ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்

உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களை உங்களால் மாற்ற முடியாது.

Ramanujam Govindan

உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களை உங்களால் மாற்ற முடியாது.

ஆனால், உங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களை நீங்கள் மாற்றலாம்!

Saravanakarthikeyan Chinnadurai

உங்கள் இணையைத் தேர்ந்தெடுக்கும் முழுச் சுதந்திரம் உங்களுக்கு இருந்தால் இவற் றில் எந்த மூன்றை முக்கியமானதாகக் கருது வீர்கள்? வரிசைப்படுத்துங்கள்.

1) முக / உடல் அழகுடையவர்

2) அறிவானவர் / திறமையானவர்

3) நல்லவர் / அறம் மிக்கவர்

4) வீரமானவர் / தைரியமானவர்

5) பணம் / அதிகாரம் / புகழ் படைத்தவர்

6) உங்கள் சாதி / மத / இனத்தவர்

7) உங்களை மதிப்பவர் / விரும்புபவர்

குடும்ப புகைப்படம்!
குடும்ப புகைப்படம்!

Sowmya Ragavan

வாட்ச் விலை 1 லட்சம், 6 லட்சம்,

8 லட்சம்னெல்லாம் பேசிக்கறாங்க.

எல்லாம் நேரம்.

Gokul Prasad

தமிழ்த் திரைப்படங்களில் என்னை மிகவும் எரிச்சலூட்டக்கூடிய காட்சி.

ஒரு சிறுவனின் கையில் தேநீர்க் குவளை களைக் கொடுத்து அதன் பின்னாலேயே கிளோசப் பில் பின்தொடர்வது. இதுவரை 938 தடவைகள் எடுத்துவிட்டார்கள்.

Vannadasan Sivasankaran

மனிதர்கள் வாசற்படியில் நிற்பதைப்பார்த்த யாரோதான் புகைப்படங்களுக்கு சட்டம் இடுவதைத் தொடங்கியிருக்க வேண்டும்.

Arun Dir

ஞாயிற்றுக்கிழமைக்கான கொண்டாட்ட மனநிலை வாய்க்கப் பெறாதவர்களுக்கு திங்கட்கிழமைக்கான மன அழுத்தங்களும் இருப்பதில்லை.

வாய்விட்டு சிரிச்சா...
வாய்விட்டு சிரிச்சா...

Shobana Narayanan

நான் சின்னபுள்ளைல லெமன் சாதத்துல மஞ்சள் கலர் எலுமிச்சம்பழத்துலருந்தே வருதுனு நம்புனேன்.

லெமன் சோறுக்கு மஞ்சப்பொடியப் போட்டு லெமனுக்கு மேட்சிங்காவும் தேங்கா சோத்துக்கு எதுவும் போடாத தேங்காய்க்கு மேட்சிங்காவும் பண்ண நம்ம முன்னோர்கள் எப்பேர்ப்பட்ட ஞானிகள்.

ஒண்ணுமில்ல... மழை கவுத்திருச்சு... இன்னிக்கு பள்ளிக்கூடம்... லெமன் சாதம்.

- அபலை போராளியின் டைரிக் குறிப்பிலிருந்து

அது ஒரு அழகிய 80’ஸ் காலம்!
அது ஒரு அழகிய 80’ஸ் காலம்!

ச ப் பா ணி

விடுமுறை நாளில் பெய்யும் மழைகளுக்கு குழந்தைகளிடம் மதிப்பு இருப்பதில்லை.

யாத்திரி

வேண்டுமெனவும்

வேண்டாமெனவும்

ஒரே பொழுதில் மாறிமாறிச் சிமிட்டும்

இந்தக் கண்களை மூடிக்கொள்

உள்ளதைச் சொல்லாத

பொல்லாத பார்வை முன்

ஒரு முத்தம்

மயங்கி நிற்கிறது.

பாக்டீரியா

இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி

எப்டி...?

~ அது வந்து தம்பி... இங்கிலாந்து பிரதமரே இந்தியர்தான...