெறிந்ததில் சென்னையின் பங்கு வானளா வியது.

எனக்குக் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பொறுப்புடன் அணுக வேண்டும் என்று கைப் பிடித்து அழைத்துச் சென்ற அதிரூபன்களை சென்னைதான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

யார் தயவையும் எதிர்பாராது சொந்தக் காலில் நிற்கிற, இன்னும் சொல்லப்போனால் அதிகமான பொருளாதார சுதந்திரத்தை சென்னை தங்கத்தட்டில் வைத்து அளித்துக்கொண்டே இருக்கிறது.

இலக்கியத்திலும், அரசியல் பங்களிப்பிலும், ஊடகத்திலும் நான் அடைந்திருக்கும் உயரம் என்பது சென்னை எனக்களித்த கொடை.

வாழ்நாளுக்கும் ஒரு நகரத்திற்கு கடமைப் பட்டிருப்பேன் என்றால் அது சென்னைக்கு மட்டுமே <3 love u chennai <3

I love you Two!
I love you Two!

Bogan Sankar

அம்மாவை நாளை பார்க்கப் போகிறேன்

அது ஒரு சம்பிரதாயம்தான்.

அம்மா மிக மெலிந்துவிட்டாள்

ஒரு எலும்புக் கூட்டைப் போலாகிவிட்டாள்

கட்டிலின் கீழொரு வாளியில்

மூத்திரம் போகிறாள்.

உத்திரத்தை விட்டு கண்ணைத் திருப்பச்

சிரமப்படுகிறாள்

நடப்பதே இல்லை.

போய்ப் பார்த்தால் `சாப்பிட்டாயா?' என்று மட்டும் கேட்பாள்.

இரண்டு மாதம், மூன்று மாதம் கழித்து

எப்போது திரும்பப் போனாலும்

அது மட்டும்தான்.

அவள் நினைவெல்லாம் இதுதான்.

நான் எங்கோ சாப்பிடாமல் இருக்கிறேன்.

சந்திரமுகி 2... வர்றோம்!
சந்திரமுகி 2... வர்றோம்!

Ramanujam Govindan

காதல் தொடர்பான பிரச்சனைகளுக்காக ஆலோசனை கேட்டு வரும் பெண்களிடம் (சில ஆண்களுக்கும்) நான் அடிக்கடி சொல்வது ஒன்றே ஒன்றுதான் - காதல் என்பது இயற்கையான உணர்வு. குலம், கோத்திரம், ஜாதி, மதம் எல்லாம் பார்த்து வருவதில்லை. நல்ல துணையாக இருப் பான்/ள் என்றால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டுப் பின் காதலன்/லி யுடன் இணையுங்கள். யாருக்காகவும் காதலை விட்டுக் கொடுக்காதீர்கள்

ஆனால் ஒன்றே ஒன்று...

‘நீ என்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சொல் பவனை ஒரு போதும் காதலிக்காதீர்கள். அப்படிப் பட்டவர்கள் ஆளுமைக் கோளாறு உடையவர்கள். Borderline personality என்போம். தீவிரமான அடையாளச் சிக்கல் இருப்பவர்கள். இந்தக் காதல் இல்லையென்றால் தங்கள் வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைப்பவர்கள். அவர்கள் காதலியையும் உண்மையாகக் காதலிக்க மாட்டார்கள். தங்களது பாதுகாப்பின்மைக்குக் (insecurity) காதலை ஒரு மருந்தாகக் கருதுபவர்கள்.

காதலியைத் தங்கள் உடைமையாக நினைத்துக் கொள்வார்கள். அவள் வேறு யாருடன் பேசினாலும் சந்தேகம் கொள்ளும் அளவுக்கு possessive ஆக இருப்பார்கள். கோபப்பட்டுக் கத்திவிட்டுப் பின் சில நிமிடங்கள் கழித்துக் காலில் விழுந்து கதறு வார்கள். காதலி தன்னை விட்டுவிட்டுப் போய் விடுவாளோ என்ற பயம். காதல் தோல்வியில் ஆசிட் அடிப்பது, ரயிலில் தள்ளிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடவும் கூடும்.

இவர்களை மணந்து கொள்பவர்கள் வாழ்க்கை அனேகமாக நரகமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இவர்களுக்குத் தேவை உளவியல் சிகிச்சை. காதல் அல்ல.

- டாக்டர் ஜி ராமானுஜம்

Saravanakarthikeyan Chinnadurai

ஊர்ப் பற்று என்பதே அபத்தமானது. Floating population உள்ள பெருநகரங்கள் தவிர மற்ற ஊர்களில் அதற்கும் சாதிப் பற்றுக்கும் மெல்லிய வித்தியாசம்தான். அதனால் ஊர்ப் பற்று என்பதையும் நான் சற்று ஆபத்தானதாகவே பார்க்கிறேன்.

நான் பிறந்தது கோவை, பள்ளி ஈரோடு, கல்லூரி சென்னை, வேலை பெங்களூர். இவற்றில் சென்னை மீது மெல்லிய சாய்வு உண்டுதான். அதற்குக் காரணம் என் தனிப்பட்ட ஆர்வம் மட்டுமே. புத்தகக் கடைகள், இலக்கிய நிகழ்வுகள் என அங்கே எனக்கு ஈர்ப்பானவை அதிகம். ஆனால், அதைத்தாண்டி ஒன்றுமில்லை. அதே போல் மற்ற மூன்று நகரங்களின் மீதும் பெரிய பாசமோ, வெறுப்போ இரண்டும் இல்லை.

மற்றபடி, பிழைக்க வருவோரை வாரி அணைத் துக்கொள்ளும் என்பதெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட கருத்துகளே! எல்லா நகரங்களும் அப்படித்தான் இருக்கும். அதன் வளர்ச்சி பொறுத்தும், நம் துறை பொறுத்தும் வாய்ப்புகள் மாறும். அதனால் ஒரு நகரத்தைப் பொதுமைப்படுத்திச் சிலாகிப்பது, வெறுப்பது இரண்டுமே அனாவசியச் சுமைகள். எல்லா நகரங்களிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நமக்குக் குறைந்த கெட்டது நடக்கும் நகரத்தை நாம் விரும்புவோம். எல்லோருக் கும் அது ஒரே மாதிரியானதாக இருக்காது.

தமிழ்
பியூட்டீஸ்!
தமிழ் பியூட்டீஸ்!

Tk Kalapria

பலூனை

நல்லபடியாக ஊதி

முடிச்சிட்டு

குழந்தையிடம் கொடுக்கும் வரை

வேறு கவலைகள்

நம்மைத் தின்னாமல்தானே இருக்கின்றன.

Ramanujam Govindan

மருத்துவமனையில் சிகிச்சையின்போது சாக்லேட், ஐஸ்க்ரீம், வெண்பொங்கல், இட்லி, இனிப்பு வகைகள் என பல வழங்கப்பட்டிருக்கின்றன.

எனக்கென்னவோ கவுண்டமணி, செந்தில் ஒரு கிலோ ஜாங்கிரி வாங்கிக் கொடுத்த காமெடி நினைவுக்கு வருது. என்ன... அதில் கவுண்டரோட தாத்தா பொழைச்சிடுவார்!

சுபா...

நிறைய பேசுறதுக்கும் நிறைவா பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...

ச ப் பா ணி

``உங்க மனசுக்கு எது சரினு படுதோ அதையே செய்ங்க” என்பது ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு.

Mannar & company™

துணிகள் உற்பத்தி விலைக்கே கிடைக்கும் என சொல்றதும், பட்டாசுகள் சிவகாசி விலைக்கே கிடைக்கும்னு சொல்றதும் வியாபார தந்திரம்தான்!

மாஸ்டர் பீஸ்

எந்த ஒரு விசயத்திலயுமே ஃபைனல் முடிவு முடிந்தவரை உங்களுடையதாக இருக்கும்படி வச்சுக்கோங்க! சமயத்துல அது தப்பாவே போய்ட்டா கூட, ’ஆமா நான்தான்’ங்கிற திருப்தியாவது கிடைக்கும்!