ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

புகைப்படத்துக்கு போஸ் தரும்போது வயிற்றுக் குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொள்வது நல்ல உத்தி.

Shobana Narayanan

மனிதர்களை மிக நேசிப்பது என்பதன் பலவீனமான பகுதி அவர்கள் வருந்துவார்கள் என்று நாம் மறுதலித்தோ, நம் உணர்வுகளைக் வெளிக்காட்டாதோ அவர்களுக்காக தலை யசைப்பது. நேசிப்பவர்களுக்காக தொடர்ந்து நாம் நம் மனதை மறைக்கிறோம். இல்லை என்றோ, முடியாது என்றோ, பிடிக்காது என்றோ சொல்வதே இல்லை.

தொடர்ந்து இந்தச் செயல் மெல்ல மெல்ல நம்மை ஒரு மன அழுத்தத்திற்கு தள்ளுகிறது. நமக்கு மனதுக்கு உடன்படாத செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறோம்.

இத்தனை நாள் இதனை செய்தேனே, உனக்குப் புரியவில்லையா, தெரியவில்லையா என்று அரற்றிக்கொண்டு, நம்மைப்போலவே அவரையும் என நம்பிக்கொண்டு, எதையோ இலக்கில் எதிர் பார்த்துக்கொண்டு, கடைசியில் மன நோயாளியாகப் போய்விடுகிறோம்.

எதிர் மனிதருக்கு என்ன நடக்கிறது என்பதுகூட புரியாது. ‘உனக்கு பிடிக்காது என நீ சொன்னதே இல்லையே’ என்று மிகச் சாதரணமாக சொல்லுவார்கள். நகர்ந்து விடுவார்கள். முழுப்பழியும் கூட நமக்கே.

நாமும் உணர்வு வயப்பட்டு நம்மை வெளிப்படுத்திக் கொள்வோம். ஆனாலும் அதற்கொரு பெரிய பலனோ, நமக்கான முழு மனத்திருப்தியோ கிடைக்காது. மாறாக இதைப் போய் சொன்னோமே என நாமே குற்றவுணர் வாகி மறுபடியும் மருகுவதுதான் மிச்சம்.

அன்பின் நிமித்தம் அடுத்தவரை நேசிப்பதில் தவறேதும் இல்லை. ஆனால், அதில் பத்தில் ஒரு பங்காவது நம்மை நேசிக்காமல் அவருக்காக உருகிக் கொண்டிருப்பது நிச்சயம் மன அழுத்தத்திலும் உறவுச்சிக்கல்களிலும் தான் போய் முடியும்.

தயவுசெய்து செல்ல வேண்டிய நேரத்தில் முடியாது, பிடிக்கவில்லை என்ற இரு வார்த்தைகளை சொல்லி விடுங்கள். அல்லது வாழ்வு நிரந்தர துன்பம்தான். நாம் நிரந்தர நோயாளிதான்.

அன்பின் நிமித்தம் என்பதே மாயை. நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் திரை. இங்கு அப்படியான அன்பிற்கு, பதில் அன்போ மரியாதையோ கிடைப்ப தென்பது நடக்கவே நடக்காத செயல்.

அன்பிற்காக இரைஞ்சிக்கொண்டு, மரியாதைக்காக இரைஞ்சிக்கொண்டு, எந்நேரமும் தாழ்ந்து கிடப்பதற்கு அன்பெனப் பெயரிட்டுக்கொள்வது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் வாழ்நாள் அவமரியாதை.

குறைந்தபட்சம் உங்களுக்கான மரியாதையை உங்கள் மனம் உங்களிடம் இரைஞ்சுமளவாவது நட வாமல் இருங்கள். அதுவே சிறப்பாக வாழ்ந்ததற்கு ஒரே பொருள்.

சுயமரியாதை என்பதுதான் உண்மையாக உங்களுக்கு நீங்கள் செய்துகொள்ளும் பேரன்பின் செயல்.

பேரன்பு செய்யுங்கள்.

‘ஆமா... காதலிக்கிறோம்!’
‘ஆமா... காதலிக்கிறோம்!’
‘கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!’
‘கல்யாணம் பண்ணிக்கப் போறோம்!’

Umanath Selvan

வலிகள் வலிமை கொடுப்பதோடு நில்லாமல் நேர்மையையும் அறத்தையும் கூட்டுகின்றன.

Gokul Prasad

புகைப்படத்துக்கு போஸ் தரும்போது வயிற்றுக் குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொள்வது நல்ல உத்தி. பணிவாகத் தோற்றமளிப்பது போன்றும் இருக்கும், தொந்தியை மறைத்தது போலவும் இருக்கும். டூ இன் ஒன் பயன்.

கிஷ்கிந்தா பாலாஜி

மழையின் பாதத்தில்

விரல்களில்லை.

ராஜீவ் பிள்ளையும்,
ரோஹித் வெமுலா அம்மாவும்!
ராஜீவ் பிள்ளையும், ரோஹித் வெமுலா அம்மாவும்!

மாஸ்டர் பீஸ்

ஒருத்தவங்க இருக்கும்போதே அவங்கள கொண்டாடிட்டோம்னா அவங்களோட இன்மை நம்மள அதிகம் பாதிக்காது.

அவங்க இருக்கும்போது கண்டுக்காம இருந் துட்டு அவங்க இல்லாதப்போ ஒப்பாரி வைக் குறதுல, நம்ம சிஎம் சொல்ற மாதிரி, எந்த பயனும் இல்லை.

மெய்யர்

தேடல் அற்ற இடத்தில் அன்பை நிரூபித்தல் என்பது அவமானம்.

அது ஒருபோதும் நிம்மதியை தராது.

Sasikumar J

நமக்கில்லாதவர்களை நினைத்துக்கொண்டே இருப்பதால்...

நமக்கானவர்களை தொலைத்து விடுகிறோம்!

The Common Man

Working dayல மூணு மேட்ச் வைக்கறீங்க...

சனிக்கிழமை ஒரு மேட்ச் வைக்கறீங்க...

யாருடா நீங்க

@ICC