Published:Updated:

இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்!

Modi
பிரீமியம் ஸ்டோரி
Modi

விவசாய அரசியல்

இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்!

விவசாய அரசியல்

Published:Updated:
Modi
பிரீமியம் ஸ்டோரி
Modi

விவசாயிகளைப் பதற்றத்தில் வைத்திருப்பது அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. உலக நாடுகளுடனான ஒப்பந்தங்கள் நிறைவேறும் ஒவ்வொருமுறையும் `இனி என்ன ஆகுமோ...’ என்று பதைபதைப்போடு காத்திருக்கிறார் நம் விவசாயி. தற்போது, `ஆர்செப்’ (The Regional Comprehensive Economic Partnership-RCEP) ஒப்பந்தம் என்ற பெயரில் பீதியைக் கிளப்பியிருக்கிறது அரசு. இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா என 10 தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு, பிராந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட திட்டமிடப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. `இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், பல பெரும் பிரச்னைகள் ஏற்படும். நம் வாழ்வாதாரங்கள் நசுங்கும்; விலைவாசி குறையும். வெளிநாட்டுப் பொருள்கள் இங்கு குவிக்கப்படும், மருந்து விலை ஏற்றம், பால் உற்பத்தியாளர்கள் நிலை மோசமாகும். குறிப்பாக விவசாயிகள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள்’ எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஆர்செப்-க்கு எதிராக அமைச்சர்களிடம் மனு அளித்தபோது
ஆர்செப்-க்கு எதிராக அமைச்சர்களிடம் மனு அளித்தபோது

இன்றைய பல விவசாயப் பிரச்னைகளுக்கு ஊற்றுக்கண் `உலக‌ வர்த்தக ஒப்பந்தம்.’ காப்புரிமைகள், நியாயமற்ற விலை குறைவு, உழவர்களுக்கு எதிரான விதைச் சட்டம், சிறு வணிகம் மற்றும் சிறு விவசாயத்தை அழிக்கும் கொள்கைகள், மானியம் நீக்கம், பொது விநியோகம் அகற்றல் எனப் பல வடிவங்களில் நம் விவசாய வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கிறது அந்த ஒப்பந்தம். இந்த ஆர்செப், அதைவிடக் கொடுமையான ஷரத்துகள்கொண்டது. தாய்லாந்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டம் எவ்வித வெளிப்படைத் தன்மையோ, கலந்துரையாடலோ, விவாதங்களோ இல்லாமல், நாடாளுமன்றத்தில்கூடக் கொண்டு வரப்படாமல் ரகசியமாக முன்னேறியது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நாம் பெரும் சந்தையாகத் திகழவே இத்தனை அழுத்தம். இதுவரை நமது சந்தையைக் கைப்பற்ற முடியாமலிருந்த நியூசிலாந்தின் ஃபொன்டெர்ரா (Fonterra) போன்ற பால் மற்றும் பால் பொருள்கள் விற்கும் அரக்க கம்பெனிகள் இந்தியச் சந்தையைக் குறிவைத்துக் காத்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘பல ஒட்டைகளும், கவலைகளும், கேள்விகளும் நிறைந்த அந்தப் பிராந்திய விரிவான பொருளாதார உடன்படிக்கையில் இந்தியா இணையாத முடிவு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.’’

இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் உடனே அவை உள்ளே நுழைந்துவிடும். அவர்களுக்கு அந்த நாட்டில் பெரும் மானியம் உண்டு. அதனால் அவர்களால் மிகக் குறைந்த விலையில் பால் பொருள்களை இறக்குமதி செய்ய முடியும். அப்படி நடந்தால், நமது பால் வியாபாரம் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். இந்தியாவில் சுமார் 15 கோடி விவசாயக் குடும்பங்கள் பால் உற்பத்தியை நம்பியுள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஐரோப்பா போன்ற பெரும் பொருளாதார தேசங்களே நியூசிலாந்தின் பால் பொருள்களின் சந்தை ஆக்கிரமிப்பைப் பார்த்து பயப்படுகின்ற‌ன. அவற்றுக்கு எதிரான பெரும் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டங்களும் அங்கே நடை பெறுகின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்!

நம் நாட்டின் 180 மில்லியன் மெட்ரிக் டன் பால் உற்பத்தி நமக்கே சரியாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து 22 எம்.எம்.டி உற்பத்தி செய்கிறது. அதில் 19 எம்.எம்.டி பாலை ஏற்றுமதி செய்கிறது. ஆஸ்திரேலியா தன் மொத்த உற்பத்தியான 10 எம்.எம்.டியில், 60 சதவிகிதப் பாலை ஏற்றுமதி செய்கிறது. இனி இவை இந்தியாவில் வந்து கொட்டும். நமது பால் சார்ந்த பொருளாதாரம் வீழும்.

இந்த நிலையில், தாய்லாந்தில் நடந்த கடைசிச்சுற்று ஆர்செப் பேச்சுவார்த்தையில், `இந்திய அரசு கையெழுத்திடாது’ என அறிவிக்கப்பட்டது. பொருளாதாரம், வாழ்வாதாரம், சிறு விவசாயம் மற்றும் சிறு வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது எனக் காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல ஒட்டைகளும், கவலைகளும், கேள்விகளும் நிறைந்த அந்தப் பிராந்திய விரிவான பொருளாதார உடன்படிக்கையில் இந்தியா இணையாத முடிவு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது விவசாயக் குழுக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அவர்களது போராட்டங்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றி.

இந்த ஒப்பந்தம் மீண்டும் வராமலும் மற்ற புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் நமது விவசாய வாழ்வாதாரத்தை அழிக்காமலிருக்கவும் விழிப்புடன் செயல்படுவோம். மத்திய அரசைப் பாராட்டி நன்றி சொல்லும் அதே வேளையில், இந்த ஒப்பந்தங்களின் ஷரத்துகளை நாடாளுமன்றத்திலும், பொது மன்றத்திலும் விவாதிக்கவும், இதுவரை கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்களின் நிலை, பாதிப்பு என்ன என்பது பற்றிய சீரிய ஆய்வறிக்கைகள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனந்து - ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது!

ந்திய பால் கூட்டமைப்பு (Indian Dairy Association) தலைவர் ஜி.எஸ்.ரஜோரியா இது குறித்துக் கூறும்போது, ‘‘நம் நாட்டில் விவசாயம் பொய்த்துப்போனாலும், பால் உற்பத்திதான் விவசாயிகளுக்குக் கைகொடுத்துவருகிறது. சுமார் 70 சதவிகித விவசாயிகள் பால் உற்பத்தியைப் பிரதானமாகக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்துக்குப் பால் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு வேட்டு வைக்க இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிடக் கூடாது. பிரதமர், `விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு உயர வேண்டும்’ என்று சொல்லிவருகிறார்.

ரஜோரியா
ரஜோரியா

இந்தச் சமயத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து... போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் பால் விற்பனைக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட்டால், நம் விவசாயிகள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இதை நம் பிரதமருக்கும் தெரிவித்தோம். பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு அழுத்தம் தந்தனர். இந்த நிலையில்தான், `ஆர்செப் பேச்சுவார்த்தையில் இந்தியா கையெழுத்திடாது’ என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். இதை வரவேற்கிறோம். மேலும், `நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயம், பால் உற்பத்தி போன்றவற்றை பாதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் அரசு ஏற்க வேண்டாம்’ எனக் கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார் அக்கறையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism