Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

வீட்டு போனை ஆண் எடுக்குறாரா? தயவு செஞ்சு அப்படியே கட் பண்ணி வுட்டுடுங்க. நாம கால் பண்ணா மொட்டையா `பிஸி'ன்னு சொல்லும் வாய்

பிரீமியம் ஸ்டோரி

@Kozhiyaar

மழைக்காலத்துக்கு மட்டும் நமக்கு பதில் குளித்து, வேலைக்குக் கிளம்பிச் செல்ல ஒரு ‘டூப்’ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

@asdbharathi

அனைத்துப் பாதைகளும் அடைக்கப் பட்டிருக்கும்போதுதான் புதிய பாதைகளை உருவாக்க முடியும்.

@kumarfaculty

பக்கத்து வீட்டில் அதிகமாய் கடன் வாங்கியது பால் பொறை ஊற்றுவதற்கான தயிராகவோ, மோராகவோத்தான் இருக் கும்..!

@manipmp

பொறுமையின் எல்லை என்பது யூடியூபில் Skip ad வரும் வரை பொறுத் திருப்பதே.

jeyachandra.hashmi

“அப்பா.. எனக்கு ஏன் கைல முடி ரொம்ப கம்மியா இருக்கு?”

“தம்பி பேபில... அதான்... பிக் பாய் ஆக ஆக முடி வளர்ந்துரும்.”

“நிறைய வளருமா?”

“ம்ம்ம்...”

“அப்போ நான் போலார் பியர் ஆகிட்டேன்னா?”

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

revathy.ravikanth

ஆத்துக்கார டூட் ~ இவ ஏன் எனக்கு முறைப் பொண்ணா பொறக்கல...

மீ ~ யாருய்யா!?

ஆத்துக்கார டூட் ~ ராஷ்மிகா!

karthekarna

எல்லோருக்குள்ளும் தட்டியெழுப்ப தயாராக உறங்கும் மிருகம் உண்டு. பெரும்பாலானவர்களுக்கு அது நாயாக இருக்கிறது.

sowmya.ragavan

ரசிச்சு ரசிச்சு கடைசில ஃபகத் மண்டை மாதிரியே நமக்கும் ஆயிரும் போல.

முதல்லயெல்லாம் தலை சீவினா உதிரும் முடி கோலிக்குண்டு அளவுக்கு வரும். இப்பயெல்லாம் கிரிக்கெட் பால் அளவுக்கு வருது.

sridevi.krishnaswamy

சமைக்கலாம்னு Laptop, Spotify playlist, Bluetooth speaker எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு பாத்தா, வெங்காயம், மிளகா, கொத்தமல்லி எல்லாம் இருக்க மாட்டேங்குது.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

kundhaani

சம்பவம் 1:

தீபாவளிக்கு ஸ்வீட் காரம் பக்கத்து அக்கத்து வீட்டுக்கு கொடுத்தனுப்பணுமா?

உங்களுக்கு வேணா ஒரு வேலை முடிக்கணும்ங்கற ஆவல் இருக்கலாம். இல்ல பத்து நாளைக்கு முன்ன செஞ்சதாச்சே கெட்டுப்போறதுக்குள்ள கொடுத் துடணும்ங்கற அவசரம் இருக்கலாம். ஆனா, மனைவி வீட்ல இல்லாட்டி, அத அந்த வீட்டு ஆண் கிட்ட மட்டும் கொடுத்துறாதீங்க.

இல்லாட்டி கொடுத்தனுப்பினது ஷ்ருத்தி வீடா, ஷ்ரேயா வீடா? யாருக்கு நன்றி அனுப்பணும்ங்கற சஸ்பன்ஸ்லயே பாதி நாள் போகுது.

சம்பவம் 2 :

வீட்டு போனை ஆண் எடுக்குறாரா? தயவு செஞ்சு அப்படியே கட் பண்ணி வுட்டுடுங்க. நாம கால் பண்ணா மொட்டையா `பிஸி'ன்னு சொல்லும் வாய்…

நம்மள பத்தி கேட்டா மட்டும்… 11.30-க்கு ‘தூங் கிட்டிருக்கா’ன்னு அயர்ன்க்கு துணி கேக்கற லேடிக்கு கூட டீடெயில்ஸ் கொடுக்கும்.

vinayaga.murugan.7

அலுவலக நண்பரும், நானும் வருமானவரிக் கணக்கை ஒரே ஆடிட்டரிடம் கொடுப்போம். இந்த முறை நண்பரது சேமிப்பு பற்றிக் கேட்டேன். அவருக்கு என்னைவிட சம்பளம் அதிகம். நியாயமாக என்னைவிட கூடுதலாகச் சேமித்திருக்க வேண்டும். ஆனால், அவர் சொன்னது தற்போது உள்ள எனது சேமிப்பில் பாதி தான். விசாரித்த பிறகுதான் தெரிந்தது. பதினைந்து ஆண்டுகளாக அவர் வங்கி வைப்புநிதியைத் தவிர, வேறு எதிலும் சேமித்திருக்கவில்லை. நான் வங்கியில் பணத்தை முதலீடு செய்வதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் வங்கியில் ஒரு லட்சம் போட்டிருந்தால் 6 சதவிகித வட்டி என்றால் இப்போது 2.3 லட்சம் கணக்கு வரும். அதுவே 20 சதவிகித வட்டி என்றால் 15.4 லட்சம் வந்திருக்கும். நான் 8 சதவிகிதத்துக்கு கீழே வட்டி வரும் எதிலும் முதலீடு செய்ததே இல்லை. அதுக்காக ரிஸ்க் எடுக்க முடியுமாங்க என்று கேட்டார்.

கண்டிப்பாக 60 வயதுக்குப் பிறகு, சந்தையில் முதலீடு செய்வது ரிஸ்க்தான். ஆனா, சம்பாதிக்கும் வயதில் அதுவும் நடுத்தர வயதில் இருப்பவர்கள் ரிஸ்க் எடுத்துதான் தீர வேண்டும். பிஎஃப்பில் 8 சதவிகிதம் வட்டி தருகிறார்கள். அதில் அவர் முதலீடு செய்திருந்தால்கூட அவரது முதலீடு மூன்று மடங்காகி யிருக்கும். ஓரளவு பாதுகாப்பான நிறுவனங்கள் கார்ப்பரேட் டெபாசிட் தருகிறார்கள். அதில் 7.5 சதவிகிதம் வட்டி தருகிறார்கள்.

எந்தளவு விரைவாக சேமிப்பை தொடங்குவது முக்கியமோ அதைவிட முக்கியம் சரியான இடத்தில் முதலீடு செய்வது. அதுபோல வருமானவரி தாக்கல் செய்யும்போது பலரும் ஆடிட்டர்களைப் பார்க்காமல் அவர்களாகவே இணையத்தில் தாக்கல் செய்கிறார்கள். ஒரு சில வேலைகளை அந்த துறைசார்ந்த நிபுணர் களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு