Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

நீ சாப்டவே வேணாம்! தண்ணிய குடிச்சுட்டு கெளம்பு! போ!

பிரீமியம் ஸ்டோரி

revathy.ravikanth

என்ன பிரேக்ஃபாஸ்ட்!?

தோசை!

எப்ப பாத்தாலும் தோசையா!?

அப்போ இட்லி செய்யவா!

எப்ப பாத்தாலும் இட்லியா!?

பொங்கல் ஓகே வா!?

உவ்வே!

சேமியா செய்யவா!?

அதெல்லாம் மனுஷன் திம்பானா!

ரவா உப்மா!?

ச்சை!

இந்தா டம்ளர்!

எதுக்கு!?

நீ சாப்டவே வேணாம்! தண்ணிய குடிச்சுட்டு கெளம்பு! போ!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

bommaiyamurugan.murugan

டேய்... ஒழுங்கா ஓடிப்போயிடுங்க இல்ல ராத்திரில பேயை கூப்பிடுவேன்…

கூப்பிடுறது தான் கூப்டுறீங்க... காஞ்சனா பேயை, இல்லன்னா அரண்மனை பேயை கூப்பிடுங்க நல்ல காமெடியா இருக்கும்…

வெஷம்... வெஷம்... வெஷம்... இந்த ஊர்ல பேய்ங்களக் கூட காமெடி பீசா ஆக்கி வச்சிருக்காங்க...

jv.balaji

Bigboss, வீட்டுல பெரிய வேலைனு பார்த்தா ரெண்டே ரெண்டுதான்...இங்கேந்து அங்க போயிட்டு உக்காந்து இவங்கள பத்தி பேசணும்... அங்கேந்து இங்க வந்து திரும்ப உக்காந்து அவங்கள பத்தி பேசணும். அவ்ளோதான்!

aruna.raj.35

‘ம்மா இன்னிக்கு அப்பத்தா வீட்டுக்குள்ளவே கேம்ப்ஃபயர் பண்ணோம்!’

‘அச்சோ அது கேம்ப்ஃபயர் இல்ல கண்ணா ஹோமம்.’

bommaiyamurugan.murugan

பல்ல கடிச்சிகிட்டு இந்த 24 மணி நேரத்தைப் பொறுத்துகிட்டா போதும்... வழக்கம் போல இந்த திங்கள்கிழமையையும் கடந்துடலாம்…

thaamiraa

டிவி ஷோக்கள், பிக் பாஸ், சர்வைவர் என்று எல்லாவற்றிலும் இந்த நடுவாந்தர வி.ஐ.பி-கள் தங்களுடைய கஷ்டங்களைச் சொல்கிறேன் பேர்வழி என்று என்னவோ இவர்கள் மட்டும்தான் கஷ்டமான வாழ்க்கையைக் கடந்து வந்தது போலவும், மற்றவர்கள் எல்லோரும் பொன்னூஞ்சலில் ஆடி வளர்ந்தது போலவும் அளந்துவிட்டு, கண்ணீர் கசிந்து வருகிறார்கள். அதுவும் சிலரின் கதையெல்லாம்,

`நான் சின்னதா இருக்குறப்போ சாப்பிட ரெட்வெல்வெட் கேக் கூட கிடைக்காது, எங்கப்பாதான் ஆடி கார்ல கஷ்டப்பட்டு வேலைக்குபோய் சம்பாதிச்சு பிளாக் பாரெஸ்ட் வாங்கிட்டு வருவாரு. அதைத்தான் சாப்பிட்டு வளர்ந்தேன்'ங்கிற ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு.

இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து பகிர்ந்துகொண்ட கதை நம் மனதை சற்றே ஆட்டிப் பார்த்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கெனவே நாம் உணர்ந்திருக்கும் விஷயம்தான் எனினும் வெகுமக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் திருநங்கையரின் துயர வாழ்வை மிக அழுத்தமாகப் பதியவைக்க வேண்டிய அவசியம் இங்கு மிக அதிகமாகவே இருக்கிறது. அதைச் செவ்வனே செய்தார் நமீதா. அழுதவண்ணம், நிறைய நேரம் எடுத்துக்கொண்டு அவர் அதை விவரித்திருந்தாலும் அது அப்படியாக அமைந்தது சிறப்பு. எங்கே அவர் உணர்ச்சி வேகத்தில் சுயகதையாக மட்டுமே நிறுத்தி விடுவாரோ என்றொரு சின்ன பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தபோது மிக அழகாக, அழுத்தமாக, திருநங்கையர் ஒரு சமூகமாக மேற்கொண்டிருக்கும் போராட்டத்தை, சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிட்டு எடுத்துச் சொல்லி அனைவருக்குமான பிரதிநிதியாக நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்பதையும் பதிய வைத்தார். `எங்களுக்கான கல்வியை மட்டுமாவது கொடுங்கள்' என்று கண்ணீருடன் அவர் கதறியது ஒவ்வொருவர் மனதையும் கரைத்திருக்கும். திரு நங்கையர், LGBTயினர் குறித்த விழிப்புணர்வுக்கு நமீதா மாரிமுத்து போன்றோர் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்களுக்குமான சமநீதி உலகம் விரைவிலேயே மலரட்டும்! அறிவு அதற்கு துணை நிற்கட்டும்!

நமீதாவுக்கு நம் அன்பு.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

Kozhiyaar

எவருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்!

மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரைப் பார்த்து தலைக்கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!

Kozhiyaar

ஏம்பா Fridgeல வெவ்வேறு கலர் டப்பாவில் குழம்பு ஊத்தி வச்சிருக்காங்க அம்மா!?

அதுவா, வெவ்வேறு நாள் செய்த குழம்பு, வெவ்வேறு கலர் டப்பாவில் இருக்கும்!

chithradevi_91

ஒரு மணி நேரம் எவ்வளவு நெடியது என்பது ஸ்கூலில் கடைசி பீரியடில் காத்திருக்கும் மாணவர் களுக்குத் தெரியும்.

manipmp

நம் கையெழுத்து ஆட்டோகிராஃபாக மாறும் இடம் பேங்க் லோன் படிவங்களில்தான்.

ItzDs

மும்பைக்குப் போனேன்... அங்க ஹிந்தி எனக்கு ரொம்ப யூஸா இருந்ததுங்கிறாங்க. ஹிந்தி பேசுற ஊருக்குப் போனா யூஸா தான் இருக்கு.

எங்க ஹிந்தி கத்துகிட்டு பிரான்ஸ் போ பார்ப்போம்

ItzDs

உடம்பு நல்லா இருந்தபோது, அந்த உடம்பை எந்தளவுக்கு அசால்ட்டா கையாண்டு இருக்கோம். அது நம்மளை எந்தளவு மகிழ்ச்சியா வச்சியிருந் திருந்ததுன்னு உடம்பு நோய்ப்பட்டு கிடக்கும்போது புரியுது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு