Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

ஒற்றைக் காலில் நின்றுகொண்டு எத்தனை கூடுகளைத் தாங்குகிறது மரம்.

பிரீமியம் ஸ்டோரி

bala.aramvalarthaan

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, விஷாலை பள்ளியில் கொண்டு விட்டேன் (தேர்வு - கட்டாயம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்) பள்ளியின் வாசலை நெருங்கும்போது, முன்னாலிருந்த ஆட்டோ/கார் வாகனங்களில் இருந்து டீச்சர்கள் இறங்கி பள்ளிக்குள் சென்றுகொண்டிருந்தார்கள்.

விஷால் கார் கதவைத் திறந்துகொண்டு இறங்கும் போது... “என்னடா... நாம சீக்கிரம் வந்துட்டோமா... டீச்சராகத் தான் வருகிறார்கள். பசங்க யாரையும் காணோம்?”

ஹஸ்கி குரலில்: “அப்பா... அவங்கெல்லாம் டீச்சர் இல்லை... என்னோட classmates தான்.”

aruna.raj.35

பிரித்துவிட தையலே இல்லாதபோதுதான் பருத்து விட்டதின் வீரியம் புரிகிறது.

ஒரு ஸ்ட்ரா கொடுத்தா குடிச்சிருவேன்...
ஒரு ஸ்ட்ரா கொடுத்தா குடிச்சிருவேன்...

jv.balaji

என்னிக்குமே...

`உங்க அளவுக்கு வேல பண்ண முடியாதவங்கதான் உங்களுக்கு எதிரா வேலை பண்ணுவாங்க...'

revathy.ravikanth

தூக்கக்கலக்கம் என்ன செய்யும்!?

காஸ் சிலிண்டருக்கு 920/-ரூபாய்க்கு 1,100/- கொடுத்து மீதம் 80/-வேண்டி நிற்கும்.

meenammakayal

வாட்ஸ் அப் ஃபேஸ்புக் நிரந்தரமாக மூடப்பட்டால் என்னாகும்?

எதுவும் ஆகாது... இன்னொரு செயலி வரும். டிக்டாக் ban பண்ணாங்க... ஏதாவது ஆச்சா?

ஒரு ஸ்ட்ரா கொடுத்தா குடிச்சிருவேன்...
ஒரு ஸ்ட்ரா கொடுத்தா குடிச்சிருவேன்...

@nesamithran

ஒற்றைக் காலில் நின்றுகொண்டு எத்தனை கூடுகளைத் தாங்குகிறது மரம்.

இவ்வளவு அன்புக்கு எவ்வளவு தருகிறாய் நீ.

@Kozhiyaar

வாழ்க்கையில் சிலர் ஸாக்ஸ் மாதிரி, எப்படி வேணா மாற்றிப் போட்டுக்கலாம்.

சிலர் ஷூ மாதிரி, அந்தக் காலுக்கு மட்டும்தான் போட முடியும்!

குட்டிப் பையனுக்கு ஹாப்பி பர்த்டே...
குட்டிப் பையனுக்கு ஹாப்பி பர்த்டே...

revathy.ravikanth

மனைவி: மிக்ஸி ரிப்பேராகிடுச்சு!

கணவன்: அதுக்கு!?

மனைவி: அதுக்கா... சட்னி அரைக்க வேணாமா...

கணவன்: கிரைண்டர்ல அரச்சுடு!

#ஹுயூமன்ஸா_நீங்கெல்லாம்.

@manipmp

சந்தித்த வேளையில்

சிந்திக்கவே இல்லை சட்டென

செல்ஃபி எடுத்துவிடுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு