Published:Updated:

நியூஸ் எம்பஸி!

நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி!

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

நியூஸ் எம்பஸி!

ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Published:Updated:
நியூஸ் எம்பஸி!
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி!

* ஒரு நாட்டில் திட்டங்களைக் கொண்டுவருவதற்கும், அதைத் திறம்படச் செயல்படுத்துவதற்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நவம்பர் 1-ம் தேதி சீனா தொடங்கியிருக்கிறது. பாலினம், திருமணம் ஆனவர் / ஆகாதவர், கல்வித்தகுதி, தொழில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பிரிவுகளின்படி நடக்கும் இந்தக் கணக்கெடுப்புப் பணியில், சுமார் 70 லட்சம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். செல்போன், டேப்லெட் போன்ற தொழில்நுட்ப உதவிகளுடன் நடைபெறும் இந்தக் கணக்கெடுக்கும் பணி, டிசம்பர் 10-ம் தேதி நிறை வடையும். அடுத்த வருடம் ஏப்ரலில் முழுமையான முடிவுகள் வெளியாகும். கடைசியாக 2010-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள்தொகை 133 கோடி! மக்கள் `கணக்கு’!

ராபர்ட் ஃபிஸ்க்
ராபர்ட் ஃபிஸ்க்

* மத்திய கிழக்கு நாடுகளில், புலனாய்வு ரிப்போர்ட்டிங்கில் புரட்சியை ஏற்படுத்திய பிரிட்டன் ஜர்னலிஸ்ட் ராபர்ட் ஃபிஸ்க் தன் 74 வயதில், அக்டோபர் 30 அன்று காலமானார். லெபனான் உள்நாட்டுப் போர், ஈரானியப் புரட்சி, ஈரான் - ஈராக் போர், சமீபத்திய சிரியா போர் எனப் பல முக்கியச் சம்பவங்களில் ரிப்போர்ட்டிங் செய்ததற்காகவே பிரிட்டனில் கொண்டாடப்பட்டவர் ஃபிஸ்க். மேற்கத்திய ஊடகவியலாளர்களில் வெகு சிலரே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைப் பேட்டி கண்டிருக்கிறார்கள். அவர்களில் ஃபிஸ்க் மட்டும் 1990-களில் மூன்று முறை ஒசாமாவைப் பேட்டி கண்டிருக்கிறார். பத்திரிகைத் துறையில் அவர் பெற்ற விருதுகள் பல. ஃபிஸ்க் மறைவையடுத்து பல அரசியல் பிரமுகர்களும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கிறார்கள். போர்முனைப் பேனா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நியூஸ் எம்பஸி!

* ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைநகர் வியன்னாவில் லாக்டெளனுக்கு முந்தைய இரவை சாலைகளிலுள்ள உணவகங்களிலும் பார்களிலும் மக்கள் கழித்துக்கொண்டிருந்தபோது, அந்தக் கோரச் சம்பவம் அரங்கேறியது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபரின் கண்மூடித்தனமான தாக்குதலில் நான்கு பேர் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவனைச் சுட்டுக் கொன்றனர். எனினும், அவன் அணிந்திருந்த வெடிபொருள் நிரம்பிய பெல்ட் போலீஸாரை அருகில் நெருங்கவிடாமல் தடுத்தது. பிறகு, அது போலியானது என்று நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் வேறு சில தீவிரவாதிகளும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகித்த போலீஸார், தேடலைத் தொடர்ந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், தாக்குதலை ஒரு நபர் மட்டுமே நடத்தியது தெரியவந்தது. தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்த மக்கள், அதை செல்போன்களில் படம் பிடித்திருந்தால், விசாரணைக்குத் தந்து உதவுமாறு அந்நாட்டு காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. தீர்வில்லா தீவிரவாதம்!

* மக்களின் பொருளாதாரநிலை பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இந்தோனேசியாவின் மாலி நகரிலுள்ள சுற்றுலாக் கல்வி நிறுவனம் ஒன்று, தன் மாணவர்களுக்கு வித்தியாசமான சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது. ‘மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தைப் பணமாக மட்டுமல்லாமல், தேங்காயாகவும் செலுத்தலாம்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘கட்டணத்தில் சில சலுகைகளை வழங்கலாம் அல்லது கூடுதல் கால அவகாசம் அளிக்கலாம்’ என முதலில் யோசித்த கல்வி நிறுவனம், பின்னர் தேங்காய் சிஸ்டத்துக்குத் தாவியது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியிலும் அந்தக் கல்வி நிறுவனம் ஈடுபடுவதால், மாணவர்கள் அளிக்கும் தேங்காய்களைக்கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்து அதன்மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்கிறது. நியூநார்மல் பண்டமாற்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism