Published:Updated:

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து தலைக் கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து தலைக் கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!

Published:Updated:
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

aruna.raj.35

மடியிலேயே உறங்கிவிட்ட மகனை படுக்கைக்கு மாற்ற முயற்சி செய்தபோது... “அம்மா ப்ளீஸ் அப்படியே உக்காருங்க. பெட்ல போடாதீங்க. என்னால திருப்பி ஃபர்ஸ்ட்ல இருந்து தூங்க முடியாது.”

dubukks

என் மகள் யுனிவர்சிட்டி போகும் முன் ஒன்றைச் சொன்னேன். உலகில் மிக ஆபத்தான ஒரு விஷயம் Addiction - ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது.

விஷப் பொருள்கள் தவிர போதைப் பொருள்கள் உட்பட எந்தப் பொருளும் உன்னை ஒரு நாளில் கொன்று விடாது - ஆனால், அவை உன்னை அடிமைப்படுத்தி விட்டால் - அவ்வளவுதான். நிதமும் அவை யில்லாமல் இருக்க முடியாது. அப்படிச் செய்யும்போது அது சர்க்கரைப் பொங்கலே ஆனாலும் கொல்லாமல் விடாது. அதனால் முக்கியமான விஷயம் - மனது வைராக்கியமாய் இருக்க வேண்டியது எதற்கும் அடிமையாகாமல் - அடிக்‌ஷன் ஆகாமல் பார்த்துக்கொள்வது.

மது, சூது, போதைப் பொருள்கள் போன்ற சில பழக்கங்கள் நம்மை அடிமைப்படுத்தும் குணமுடையவை. இங்கே நம்மை மிகக் கவனமாய் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவற்றுக்கு நம் மனதை அடிமையாகாமல் இருக்க வைப்பதே.

இவற்றையெல்லாம்விட மிகக் கொடியது ஒன்று உண்டென்றால் - பணம் - மனதின் நிலை தவறாமல், நெறி தவறாமல், அடிமையா காமல் கையாளப்பட வேண்டிய ஒரு விஷயம்.

ரம்மியில் பரிதாபமாக வீழ்ந்த ஒரு குடும்பம் பற்றிப் படித்தபோது இதுவே மனதில் மீண்டும் மீண்டும் தோன்றியது.

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

jancy.ammu

பேங்க்ல பணம் வச்சுக்கிட்டு நிக்கிறவனை விட பேனா வச்சுக்கிட்டு இருக்கறவன்தான் கெத்து.

ilango.krishnan.1

மகள் லயாவின் ஆன்லைன் வகுப்பில்…

ஸ்டூடன்ட்ஸ், இந்த கேள்விகளை எல்லாம் நோட் செய்துக்கங்க. நாளைக்கு பதில் எழுதி அனுப்பணும்.

மிஸ்... நான் ஊருக்குப் போறேன். அங்க பேப்பர் எல்லாம் கிடைக்காது.

ஓஹோ... சரி வாட்ஸப் மெசேஜ் அனுப்பு.

அங்க டவரே இருக்காது மிஸ்.

அப்படி எந்த ஊருக்குடா போறே டவரே இல்லாத கடையும் இல்லாத ஊரு.

எங்க பாட்டி ஊரு மிஸ்.

சரி... எந்த ஊரு?

தேனாம்பேட்டை மிஸ்!

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

revathy.ravikanth

புத்தாண்டை முன்னிட்டு வெளிய சாப்பிட்டுவோம்னு பார்ப்பிக்கீயூ நேஷன் போய் சாப்பிட்டு வெளிய வந்து, சரி அப்பிடியே சாப்பிட்டது ஜீரணமாகனும்னா நடக்கணும் பக்கத்துல ஷாப்பிங் மாலுக்கு போவோம்னு கார்ல ஏறின ரெண்டாவது நிமிஷம்...

ஆத்துக்கார டூட் ~ சப்வே போலாமா...

புவர் மீ ~ எதேய்?

ஆத்துக்கார டூட் ~ இல்ல ஒரு தடவையாச்சும் நான் வெளிய சாப்பிட்டுவோமான்னு கேட்டு நீ வேணாம்னு சொல்லணும்னு ஆசை... இப்ப கேட்டாதான் வேணான்னு சொல்லுவ..அதுக்குதான் கேட்டு பார்த்தேன்..!

suresh.kannan.1806

அலுவலகத்தில் ஆளில்லாத நேரத்தில் ஸொமேட்டோ வழியாக காபி வாங்குவது வழக்கம். பொதுவாக, மிகத் தாமதமாகத்தான் அது வந்து சேரும். விசாரித்தால் ஆயிரம் காரணங்களைச் சொல்வார்கள்.

ஆனால், இன்று சீக்கிரம் வந்துவிடும் என்கிற நம்பிக்கை ஆர்டர் செய்த அடுத்த நிமிடமே வந்துவிட்டது.

டெலிவரி பார்ட்னரின் பெயர் ‘அஜித்குமார்’

erodekathir

``இன்னிக்கு வேஷ்டி தினத்துக்கு ஃபோட்டோ போடலையா!?”

“இல்ல.”

“ஏன் போடல!?”

“இன்னிக்கு பேன்ட்தான் போட்டிருந்தேன்!”

“அதனால என்ன பழைய ஃபோட்டோ போட்டிருக்கலாம்ல!?”

“எதே..!”

லைக் கமென்ட் ஷேர்: சமூக வலைதள சுவாரஸ்யங்கள்!

kural.prabhakaran

நினைத்துகூட பார்க்க முடியாத மிக பெரிதான சமூக ஊடக உலகில் வாழ்கிறோம். நமக்கு முந்தைய தலைமுறையினரின் ஒட்டு மொத்த வாழ்நாளிலும் சந்தித்திட முடியாதளவு எண்ணிக்கையிலான மனிதர்களை நாம் ஒரு பதிவின் மூலமாகச் சென்றடைந்துவிடுகிறோம். இத்தனைக்குப் பிறகும் மனிதன் தனியானவன் என்பதை உணர தலைப்படுகிறோம். இத்தனை ஆயிரம் மனிதர்கள் புழங்கும் இடத்திலும் நாம் ஒன்றியில்லை. நம்மை தினமும் விசாரிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமில்லை. ‘நான் இருக்கிறேன்’ என அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொல் லிட்டுப் போங்க, ஒரு புள்ளி வைங்க நான் கோலம் போடுறேன், நம்பர் சொல்லுங்க அந்த நம்பரில் இருக்க கேள்விக்கு நான் பதில் சொல்லுறேன், வருஷமே முடியப் போவுது என்னை உங்களுக்குத் தெரியலைன்னாலும் பரவாயில்ல நாலு வார்த்தை சொல்லிட்டுப் போங்க என டைம்லைன்ல போற வர்றவங்கள பிடிச்சு கமென்ட் பாக்ஸ் இழுத்து யாருக்கோ நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக் கிறோம். நாம் சிலரை தெரிந்து கொள்கிறோம். நாம் தனியாக இல்லை என்கிற பொய்யை நம்புவதற்காக இதுபோன்ற டிரெண்டு என்கிற பெயரில் குரளி வித்தைகள் செய்கிறோம்.

என்ன செய்தாலும் வடிவேலு விரிக்க விரிக்க சுருங்கும் பாயாக நீ தனியனாவன்தான் என்கிற உண்மை முகத்தில் அறைகிறது. நவீன மனம் சிக்கலானது.

@manipmp

இதுக்கு இங்கிலீஷ்ல என்னனு கேட்டா

90 kids.

இதுக்கு தமிழ்ல என்னனு கேட்டா 2k kids.

@Kozhiyaar

மேல் இருப்பவரைப் பார்த்து மன அழுத்தமும், கீழ் இருப்பவரை பார்த்து தலைக் கனமும் வந்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது!

@NameisSoni

Negative People-லாம் Youtube விளம்பரம் மாதிரி, கொஞ்ச நேரம் பார்த்துட்டு Skip பண்ணிடுங்க.

@pachaiperumal23

திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில் இருக்கலாம்.

திருமண வைபவ தேதிகளை நிச்சயிப்பது ஊரடங்காகவே இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism