Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

லைக் கமென்ட் ஷேர்
பிரீமியம் ஸ்டோரி
News
லைக் கமென்ட் ஷேர்

இல்லம்மா நான் உலகத்துலயே நீங்கதான் அதிகம் நையிநையின்னு பண்ற அம்மான்னு நெனச்சிருந்தேன்…ஆனா, அந்த ஆன்டி உங்க அக்காம்மா!’

Shanmugavel S Pavithran

ஏண்ணே அவன அடிச்சீங்க?

`ஒமிக்ரான்'ங்கற பேரே வாயில நுழையில... வைரஸ் மட்டும் எப்படிண்ணே நுழையும்னு கேட்கறாம்பா.

sowmya.ragavan

ஊர் முழுக்க ஜோராய் கொட்டும் மழையை ரசிக்க... வீட்டுக்குள் தண்ணீர் சொட்டாத ஒரே ஒரு கூரை தேவையாய் இருக்கிறது.

`க்ளிக் க்ளிக்' என நீர் சொட்டும் சப்தம் ஒரு திகில் படத்தைவிட அச்சமானது.

சுவர் துளைக்கும் டிரில்லிங் இயந்திரத்தைவிட இரைச்சலானது.

sowmya.ragavan

‘நெல்லைக் கொட்டினா அள்ளிடலாம் சொல்லக் கொட்டினா அள்ள முடியாது’ன்னவன் வீட்ல போய் கடுகைக் கொட்டிவிட்டு ஓடி வந்துரணும்.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

aruna.raj.35

‘அம்மா நேத்து ப்ரணவ் வீட்ல அவன் அம்மாவ பார்த்ததுலயிருந்து எனக்கு உங்க மேல லவ் அதிகமா யிடுச்சும்மா...’

‘ஏன்டா, அவங்க ப்ரணவ்வ ரொம்ப கொஞ்சறாங் களா?’

‘இல்லம்மா நான் உலகத்துலயே நீங்கதான் அதிகம் நையிநையின்னு பண்ற அம்மான்னு நெனச்சிருந்தேன்…ஆனா, அந்த ஆன்டி உங்க அக்காம்மா!’

ilango.krishnan.1

இந்த நெட்ஃப்ளிக்ஸை ஏன் அமேசான்காரன் வாங்க மாட்டேங்கிறான்?

ஏன்... திடீர்னு இப்படி கேட்கறே?

எல்லா நல்ல வெப் சீரியஸும் படங்களும் நெட் ஃப்ளிக்ஸில்தான் இருக்கு. நம்மகிட்ட அமேசான்தான் இருக்கு. அதான் சொல்றேன்...

TheLadyBeast_

Love படம் பாத்துட்டு நமக்கு யாரும் இல்லனு பீல் பண்றதவிட, பேய் படம் பார்த்துட்டு யாரோ கூட இருக்காங்கனு பீல் பண்றது மேல்…

நெட்டில் சுட்டது
நெட்டில் சுட்டது

paranirajansathyamoorthi

இன்னிக்குத்தான் கவனிச்சேன். ஆன்லைன் கிளாஸ்ல இவளோட வீடியோவுல கண்ணுக்கு மேல மட்டும்தான் தெரியுறமாதிரி வீடியோ செட் பண்ணிருக்கா. அப்பத்தான் சாப்பாடு ஸ்நாக்ஸ்னு மிஸ்ஸுக்குத் தெரியாம சாப்பிடலாம்னு. எல்லாம் இப்டித்தான் செய்யும்க போல.

priya.meenakshi.75

வர வர மகனாரோட ஹியூமர் வேற லெவலா...

`அன்பா... பாசமா... நட்பா... காதலா... காதல் தோல்வியா... எல்லாத்துக்கும் பாட்டு இருக்குன்னு டிவில ராஜா சார் பேசிட்ருக்காரு...

`ஐயா... எல்லாம் கலந்து ஒரே பாட்டா கொடுங்க... தனித்தனியா தேடி கேட்க சிரமமாயிருக்கு'ன்னு...

அடேய்ய்...

thaamiraa

என் டைல்ஸ் கடையை பெரிசாக்க, ரொம்பத் தீவிரமாக அடுத்து மார்க்கெட்டிங்குக்கு என்ன பண்ணலாம் என்று பேடு, பேனா எடுத்து வைத்துக் கொண்டு போனில் கான்டாக்ட்ஸை உருட்டிக் கொண்டிருந்தேன். ஒருவர் வந்தார்.

‘ஏன் சார் நானே கஷ்டப்பட்டு கஸ்டமர் வரவைப்பது எப்படி என்று ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும் போது வந்து டிஸ்டர்ப் பண்றீங்க?’ என்று, மனதில் நினைத்துக் கொண்டு ஏறிட்டுப் பார்த்தேன்.

“டைல்ஸ் பார்க்கணும்!” என்றார் கஸ்டமர்!

revathy.ravikanth

அதாவது, நேத்து வச்சு மீதமான சாம்பாரையும் மீதமான ரசத்தையும் மிக்ஸ் பண்ணி கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி கொதிக்க வச்சு இறக்குறது சமையல் கலைல வராதுங்களா!?

manipmp

சூப்பர்வைசரின் கண்களை வைத்தே சிசிடிவி கேமராவை வடிவமைத்திருக்க வேண்டும்.

BEAST டீம்
BEAST டீம்

asdbharathi

பிடித்த, சரியான விஷயங்களைச் செய்வதற்கு

வயது ஒரு தடையில்லை. மீதம் இருக்கும் வாழ்நாளில் இளமைப் பருவம் இதுவே.

mrithulaM

எந்திரிக்கிறான்

ஸ்கூல் லீவுங்குறாங்க.

தூங்கிடுறான்

ரிப்பீட்டு...

kusumbuonly

`தம்பி ஸ்பீட் பிரேக் வரும், அங்க குழி இருக்கு, இங்க ஒரு சின்ன ஸ்பீட் பிரேக் வரும்... பாத்து காரு வருது, ஆடு குறுக்க வருது...' - அப்பா பின்னாடி உட்காந்துக்கிட்டு இன்ஸ்ட்ரெக்‌ஷன்...

நான் ஓட்டிக்கிட்டு போனது TVS 50.